Thursday, 6 February 2014

கோச்சடையான் Vs தெனாலிராமன்

 ஏப்ரல் 11ம் தேதி ரஜினியின் 'கோச்சடையான்' படத்தோடு வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் வெளியாகவிருக்கிறது.

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘கோச்சடையான்’ பல்வேறு மொழிகளில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகிறது. ரஜினியோடு தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட் டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். செளந்தர்யா இயக்கியிருக்கிறார்.

ஏற்கனவே ஏப்ரல் 11ம் தேதி சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மான் கராத்தே' மற்றும் விஷால் நடித்துவரும் 'நான் சிகப்பு மனிதன்' உள்ளிட்ட படங்களும் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் வெளிவருவது உறுதியாகி இருக்கிறது.

வடிவேலுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் "சித்திரை திங்கள் "ஜெகஜால புஜபல தெனாலிராமன்" பராக்... பராக்... பராக்...!" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீண்டநாட்கள் கழித்து வடிவேலு நடித்து வருவதால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது 'கோச்சடையான்' படத்துடன் 'தெனாலிராமன்' படமும் வெளிவருவதால் விநியோகஸ்தர்கள் கடும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

'தெனாலிராமன்' படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் மொத்த பணிகளும் முடிந்துவிடும். இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீடு நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment