Saturday, 1 February 2014

"அனாமிகாவில்" அடம்பிடிக்கும் நயன்தாரா!

இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடியப படம் கஹானி. இப்படத்தை தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள் இந்தியில் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்தார். ஆனால் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா கர்ப்பமாக நடிக்க தயக்கம் காட்டினாராம்.

 இதனால் இயக்குனர் சேகர் கம்முலா ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களை செய்திருக்கிறார். படத்தின் முக்கிய அம்சமே நயன்தாராவின் கேரக்டர்தான், அதில் மாற்றம் செய்ய சொல்லி நயன்தாரா குளறுபடி செய்ததால் இயக்குனர் அப்செட் ஆகிப்போனாராம்.

ஆனாலும் கேரக்டர் பாதிக்காத வகையில் அவர் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். இந்த படம் தமிழிலும் அனாமிகா என்ற பெயரிலேயே வெளியிடுவதா அல்லது பெயரை மாற்றுவதா என முடிவு செய்யப்படவில்லையாம். இன்று இப்படத்தின் டிரைலர் காட்சி ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது . 

0 comments:

Post a Comment