Saturday, 1 February 2014

ராஜூசுந்தரத்தை மிஞ்சப்போகும் கார்த்திகா...?



செலக்டீவ்வாக படங்களை பண்ணக்கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை என்ற சில படங்களை மட்டுமே இயக்கியவர், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இப்போது புறம்போக்கு என்ற படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி என மூன்று நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கோ படம் என்னை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்லவிதமான அடையாளம் காட்டியது. முதல் படமே மெகா ஹிட்டானதோடு, பாரதிராஜாவின் அன்னக்கொடியில் மிகுந்த நம்பிக்கை வைத்து நடித்தேன். ஆனால், படம் காலைவாரி விட்டது. அதையடுத்து, டீல் என்றொரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த நிலையில், கண்ட படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தரமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்து வந்த நேரம்தான், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. வித்தியாசமான இயக்குனர் என்பதால், நம்பிக்கையுடன் கதை கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விடவும் அற்புதமான கதையாக சொன்னார். அதிலும் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமானது. இதுவரை மென்மையான பெண்ணாக நடித்து வந்த நான், இந்த படத்தில் கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

வீடியோ கேம் மூலம் பிரபலமான வீராங்கனை லாரா க்ராப்ட் போன்ற கெட்டப்பில் நடிக்கும் எனக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளது. குறிப்பாக, ஒரு பாடலில் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன். இதற்கு முன்பு தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடன மாஸ்டர் ராஜூசுந்தரம்தான் ஒரு பாடலில் அந்த நடனத்தை ஆடியிருந்தார். அதன்பிறகு தமிழில் நான்தான் ஆடுகிறேன்.

ஆக, டேப் டான்ஸ் ஆடிய முதல் தமிழ் நடிகை என்ற பெருமை எனக்கு இந்த படம் மூலம் கிடைக்கப்போகிறது என்கிறார் கார்த்திகா.

நவரச நாயகனுக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகிறது...!

பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் சரிந்த பிறகு, தெலுங்கு, இந்தியில் இருந்து சில மெகா படங்களுக்கு வில்லன்களை கொண்டு வந்தனர். ஆனபோதும், அவர்களால் தமிழில் சைன் பண்ண முடியவில்லை. அதனால் இப்போது அப்பா வேடங்களுக்கு மாஜி ஹீரோக்களை அழைத்து வருவது போன்று, வில்லனுக்கும் மாஜி ஹீரோக்களை புது எனர்ஜி கொடுத்து கொண்டு வரலாமே என்று உதித்த யோசனையின் பயனாகத்தான், தனுஷ் நடிக்கும் அனேகன் படத்திற்காக நவரச நாயகன் கார்த்திகை வில்லனாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த்.

அந்த படத்துக்காக தனது கெட்டப்பை மறுபடியும் யூத்புல்லாக மாற்றியிருக்கும் கார்த்திக், பழைய கார்த்திக்கை நினைவுபடுத்தும் வகையில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் முதன்முறையாக நான்கு கெட்டப்புகளில் நடிக்கும் அப்படத்தில், கார்த்திக்கிற்கும், தனுசுக்குமிடையே பலத்த நடிப்பு போட்டியே நடந்து கொண்டிருக்கிறதாம்.

மேலும், ஹீரோவாக நடித்து வந்த காலத்தில், நினைத்த நேரத்துக்கு ஸ்பாட்டுக்கு வருவது, திடீரென்று இதோ வருகிறேன் என்று ஓட்டம் பிடிப்பதுமாக இருந்து வந்த கார்த்திக், இப்போது முற்றிலும் புதியவராக மாறி விட்டாராம். புதுமுக நடிகர்கள் போன்று 9 மணிக்கே ஸ்பாட்டில் அஜராகி விடுபவர், 6 மணிக்கு டைரக்டர் பேக்அப் சொன்ன பிறகுதான் அவுட் போகிறாராம்.

அவரது இந்த மாற்றத்தைக் கேள்விப்பட்டு இப்போது, அஜீத்தைக் கொண்டு கெளதம்மேனன் இயக்கும் படத்திற்கும் கார்த்திக்கை வில்லனாக கமிட் பண்ணியுள்ளார்கள். அதோடு, அனேகன் படத்திற்கு அவர் காட்டும் ஆர்வம், உழைப்பைக் கேள்விப்பட்டவர்கள், அப்படின்னா, இந்த படத்திலும் அஜீத்துக்கும், கார்த்திக்குமிடையே மிகப்பெரிய பலப்பரீடசை நடக்கும் என்று கூறுபவர்கள், இதே பாணியில் போனால், வில்லன் பஞ்சம் தலைவிரித்தாடும் கோலிவுட்டில் அடுத்து முன்னணி வில்லன் நடிகராகி விடுவார் கார்த்திக் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

கல்யாணத்தை விடவும் காதல்ல இவ்வளவு சுவாரஸ்யம் இதுக்குதுங்க…

காதல் பொழுதில் விரும்பும் குறும்பு, கல்யாணத்தில் கிடைப்பதில்லை…’ என சொல்லப்படுவதுண்டு.

கல்யாணம் செய்து கொள்வதற்காகத் தான் பெரும்பாலானவர்கள் காதலிக்கிறார்கள் என்ற போதும், காதல் வாழ்க்கையே கல்யாணத்திற்குப் பிறகும் தொடர்வதில்லை. இதோ, காதலுக்கும், கல்யாணத்திற்உம் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்கள் சில…..

காதல் சண்டை….

காதல் என்பது கைகோர்த்த படி உலகைச் சுற்றி வரும் உலா…திருமணம் என்பது நடுத் தெரு என்று கூட பாராமல் போடும் சண்டை.

பார்சல் சாப்பாடு….

காதல் என்பது பிடித்த உணவகங்களில் சேர்ந்து சாப்பிடுவது மாதிரி… திருமணம் என்பது பார்சல் வாங்கி வந்து சாப்பிடுவது

சோபா….

காதல் என்பது சோபாவில் அமர்ந்து சொகுசாக படம் பார்ப்பது… திருமணம் என்பது கோபித்துக் கொண்டு அந்த இருவரில் ஒருவர் சோபாவில் படுத்துத் தூங்கத்தான் உதவும்…

குழந்தைகள்….

காதல் பொழுதுகளில் குழந்தைகளைப் பற்றி கனவு காண்பார்கள்…. திருமணத்திற்குப் பிறகோ குழந்தைகளிடமிருந்து தங்களுக்கு சிறிது தனிமை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் தவிப்பார்கள்

பசி….

காதல் பசியைக் குறைக்கும்… திருமணம் உடல் எடையைக் குறைக்கும்… (கவலைகளால்…)

டிவி யுத்தம்….

காதலுக்கு டிவி தேவையில்லை… திருமணத்திற்குப் பிறகோ டிவி ரிமோட்டிற்காக உலகப் போரே நடக்கும்….

இளநீர் தத்துவம்….

காதலில் ஒரு இளநீரில் 2 ஸ்ட்ரா… திருமணத்திற்குப் பிறகோ, ‘நீயே குடிச்சுத் தீர்த்துடலாம்னு ஆசைப்படாத…’

அவ்ளோ தாங்க….

மொத்தத்தில், காதலுக்கு கண்ணில்லை….கல்யாணம் கண்களைத் திறந்து வைக்கும் கருவி….

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்...!

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்????

பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில்
குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும்
போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள்,
பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும்
அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்???

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்!!!!!!

கால் வலியை விரட்டும் நெல்லி ரசம்..!

குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.

தேவையான பொருட்கள்:

முழு நெல்லிக்காய் 10, வெற்றிலை 20, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,  பூண்டு 6 பல், வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை: 

நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,  பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக  நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.  அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம்  வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.

இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும்  ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியிடம் ஸ்ருதிஹாசன் போட்ட கண்டிஷன்..?

இனி சென்னைக்கு நோ, ஹைதராபாத் தான் எப்போவும் ஸ்ருதி முடிவு.. எல்லாவற்றையும் எழுதும் ஸ்ருதிஹாசன் தனக்கு நடந்த ஆபரேஷன் பற்றி மூச்சுகூட விடவில்லை ட்விட்டரில்.

இது இப்படி இருக்க, ஸ்ருதி எப்போதும் தெலுங்குக்கும் இந்திக்கும் முதலிடம் கொடுக்கிறார். அவரை தமிழில் நடிக்க கூப்பிட்டதும் தனது கண்டிஷன் ஒன்றையும் ஹரியிடம் வைத்தாராம். அவரும் ஓகே என்றாராம்.

என்னவென்றால், இந்த படத்திற்காக சில நேடிவிட்டி காட்சிகளை நீங்கள் தமிழ்நாட்டில் எடுக்கிற ஊரில் எடுங்கள். ஆனால் கூடுமானவரை நான் நடிக்கிற காட்சிகளை மட்டும் ஆந்திராவில் வைத்துக் கொண்டால் நல்லது என்றாராம்.

மும்பையிலிருந்து தனது குடியிருப்பை ஐதராபாத்துக்கே மாற்றிவிடும் எண்ணத்திலும் இருக்கிறாராம் அவர். திடீரென அவர் சென்னையை வெறுத்ததற்கு என்ன காரணம் யாருக்கும் தெரியவில்லையாம்.