Saturday, 1 February 2014

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...

தேசியக்கொடி ஏற்றும் போது, அதில் பூக்கள் வைப்பது ஏன்...


நம் தேசிய கொடி மேலே ஏறி பட்டொளி வீசி பறப்பதற்கு முன், அதில் வைக்கப்பட்டுள்ள மலர்கள் கீழே வந்து விழுவதை பார்த்து நாம் கை தட்டுகிறோம்.

ஆனால் அதற்குள் மிக பெரிய ஒரு சோக சம்பவம் அடங்கி கிடக்கிறது... அது என்ன தெரியுமா....?

நமது தேசியக்கொடி மேலே ஏற, அதாவது நாம் சுதந்திரம் பெற, எண்ணற்ற தாய்மார்களின் கூந்தலில் இருந்த மலர்கள் கீழே விழுந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த கொடி மேலே ஏறும் போது, மலர்கள் கீழே விழுந்து, அதனை ஞாபகப்படுத்துகிறது.

இனி ஒவ்வொரு முறையும் நமது தேசியக்கொடி ஏற்றத்தைக் காணும் போதும், இதை உங்களது மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்று அந்த நல்ல உள்ளங்கள், தங்கள் கணவர்களை சுதந்திர போராட்டத்திற்குஅனுப்பாமல் இருந்திருந்தால், நாம் இன்று எங்கேயாவது செக்கு இழுத்துக் கொண்டு தான் இருந்திருப்போம்...!

ஒற்றுமையுடன் பெற்ற சுதந்திரத்தை
ஒற்றுமையுடன் பாதுகாப்போம்...

இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை
இரத்தம் சிந்தாமல் பாதுகாப்போம்...

நமது சுதந்திற்க்காக உயிர் தியாகம் செய்த
நமது முன்னோர்களை நினைவு கூறுவோம்..

"இந்தியனாய் பிறந்தமைக்கு பெருமை படுவோம்"

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையெனில் ஓங்கிடும் தாழ்வு.

நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை நினைவு கூறுவோம்.

தேசப்பற்றை வளர்ப்போம்! வாழ்க இந்தியா!!! வளர்க பாரதம்!!!

ஐஸ்வர்யாவுடன் ஸ்ருதிஹாசன் !

இயக்குனர் மணிரத்னம் தமிழ், தெலுங்கில் இயக்கவிருக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, பஹத் பாசில் நடிக்க உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் இப்படம் மூலம் ரீ என்ட்ரி ஆக உள்ளார். இளம் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனை மகேஷ்பாபுக்கு ஜோடியாக நடிக்க கேட்டிருக்கிறாராம் மணிரத்னம்.

இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது அவர் அதை மறுக்கவும் இல்லை ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஆனால் அவர் தனது பதிலை கூறும்போது, ஒவ்வொருவருக்கும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது கனவு. எனக்கும் அந்த கனவு உண்டு என்றார்.

ஸ்ருதியின் நெருக்கமான வட்டாரங்கள் மணிரத்னம் படத்தில் நடிக்க கேட்டு அவரது தரப்பில் அணுகினார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை புது படத்தில் நடிப்பது பற்றி ஸ்ருதி எப்போதும் வெளியே சொல்வதில்லை. தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார். நேரம் வரும்போது மணிரத்னம் படத்தில் நடிப்பது பற்றி தெரிவிப்பார் என்றனர் 

Friday, 31 January 2014

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே. வெள்ளி என்பது இருக்கும் வரை, அது பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அது மின்னிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கு, அதனை சீரான முறையில் துடைத்து பராமரிக்க வேண்டும்.

பாத்திர வடிவில் இருந்தும் சரி அல்லது அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அதனை சுத்தப்படுத்தும் வழிமுறை ஒரே மாதிரியானவை தான். அதனால் இந்த இரண்டு வகையிலும் உங்களிடம் வெள்ளி இருந்தால் அவைகளை சுத்தப்படுத்த சில அடிப்படையான பொருட்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் வெள்ளியை துடைப்பது ஒருஎன்பது சோர்வடையச் செய்யும் ஒரு வேலையாகும். அதற்கு அதிகளவில் பொறுமை தேவைப்படும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

வெள்ளி பொருட்களை சுத்தப்படுத்த மென்மையான பொருட்கள் தேவை என்பதையும் மறந்து விடக்கூடாது. கடுமையான மற்றும் திடமான பொருட்களை கொண்டு வெள்ளியை சுத்தப்படுத்த கூடாது. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். வெள்ளிப் பொருட்களை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்:

சீரான முறையில் சுத்தப்படுத்துதல்

சீரான முறையில் சுத்தப்படுத்துவது என்றால் வெள்ளி பாலிஷ் போடுவது என்று அர்த்தமில்லை. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மென்மையான துணி அல்லது மென்மையான முட்களை கொண்ட பிரஷ்ஷை கொண்டு வெள்ளிப் பொருட்களை துடைக்க வேண்டும். அப்பப்போ, வெதுவெதுப்பான சோப்பு நீரிலும் அவைகளை துடைக்கலாம். இதனால் அவைகளில் காணப்படும் கறைகள் நீங்கும். கழுவிய பின்பு மென்மையான துணியை கொண்டு ஈரத்தை துடைத்திடுங்கள்.

பேக்கிங் சோடாவின் பயன்பாடு

வெள்ளியை துடைக்க பேக்கிங் சோடாவையும் கூட பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை ஒரு கை எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடுங்கள். அது நீரில் கரையும் வரை காத்திருக்கவும். கரைந்த பின்பு, உங்கள் வெள்ளி தட்டுக்களை உலோகத்தகடு மூலம் மூடுங்கள். பின் அதனை அந்த பேக்கிங் சோடாவின் கலவையில் போட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், உலோகத்தகடை எடுத்து, வெள்ளி தட்டை மென்மையான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

ஸ்பாஞ்சை வைத்து சுத்தப்படுத்துதல்

கடுமையானதாக இல்லாத குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு வெள்ளிப் தட்டுக்களை சுத்தப்படுத்தலாம். மென்மையான ஈர ஸ்பாஞ்சை மென்மையான சோப்பில் முக்கி வெள்ளி தட்டின் மீது தேய்க்கவும். செராமிக் அல்லது கண்ணாடியை கொண்டு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் என்றால் ஸ்பாஞ்சை மிதமான சோப்பு கலந்த சுடுநீரில் நனைக்கலாம்.

மிதமான சோப்பை கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவுங்கள். பின் ஒரு மென்மையான துணியை கொண்டு தட்டை துடைத்திடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்மையான துணி பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கம்பளி கலந்த துணியை பயன்படுத்தாதீர்கள். கழுவும் போது கையுறை அணிய விரும்பினால் அவை பிளாஸ்டிக் அல்லது பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரப்பர் கையுறையை பயன்படுத்தினால் அது தட்டை பாழாக்கி விடும்.

நன்றாக பாலிஷ் செய்யுங்கள்

வெள்ளி தட்டை சுத்தப்படுத்த மற்றொரு வழியாக விளங்குகிறது வெள்ளி பாலிஷ். நல்ல பாலிஷ் மூலம் தட்டை பளபளக்க செய்யலாம். ஈர ஸ்பாஞ்சை கொண்டு துடைத்த பின்னர், தட்டின் மீது வெள்ளி பாலிஷ் க்ரீமை தடவுங்கள். இந்த க்ரீமை மென்மையான துணியை கொண்டு தடவுங்கள். தட்டை ரொம்பவும் அழுத்தி துடைக்காதீர்கள். பாலிஷை தட்டை சுற்றி மெதுவாக தடவுங்கள். பருத்தி அல்லது முட்களை கொண்ட பிரஷ்ஷை வைத்து பாலிஷை தடவலாம். பாலிஷ் செய்த பின்பு உங்கள் வெள்ளித் தட்டு பளபளப்பாக இருப்பதை நீங்கள் காணலாம்.

வெள்ளித் தட்டை கழுவ போடுவதற்கு முன் அதில் படிந்திருக்கும் உணவு கறைகளை முதலில் நீக்க வேண்டும். தட்டின் தேய்மானத்தை இது தடுக்கும். சீரான முறையில் இப்படி செய்து வந்தால் வெள்ளிப் பொருட்களை அடிக்கடி கழுவ வேண்டியதை தவிர்க்கலாம்.

வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!

இன்றைக்கு தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க வெள்ளிப் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்கு காரணம் அவற்றின் தர‌த்‌தி‌ல் குறை இல்லை. காற்று பட்டாலே வெள்ளியானது கருத்துவிடுவது இயல்புதான். எனவே வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை‌ப் எ‌வ்வாறு பாதுகா‌ப்பது எ‌‌ன்பதை அ‌றி‌‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பாலீதின் கவர்

மரப்பெட்டிக‌ளி‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை வைக்கவேண்டாம். ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். அ‌ப்படி மர‌ப்பெ‌ட்டி‌யி‌ல்தா‌ன் வை‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொருளை பா‌லி‌த்‌தீ‌ன் கவ‌ரி‌ல் போ‌ட்டு ந‌ன்கு மூடி வை‌க்கவு‌ம்.

நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செ‌ய்‌தி‌த்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொரு‌ட்களோ படும்படி வைக்க வேண்டாம்.

காற்றுப் படக்கூடாது

ஒ‌வ்வொரு முறையு‌ம் வெ‌‌ள்‌ளி நகையை பய‌ன்படு‌த்‌து‌ம் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு அதனை ந‌ன்றாக துடை‌த்து ‌பி‌ன்ன‌ர் பாதுகா‌‌ப்பாக எடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

பயன்படுத்திய வெள்ளி பொருட்களை மென்மையாக சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கழு‌வி உடனேயே காயவைத்தால் கூட போதுமானது. நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம். வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.

மங்கிப்போகும்

ஒரு சிலர் வீடுகளில் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் போன்றவைகளை உபயோகிப்பார்கள். வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும். அதேபோல் பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம் அவை நசுங்கிவிடும்.

பூஜை சாமான்கள்

 குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு போன்றவைகளை வெள்ளியில் வைத்திருப்பது வாடிக்கை. அவற்றை வாரம் ஒருமுறையாவது எடுத்து வெள்ளியை சுத்தம் செய்யும் பொருளைப் போட்டு துடைத்து சுத்தம் செய்து வைக்கவும். இல்லையெனில் அவை கருத்துவிடும்.

அசினுக்கு பாலிவுட்டில் அதிர்ச்சி !

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த அசின் கஜினி ரீமேக்கில் ஆமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க அந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து மளமளவென அசினுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவரை பார்த்து த்ரிஷா, காஜல் அகர்வால், இலியானா என தென்னிந்திய ஹீரோயின்கள் வரிசையாக பாலிவுட்டுக்கு படையெடுத்தனர். வேகமாக வளர்ந்து வந்த அசினுக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் அவர் நடித்த 3 இந்தி படங்கள் கடைசியாக திரைக்கு வந்தன.

கடந்த வருடம் முழுவதும் ஒரு படம் கூட அவருக்கு வரவில்லை. இந்த ஆண்டில் "ஆல் இஸ் வெல்" என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகள் மீது கவனம் செலுத்திவந்த பாலிவுட் ஹீரோ மற்றும் டைரக்டர்கள் மீண்டும் கேத்ரினா கைப், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட், பரினீதி சோப்ரா என சீனியர் மற்றும் இளம் நடிகைகளையே தேடிச் சென்றனர். இதனால் பாலிவுட்டை நம்பி பறந்த தென்னிந்திய ஹீரோயின்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் இயக்குனர்களால் அசின் ஓரம்கட்டப்பட்டுவிட்டாலும் விளம்பர படங்களை நம்பி அங்கேயே தங்கி இருக்கிறார். சமீபத்தில் அழகு சாதனம் பொருட்கள் நிறுவனம் ஒன்றின் தூதராக அவர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

தோல்வி என்பது அபிப்ராயம்தான் ...!

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

தமிழ் படங்களின் மீது இயக்குநர்களுக்கு திடீர் பற்று!

அதென்னமோ தெரியவில்லை இப்போது தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். இப்போது அவரையும் மீறி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று விட்டார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள்.

கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் அதாது ஆல் இன் ஆல் அழகுராஜா.

மகிழ்திருமேனி டைரக்டஷனில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு மீகாமன் என்பது டைட்டில். மீகாமன் என்றால் கப்பல் தலைவன் என்று பொருள். அதாவது கேப்டன், மாலுமி.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ஷனில் ஜீவா நடிக்கும் படத்திற்கு யான் என்ற டைட்டில். யான் என்றால் நான் என்று பொருள்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை டைரக்ட் செய்த பரதன் இப்போது காக்டெயில் மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்துள்ளார். இதற்கு அழையா விருந்தினர், அல்லது திடீர் விருந்தினர் என்று பொருள்.

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஒரு படம் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதற்கு குறோணி என்று டைட்டில் வைத்திருக்கிறார். குறோணி என்றால் அசுரன் என்று பொருளாம்.

இன்னும் நிறைய சங்கத்த தமிழ் பெயர்கள் வரப்போகிறது. வாழ்க டைரக்டர்களின் தமிழ்த் தொண்டு

மாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா..?

 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்றிலிருந்தே படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்தார்கள். தங்களுக்குள் பிரச்சினை எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

கதைப்படி சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட அவுட்லைன்.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாரா நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம் சிம்பு. அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....?