Sunday, 9 March 2014

நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா!

1930- 1990 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!

• தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

• எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

• கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

• புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

• சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

• பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

• நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

• தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

• ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

• அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

• காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

• சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

• உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

• எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

• எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

• அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

• உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

• எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

• எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

• வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

• எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

• உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

• இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்..

கோச்சடையான் விழாவில் - கவிஞர் வைரமுத்து பேசியதாவது!


ரஜினி – தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த கோச்சடையான் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் பாடல்களை வெளியிட்டார். அப்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

விழாவில் இந்தி நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப், படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனே, டைரக்டர்கள் கே.பாலசந்தர், எஸ்.பி.முத்துராமன், ஷங்கர், தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம்.சரவணன், முரளி மனோகர், ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

‘கோச்சடையான்’ தலைப்பு ஈர்ப்பானது. அதில் அழுத்தம் இருக்கும், பழமையும் இருக்கும். கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு. பல புதுமைகள் இதில் உள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 வருடம் சிம்மாசனத்தில் நகர்த்த முடியாமல் அமர்ந்திருக்கிறார். அது மிகப்பெரிய சாதனை.

அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயது உடையவரும் அவரது ரசிகனாக இருக்கிறார். 65 வயது ரசிகரும், 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல எண்ணமும் இருக்கிறது.

‘படையப்பா’ படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. ‘பாபா’ படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளது தெரிந்தது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் ரஜினி சொன்ன பதிலில் அவரது அறிவு முதிர்ச்சி வெளிப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக தமிழன் வரவேண்டும் என்கிறார்களே என்று அவரிடம் கேட்டனர். இது சிரமமான கேள்வி. நெஞ்சில் வேல் பாய்ச்சும் கேள்வி. சரியான கருத்துதானே, நாடாரோ, முதலியாரோ, பிள்ளைமாரோ வரவேண்டும் என்று சொல்லவில்லையே, தமிழன்தான் வரவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றார். அவர் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார். அவரது ‘கோச்சடையான்’ வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

படத்தின் டைரக்டர் சவுந்தர்யா விழாவில் பேசியதாவது:–

‘கோச்சடையான்’ கார்ட்டூன் படம் அல்ல. அனிமேஷன் படம் ஆகும். நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பாடல்கள் உள்ளது. அப்பாவை (ரஜினிகாந்த்) வைத்து இயக்கியது பெருமை அளிக்கிறது. அவரது ருத்ரதாண்டவ நடன காட்சியும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

‘கோச்சடையான்’ தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்பட ஆறு மொழிகளில் வெளியாகிறது. தமிழ், இந்தி படடிரெய்லர்களும் இன்று வெளியிடப்பட்டன. கோச்சடையான் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.

‘கோச்சடையான்’ பாடல் வெளியீட்டு விழாவையொட்டி சத்யம் தியேட்டர் எதிரில் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு நின்றார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ‘கோச்சடையான்’ படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றன. 3டி மோஷன் பிக்சர் தொழில்நுட்பத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

ரவிக்குமார் ... இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்க..- ரஜினி!

ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,

எனக்கு எப்பவுமே ராஜா ராணி கதை என்றாலே ரொம்பவும் பிடிக்கும். ரசிகர்களுக்காக நிறைய படங்கள் பண்ணியிருந்தால்கூட, இதுவரை ஒரு ராஜா ராணி கதை நான் பண்ணவில்லையே என்ற ஆதங்கம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது.

இதுவரைக்கும் தமிழ் சினிமால ஏன் இந்தியாவில்கூட யாருமே பண்ணாத ஒரு ராஜா ராணி படம் செய்யணும்னு முடிவு பண்ணித்தான் 'ராணா' படத்தை தொடங்க முடிவு செய்தேன். அந்தப் படத்தோட கதை எனக்குள் 20 வருஷமா ஓடிக்கொண்டு இருந்தது.

அந்தப் படம் தொடங்கின நேரத்துலதான் எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அதற்கு பிறகு என்னாச்சுன்னு உங்களுக்கே தெரியும். ஆஸ்பத்திரியில சிகிச்சை முடிஞ்சு திரும்பி வந்தாலும், இந்த கதைக்கு நிறைய உடல் உழைப்பு தேவைப்பட்டுச்சு. அப்போதைக்கு அது முடியல.

ஒருநாள் முரளி மனோகர் எனக்கு போன் செய்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவுக்கு பதிலா  'கோச்சடையான்' னு ஒரு கதை பண்ணியிருக்கிறார், கேட்டுப் பாருங்கனு சொன்னார். இப்போ பண்ண முடியாது, 2 வருஷமாவது ஆகும்னு சொன்னேன்.

நீங்க முதல்ல அதை கேளுங்க. அப்புறம் எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்னு சொன்னார். ராணாவைவிட எனக்கு கோச்சடையான் கதை ரொம்பவும் பிடிச்சது. ஆனா இதை இப்போ எப்படி பண்றதுனு கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட கேட்டேன். நீங்க சரின்னு சொன்னா வேற ஒரு ஐடியா இருக்கு.

'சுல்தான்'னு ஒரு அனிமேஷன் படத்தை செளந்தர்யா பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால இந்த கதையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துல பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு டெக்னாலஜி பத்தி தெரியாது. அதில எனக்கு நம்பிக்கை வேற இல்லை.

இந்த படத்தை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பேரிடம் கருத்து கேட்டேன். இந்தப் படம் பண்றதுக்கு 5, 6 வருஷமாகும். 700 கோடியாகும்னு சொன்னாங்க. அவ்வளவு செலவு எல்லாம் ஆகாது. நம்மோட பட்ஜெட்லயே பண்ண முடியும்னு அவங்க சொன்னாங்க.

உடனே செளந்தர்யாகிட்ட பேசினேன். இந்த படத்துக்காக உனக்கு பெரிய பொறுப்பு இருக்கும். பண்ண முடியுமான்னு கேட்டேன். அவங்க உடனே நான் பண்ணி காட்றேன்னு சொன்னாங்க. இந்த படம் இந்தளவிற்கு வந்ததிற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த ஊக்கம் தான்.

நான் படம் பாத்துட்டேன். இப்போ 3டி பணிகள் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த படம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்னு எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு.

செளந்தர்யா, ஐஸ்வர்யா இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் படம் இயக்குறாங்க அப்படின்னா அதற்கு தனுஷ், அஸ்வின் மற்றும் அவங்களோட குடும்பத்தினர்தான் காரணம். அவங்களோட குழந்தையா நினைச்சு, ஊக்குவிக்கிறாங்க. அவங்களுக்கு தான் நான் நன்றி சொல்லணும். இன்னும் ஐஸ்வர்யா, செளந்தர்யா நிறைய படங்கள் பண்ணனும்.

குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் மட்டுமே நல்ல குடிமக்களை உருவாக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. குழந்தைகளுக்கு 10, 12 வயசு வருகிற வரைக்கும் நல்லபடியா அவங்களை வளர்க்கணும். அதற்கு பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த படம் வந்த பிறகு நிறைய பேர் இயக்கச் சொல்லி கேட்பாங்க. 2 குழந்தைகளை பெற்று என்கிட்ட கொடுத்துட்டு அதற்கு பிறகு நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்க அப்படிங்கிறது எனது கருத்து.

செளந்தர்யாவை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க முதல்ல ஆக்‌ஷன் அப்படினு சொன்னப்போ எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. அப்புறம் ரவிக்குமார் சார் நீங்க வாங்க. இவரு ஆக்‌ஷன் எல்லாம் சொல்லட்டும், நீங்க கட் மட்டும் சொல்லுங்கனு சொன்னேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

நடிகையின் சகோதரர் காலமானார்!

பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லாவின் சகோதரர் பாபி சாவ்லா, மும்பையில் உள்ள மரு்துவமனையில் இன்று ( மார்ச் 09) காலமானார்.


இவர் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கோமாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


ஜூகி சாவ்லாவிற்கு மிகவும் பிரியமான சகோதரரான பாபியின் மரணம் குறித்து டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள ஜூகி, கடவுள் எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு எனது சகோதரர் என குறிப்பிட்டுள்ளார்.


 ஜூகி சாவ்லாவின் சக நடிகர்களான மாதுரி தீட்சித், ஷாருக்கான், இயக்குனர் ஃபருக் கான் ஆகியோரும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.


பாபி சாவ்லா, ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டைன்மைட் நிறுவத்தின் சிஇஓ., வாக இருந்தவர். ஜூகி சாவ்லாவின் பெரும்பாலான பேட்டிகளின் போது பாபி சாவ்லாவும் உடன் இருந்துள்ளார். 

விஜய் - தனுஷு - சிம்பு - கூட்டாளிகளாம்!

விஜய் மற்றும் தனுஷுடன் சிம்பு இரவு பொழுதை மகிழ்ச்சியாக கழித்துள்ளார். தனுஷும், சிம்புவும் இனி பரம எதிரிகள் கிடையாது.


ஒருவரை பார்த்தால் மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொள்ள மாட்டார்கள். இனி அவர்கள் நண்பேன்டா. இந்நிலையில் சிம்பு நண்பன் தனுஷ் மற்றும் விஜய்யுடன் இரவு பொழுதை கழித்துள்ளார். இது குறித்து சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


என்ன ஒரு இரவு, விஜய் அண்ணா மற்றும் தனுஷுக்கு நன்றி என்று ட்விட்டரில் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்


பரம எதிரிகள் நெருங்கிய நண்பர்களாக முடியும் என்றால் அது நானும், தனுஷும் தான் என்று தெரிவித்து சிம்பு ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார்.


தனுஷ் இளையதளபதி விஜய்யை சந்தித்து அவருடன் ஆடிப் பாடி மகிழ்ந்ததுடன் கிசுகிசுக்கள் பற்றி பேசியதாகவும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.


உக்ரம் கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்ய தனுஷும், விஜய்யும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி நீங்கள் உங்கள் அம்மாவின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தலாம் ?

தன் குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக ஒரு தாய் செய்யும் சேவைகளுக்கு ஈடு இணையே கிடையாது. காலையில் எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை தாயானவள் தன் குடும்பத்துக்காக தன்னையே அர்பணிக்கிறாள். ஒரு தாய் தன் பிள்ளைகளையும், கணவனையும் எப்போதுமே கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாலும், அவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரத்தை கொடுப்பதில்லை.

நம் தாய் தானே என்ற உரிமை இருப்பதால், அவர்களின் மீது பெரிதாக நாம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதில்லை. ஆகவே சிறிது நேரம் எடுத்து கொண்டு தாயை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டுங்கள். அவர்கள் செய்வதை எல்லாம் மனதில் வைத்து கொண்டு, நன்றி பாராட்ட மறக்காதீர்கள். இத்தகைய அன்னையை மகிழ்விக்கவும் , ஆச்சரியப்படுத்தவும் சில வழிகள் உள்ளன.

01-ரகசியமான பரிசு

தாய் காலை எழுவதற்கு முன், விடியற்காலையே எழுந்து தாய்க்கு அருகில் ஒரு சின்ன பரிசை வைக்கலாம். இதனால் அவர் எழுந்து பார்க்கும் போது, அது அவருக்கு ஆச்சரியமான சந்தோஷத்தை கொடுக்கும். அது ஒரு சின்ன கவரிங் மோதிரம் அல்லது ஒரு சின்ன கப் கேக் அல்லது ஒரு புகைப்பட ஃப்ரேம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பை வெளிக்காட்டுவது மட்டும் முக்கியமே தவி,ர விலை ஒரு பொருட்டு இல்லை
ஒரு பாட்டு அல்லது கவிதை

தாயின் மேல் வைத்திருக்கும் அன்பை சிறு வார்த்தைகளாக எழுத பெரிய கவிஞராகவோ, புலவராகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குடும்ப நிகழ்ச்சியில் அல்லது வீட்டில் குடும்பத்தாருடன் உணவருந்தும் போது, திடீரென்று எழுதிய கவிதையை அவர் முன் உரக்கப் படித்து காட்டி, அவர் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டலாம். உரக்க படிக்க கூச்சமாக இருந்தால், எழுத்து வடிவில் அவர்களுக்கு கொடுக்கலாம்.

02-பேஸ்புக்

பேஸ்புக் நண்பர்களின் பட்டியலில் தாயை சேர்க்கவில்லை என்றால் வாழ்க்கையில் இருந்து அவரை பிரித்து பார்க்கிறீர்கள் என்ற எண்ணம் அவருக்கு தோன்றலாம். நீங்கள் குழந்தையாக இருக்கும் போது, உங்கள் ஜட்டியை மாற்ற உங்கள் தாய் யோசித்தாரா? அல்லது பல பேர் முன்னிலையில் குழந்தை பருவத்தில் அவரை அடிக்கும் போது அதற்காக அவர் சங்கடப்பட்டாரா? யோசித்துப் பாருங்கள். அதனால் ஃபேஸ்புக் மூலம் அவருடன் உரையாடி, அவருக்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.

03-சமையல்

தினமும் முகம் சுழிக்காமல் சமைப்பவர் தான் அன்னை. அப்படிப்பட்ட அவருக்கு ஒரு மாலை வேளையில் ஓய்வு கொடுத்து ,அவருக்காக நல்ல ருசியான உணவை சமைத்து கொடுத்தால், அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமையும்.

04-சுற்றுலா

வார இறுதியில் ஒரு சின்ன சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து அழைத்து சென்றால், அது அவருக்கு மகிழ்ச்சியை அளித்து, தினசரி பார்க்கும் வேலையில் இருந்து ஒரு மாறுதல் கிடைக்கும். உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை எடுத்துக் கொண்டு உரையாடிக் கொண்டே சுற்றுலாவை கொண்டாடுங்கள். மேலும் காரில் இசையை ஒலிக்கச் செய்து, அவரை ஒரு இளவட்டம் போல் மாற்றுங்கள்.

05-திரைப்படம்

பள்ளி பருவத்திலும், வாலிப வயதிலும் கண்டு களித்த படங்களை திரும்பி அவருடன் சேர்ந்து பார்த்தோமானால், அவருடைய பழைய நினைவுகள் திரும்பி மகிழ்ச்சி அடைவார் இல்லையா? அந்த நினைவுகளுக்கு அவரை எடுத்துச் செல்ல, அவர்களுக்கு பிடித்த படங்களை வாங்கி பாருங்கள். அவருடன் சேர்ந்து படங்களை பார்த்தால், அவர் மீது இருக்கும் அக்கறையை எடுத்துச் சொல்லும்.

06-ஷாப்பிங்

பரிசளிப்பது ஒரு இன்பம் என்றால் அவரை கடைக்கு அழைத்து சென்று அவருடன் பொழுதை கழிப்பது இன்னொரு வகையான இன்பம். அதிலும் தாயை குழந்தை போல் பாவித்து, எது பிடிக்கும் பிடிக்காதென்று கேட்டு கடை வீதியில் சுற்றுங்கள். இந்த நாள் கண்டிப்பாக விலை மதிப்பில்லா நாளாக அமைவது உறுதி. மேலும் இது அன்பை வெளிக்காட்டும் வழியாகவும் அமையும்.

07-குளியல் அறை

எந்த தாய்க்கு தான் குளியலறை அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்களை மணக்க செய்தால் பிடிக்காமல் போகும். எனவே தாயின் ரசனைக்கேற்ப அவருடைய குளியலறையை அலங்காரம் செய்யுங்கள். குளிக்கும் டப்பில் நுரை நிறைந்த தண்ணீரை நிரப்பி அமைதியான பாட்டை இசைக்க செய்யுங்கள்.

08-பெடிக்யூர்

வீட்டிலேயே பெடிக்யூர் (கால்களுக்கான மசாஜ்) மற்றும் தலை மசாஜ் போன்றவற்றை செய்துவிட்டால், அவருடன் அலுப்புத் தட்டாமல் நேரத்தை செலவழிக்கும் ஒரு வழியாக இது அமையும். தாயை அழகு நிலையங்களுக்கு செல்லவிடாமல், நீங்களே இந்த பணியை செய்யவும். அவரின் நகத்திற்கு நெயில் பாலிஷ் பூசுங்கள், பாதத்தில் அழுக்கெடுங்கள் அல்லது தலை மசாஜ் செய்யுங்கள். இது அவருடைய மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

09-செல்லப்பிராணி

இன்றைய வாழ்க்கை முறையில் விட்டில் அனைவரும் வேலைக்கு செல்கின்றனர். அதனால் அன்னை தனிமையில் வாடுவது உறுதி. எனவே தாய்க்கு துணையாக பூனை குட்டி, நாய் குட்டி அல்லது பறவைகளை பரிசளியுங்கள். இது அவரின் தனிமையை போக்கும் விதமாக எடுத்துக் கொள்வதோடு, அவர்கள் மீது அக்கறை காட்டும் விதமாகவும் இருக்கும். குறிப்பாக தாய்க்கு செல்லப் பிராணிகளை பிடித்தால் மட்டுமே, இந்த வழியை கையாள வேண்டும்.

உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!

சிலர் எப்போது பார்த்தாலும், ஒருவித டென்சனுடன் காணப்படுவார்கள். அத்தகைய டென்சன் ஏற்படும் போது, அதனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளைக் கையாள்வார்கள். சிலர் உணவுகள், பானங்கள் சாப்பிடுவது,


வெளியே செல்வது என்பனவற்றை மேற்கொள்வார்கள். சிலர் நறுமணங்கள் மூலம் சரிசெய்வார்கள். அந்த ஒரு பிரச்சனையால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளால் பலர்


பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகையவற்றிற்கு ஒருவகையான தீர்வு என்னவென்று பார்த்தால், அது ஒருசிலப் பொருட்களின் நறுமணங்கள் தான். மேலும் அனைத்து நறுமணங்களும் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்ல


முடியாது. உதாரணமாக, பெட்ரோல் வாசனை சிலருக்கு பிடிக்கும், சிலர் அதனை வெறுப்பார்கள். ஆனால் ஒருசில பொருட்களின் வாசனையை பிடிக்காது என்று யாரும் சொல்லமுடியாது. அவ்வாறு உள்ள பொருட்களின் வாசனை,


சோர்வு, மயக்கம், மனஅழுத்தம், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், தெளிவற்ற மனம் போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்யும்.