Saturday 1 February 2014

ராஜூசுந்தரத்தை மிஞ்சப்போகும் கார்த்திகா...?



செலக்டீவ்வாக படங்களை பண்ணக்கூடியவர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை என்ற சில படங்களை மட்டுமே இயக்கியவர், பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இப்போது புறம்போக்கு என்ற படத்தை இயக்குகிறார். ஆர்யா, ஷாம், விஜயசேதுபதி என மூன்று நடிகர்கள் நடிக்கும் இப்படத்தில் கோ பட நாயகி கார்த்திகா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், கோ படம் என்னை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நல்லவிதமான அடையாளம் காட்டியது. முதல் படமே மெகா ஹிட்டானதோடு, பாரதிராஜாவின் அன்னக்கொடியில் மிகுந்த நம்பிக்கை வைத்து நடித்தேன். ஆனால், படம் காலைவாரி விட்டது. அதையடுத்து, டீல் என்றொரு படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்த நிலையில், கண்ட படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காக, தரமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்து வந்த நேரம்தான், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் புறம்போக்கு படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. வித்தியாசமான இயக்குனர் என்பதால், நம்பிக்கையுடன் கதை கேட்டேன். நான் எதிர்பார்த்ததை விடவும் அற்புதமான கதையாக சொன்னார். அதிலும் என் கேரக்டர் ரொம்ப வித்தியாசமானது. இதுவரை மென்மையான பெண்ணாக நடித்து வந்த நான், இந்த படத்தில் கரடுமுரடான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.

வீடியோ கேம் மூலம் பிரபலமான வீராங்கனை லாரா க்ராப்ட் போன்ற கெட்டப்பில் நடிக்கும் எனக்கு ஆக்சன் காட்சிகளும் உள்ளது. குறிப்பாக, ஒரு பாடலில் டேப் டான்ஸ் ஆடியுள்ளேன். இதற்கு முன்பு தமிழில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடன மாஸ்டர் ராஜூசுந்தரம்தான் ஒரு பாடலில் அந்த நடனத்தை ஆடியிருந்தார். அதன்பிறகு தமிழில் நான்தான் ஆடுகிறேன்.

ஆக, டேப் டான்ஸ் ஆடிய முதல் தமிழ் நடிகை என்ற பெருமை எனக்கு இந்த படம் மூலம் கிடைக்கப்போகிறது என்கிறார் கார்த்திகா.

0 comments:

Post a Comment