Friday, 7 March 2014

இளையதளபதியும் ஆஸ்கர் நாயகனும்!

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கவுள்ள படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகக் கிசுகிசுக்கள் பரவிவருகின்றன.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் -சமந்தா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புக்கள் மின்னல் வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்திற்கு தீரன் அல்லது வாள் எனத் தலைப்பிடப்படலாம் என்றும் கூறப்பட்டுவருகிறது.


இப்படத்தினை வருகிற தீபாவளிக்கு வெளியிட படக்குழு மிகவும் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது. ஆகஸ்ட் மாதத்திற்குள் படப்பிடிப்பினை நிறைவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துவருகிறார்.


ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்குப் பிறகு விஜய் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் பர்சனல் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் தயாரிக்கவுள்ள இப்படம் விஜயின் 58 ஆவது படமாகும்.


 இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கலாம் என்று கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இச்செய்தி உண்மைதானா என்று ரசிகர்கள் பரபரத்துவருகின்றனர். விரைவில் இச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்துப் படக்குழு விளக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய் - ஸ்ரேயா நடிப்பில் கடந்த 2007 ல் வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment