Saturday, 1 February 2014

‘ஆனந்த மழை’யில் கலக்கப்போகும் மு.களஞ்சியம் !

ஜி.கே. அறிவுச்சோலை திரைப்பட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஆனந்த மழை’. சுப தமிழ்வாணன் இப்படத்தை இயக்குகிறார். இவர் சரண்ராஜ் நடித்த கரிசல்மண் படத்தை இயக்கியவர். ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். கணேஷ் ராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இதில் ஜெய் ஆனந்த், சுப தமிழ்வாணன், சிவா ஆகிய மூவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மு.களஞ்சியம் இரண்டு கெட்டப்புகளில் நடிக்கிறார். இரண்டு கெட்டப்புகளுக்கும் கொஞ்சம் ஒற்றுமையில்லாமல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். புதுமுக கதாநாயகிகளாக விகீதா, ஸ்ரீஜா நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, செந்தில், சிங்கமுத்து, லியாகத் அலிகான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும், சாதிப்பதற்காக எப்பவுமே சந்தோஷமாக இருக்கும் கவிஞரின் அறை தோழர்களாக, வாழ்க்கையில் விரக்தியடைந்த இரண்டு இளைஞர்கள் வந்து சேர்கிறார்கள். கவிஞரைச் சந்தித்த பின் புத்துணர்ச்சி பெற்று, புரட்சிகரமான சிந்தனைகளுடன் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அப்படித் தொடங்கும் புதிய வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் ‘ஆனந்த மழை’ படத்தின் கதை.

தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டப்படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட உள்ளது. 

0 comments:

Post a Comment