Thursday, 23 January 2014

2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டு செல்லாது

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த  முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.

2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.

வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி இவ்வாறு புழக்கத்தில் உள்ள பணத்தை மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறைப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது.சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர்.

அதுமட்டுமின்றி, 25 பைசா மதிப்புக்கு எந்த பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவானது. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டு வந்து மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

*  2005க்கு முன்பு வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுகளும் 2014 மார்ச் 31க்கு பிறகு வாபஸ்.
*  கருப்பு பணம், கள்ளநோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
*  ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
*  பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
*  ஜூலை 1ம் தேதி முதல் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது, 10 நோட்டுகளுக்கு மேல் இருந்தால் அடையாளம், முகவரி ஆதாரம் தர        வேண்டும்.
*  புதிய ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால், போலி நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாது.
*  இப்போது, 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

சருமத்திற்கு தேவையான பேஷியலின் வகைகள்!

பெண்கள் மணமாகி பிள்ளை பெற்றதும் உடலில் காட்டும் கவனத்தை குறைத்து விடுகின்றனர். இதனால் அழகும், பொலிவும் தொய்ந்து போகும் முகத்திற்கு பயிற்சி வேண்டாமா? இவ்வாறு முகத்திற்கு அளிக்கப்படும் பயிற்சியே பேஷியல் என்றழைக்கப்படுகிறது. இல்லத்தரசிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் 25 வயது முதல் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பத்தினாலும், தூசியினாலும் பாதிக்கப்படும் முகத்தின் சருமத்தை மாதமொருமுறை பேஷியல் செய்ய வேண்டியது அவசியம். முதலில் பேஷியல் செய்வதற்கு முன்பு என்னென்ன பேஷியலில் பல வகைகள் உள்ளன எந்த எந்த சருமத்தற்கு எந்த வகையான பேஷியல் செய்வது என தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் மட்டுமே பேஷியல் செய்ய வேண்டும்.

இதில் பல வகை உண்டு. இவை ஒவ்வொன்றிற்கும் விதவிதமான பலன்கள் உள்ளன. பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், உலர்ந்த பழங்களை கொண்டு செய்யும் பேஷியல், ஹெர்பல் பேஷியல், கால்வானிக் பேஷியல், பேர்ல் பேஷியல், கோல்டு பேஷியல், அரோமா பேஷியல் என பல வகை உண்டு.

கோல்டன் பேஷியல்

இம்முறை பேஷியல் செய்வதால் சூரிய வெப்பத்தினால் சருமம் நிறும் மாறுவது, முகத்தில் ஏற்படும் கறுப்பு திட்டுகள், சுருக்கங்கள் நீக்கப்படும். இதில் முதலில் ஷாதானியம், முட்டை, பன்னீர், முதலிய கலவையை முகத்தில் 10 நிமிடம் தடவ வேண்டும். பிறது அதன் மேல் பால் தெளித்து மெதுவாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு கோல்ட்ஜெல் (அழகு சாதனங்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்) தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு முகத்தினை துடைத்து கோல்ட் பாக் தடவி கண்களை சுற்றி ஷாவீட் என்ற லோஷனை தடவ வேண்டும். கண்களின் மேல் குளிர்ச்சியான பன்னீரை காட்டனில் நனைத்து வைக்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து துடைத்துவிட்டு ஷா பேஸ் என்ற க்ரீம் தடவ வேண்டும். இதுவே கோல்டன் பேஷியல். இது நன்றாக மாநிலம் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

பேர்ல் பேஷியல்

மிகவும் கறுப்பான நிறம் உள்ளவர்களுக்கு இம்முறை நல்ல பலன் தரும். இதற்கு கோல்டன் பேஷியல் அளவிற்குச் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. பேர்ல் பேஷியல் கிட் என்று கேட்டால் கடைகளில் கிடைக்கும். அதில் நான்கு வகையாக கிரீம்கள் உள்ளன. அம்முறைபடி செய்தால் முக பொலிவாக மாறும்.

கால்வானிக் பேஷியல்
உலர்ந்த சருமம் மற்றும் பருக்கள் அதிகம் உள்ளவர்களுக்கு இம்முறையில் பேஷியல் செய்வது நல்லது. மிஷினின் உதவியுடன் மசாஜ் செய்யப்படும் இம்முறையில் கறுப்புத்திட்டுகள் டபுள்ஸ்கின், தொங்கு கழுத்துச்சதை முதலியவை நீங்கும்.

பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு!

சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு -ஸ்மித்சோனியன் வான் இயற்பியல் மையத்தைச் சேர்ந்த, டேவிட் கிபிங் கூறியதாவது:

மற்றொரு சூரிய மண்டலத்தில், 200 ஒளி ஆண்டு, தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இந்த புதிய கிரகம், பூமியை விட, 60 மடங்கு பெரிதானது. இதில் அடர்ந்த வாயுக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வின், கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில், இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'கே.ஓ.ஐ.-314' என, பெயரிடப்பட்ட இந்த கிரகத்தின் வெப்பநிலை, 104 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது.

இளநரைக்கு எண்ணெய் குளியல்


சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன் றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும்.  சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது. இளநரைக்கு எளிய முறையில் வீட்டில் இருந்தபடியே  தீர்வு காணலாம். இளநரை உள்ளவர்கள் மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன், நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதெல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள். இதை மேலே  குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு  இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 1 மணிநேரம் ஊறவைத்து குளிக்கவும்.

இந்த கலவையை தொடர்ந்து வாரம் ஒருமுறை போட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். வாரம் இருமுறை நல்லெண்ணை தேய்த்து  எண்ணெய் குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம். இது உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை  தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வராமல் இருக்கும்.

செடிக்கு எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நிறைய எண்ணெய் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை  குளித்தால் முடியும் வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும். முடி செம்பட்டையாகாமல் இருக்கும் கருவேப்பிலை பொடி, கறிவேப்பிலையை உணவு  அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும். நரைமுடி வருவதையும் தவிர்க்கலாம்.

சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை!


சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளதாக கூறப்படும் சிவாஜிகணேசன் சிலையை அகற்ற வேண்டும். இதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இது சிவாஜி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவாஜி கணேசனின் மகன்களான தயாரிப்பாளர் ராம்குமார்- நடிகர் பிரபு இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை அரசின் முடிவிற்கே விட்டுள்ளது. இதுதொடர்பாக, அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையில் லட்சக்கணக்கான சிவாஜி ரசிகர்களும், நண்பர்களும், அப்பா மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருப்போரும் அதுவரை அமைதி காக்கும்படி எங்கள் சார்பாகவும், நடிகர் திலகம் குடும்பத்தார் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.