Saturday, 1 February 2014

டாப்சியும் பேட்மின்டன் வீரரும் டும்..டும்.. டும்.....?

டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

டாப்சியும் மத்தியாஸ் போயும் ஐதராபாத்தில் நடந்த இந்தியன் பேட்மின்டன் லீக் போட்டியில்தான் முதன் முதலாக சந்தித்துக் கொண்டனர். அந்த போட்டிக்கு டாப்சி விளம்பர தூதுவராக இருந்தார். மத்தியாஸ் போயின் ஆட்டம் டாப்சியை மிகவும் கவர்ந்தது. இருவரும் நண்பர்களாயினர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சுற்றினர்.

விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். அப்போது இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக பழகுகிறோம் என்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களிள் நெருக்கம் வலுவாகியுள்ளதாக பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள்.

மத்தியாஸ் போயிவுடனான தொடர்பு குறித்து டாப்சியிடம் கேட்ட போது என் சொந்த வாழ்க்கை எந்த கேள்விக்கும் பதில் அளிக்க விரும்பவில்லை என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்தார்.

 ஆனால் மத்தியாஸ் அவரது டுவிட்டரில் டாப்சியுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு என்னுடைய அழகான தோழி என்று குறிப்பிட்டு உள்ளார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் மறைமுகமாக நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

0 comments:

Post a Comment