வீட்டில் 2 குப்பைத் தொட்டிகள் அவசியம்!!
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு குப்பைத் தொட்டிகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தற்போது மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என்று பிரிப்பது குறித்து நாங்கள் பேசவில்லை.
அதாவது, உலர்ந்த குப்பைகளை கொட்டவும், வீட்டில் உள்ளவர்கள் தங்களால் ஒதுக்கப்படும் குப்பைகளைப் போடவும் ஒரு குப்பைத் தொட்டி வீட்டில் துடைப்பம் போன்றவை வைக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
இதில் காகிதம், தூசு போன்றவற்றையும், வீட்டைப் பெருக்கினால் வரும் குப்பையையும் கொட்டி வைக்கலாம்.
ஆனால், வீட்டின் சமையலறையில் தனியாக ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டியது அவசியம். அதில் சமையலறையில் வரும் குப்பைகளைப் போட்டு வைக்கலாம். இவை ஈரத்துடன் இருக்கும். இவற்றையும் மற்றக் குப்பைகளுடன் போட்டு வந்தால் வீடே நாற்றம் எடுக்கும்.
மேலும், சமையலறைக் குப்பைகளை தினமும் அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதனை ஒரு அட்டை போட்டு மூடி வைத்தால் கொசுத் தொல்லை இருக்காது.
0 comments:
Post a Comment