கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2005ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.
2005ம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்படாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை.
வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம். வரும் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு 10க்கும் அதிகமான ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றுபவர்கள், தங்களது அடை யாள சான்று, இருப்பிடச்சான்றுடன், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து மாற்றிக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி இவ்வாறு புழக்கத்தில் உள்ள பணத்தை மாற்றுவதும், வடிவத்தை மாற்றி அமைப்பதும் புதிதல்ல. 2011ம் ஆண்டு 25 பைசா நாணயங்கள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறைப்பாக 25 பைசா நாணயங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பின்றி போய்விட்டது.சில கடைக்காரர்களும் அதை வாங்க மறுத்துவிட்டனர்.
அதுமட்டுமின்றி, 25 பைசா மதிப்புக்கு எந்த பொருளுமே கிடைக்காது என்ற நிலை உருவானது. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது.இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மூட்டை மூட்டையாக நாணயங்களை கொண்டு வந்து மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* 2005க்கு முன்பு வெளியிட்ட எல்லா ரூபாய் நோட்டுகளும் 2014 மார்ச் 31க்கு பிறகு வாபஸ்.
* கருப்பு பணம், கள்ளநோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
* ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிகளில் இந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
* பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். மாற்றத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
* ஜூலை 1ம் தேதி முதல் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது, 10 நோட்டுகளுக்கு மேல் இருந்தால் அடையாளம், முகவரி ஆதாரம் தர வேண்டும்.
* புதிய ரூபாய் நோட்டுகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால், போலி நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாது.
* இப்போது, 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

0 comments:
Post a Comment