Tuesday, 4 February 2014

யாளி..?

யாளி

யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது. யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோ...யில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

 தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்:

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன.


இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்:

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

(௧) சிம்ம யாளி

(௨) மகர யாளி

(௩) யானை யாளி

கண்ணீரும் கதைசொல்லும்!

கண்ணீரும் கதைசொல்லும்!

அழுங்கள்! உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம்மால் நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே அறிவியல் உண்மையாகவும் இருக்கிறது. அழுவதால் உடலுக்கு நன்மைகளே அதிகம். மாறாக அழுகையை அடக்கிவைத்தல், உணர்ச்சிகளை அழுகையின் மூலம் வெளிக்காட்டாது மறைத்தல் போன்ற செயல்களால் உடலுக்கு நேரும் தீங்குகள் ஏராளம். துன்பங்கள் நேர்கையில் நம் கண்ணீர், கண்களிலிருந்து ஆறாக ஓடாமல் தடுக்கப்படும்போது நம் உடலானது கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது ஏராளமான நச்சு ஹோர்மோன்களைத்(மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பது) தோற்றுவிக்கிறது. இதனால் உடல் நோய்வாய்ப்படுதல், உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

கண்ணீரின் வகைகள்:

பிரதிபலிப்புக் கண்ணீர்:- 

இது கண்களுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால் (உதாரணமாக தூசி, அழுக்கான சிறு துணிக்கைகள்) மற்றும் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுக்கள் அல்லது அமிலங்கள் (வெங்காயம், கண்ணீர்ப் புகை) கண்களில் புகுந்துவிட்டால், தானாகவே சுரந்து கண்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறது.

உணர்வெழுச்சிக் கண்ணீர்:-

இக்கண்ணீரானது மனிதனின் உளவியல் ரீதியான தாக்கங்களின்போது(கவலை, துன்பம்,ஆனந்தம்) வெளிப்படுவது. இது உலகிலுள்ள அத்தனை மனிதருக்கும் பொதுவானது என்று கருதப்படுகிறது.

கழுவும் கண்ணீர்:- 

இது பிறப்பிலிருந்து இறப்புவரை எம் கண்களை ஈரத் தன்மையுள்ளதாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு ஒரு திரவம் நம் கண்ணில் சேவை புரிந்துகொண்டிருப்பது, நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உணர வேண்டுமெனில் ஈரமில்லாத, சுத்தமான விரலால் கண்களில் தொட்டுப் பார்த்து(பிசுபிசுப்பை) அறிய முடியும்.

அழுகையில்:

நாம் சிரிக்கும்போது எவ்வளவு சக்தியைச் செலவு செய்கிறோமோ(நிமிடத்திற்கு 1,3 கலோரிகள்) அதேயளவு சக்தியை, அழும்போதும் செலவு செய்கிறோம். அழுவதை விட சிரிப்பது உடலுக்குச் சிறந்தது என்று யார் சொன்னது?

கண்களில் 'பீளை' உருவாகுதல், அழுததால் கண்கள் வீங்குதல், கண்கள் சிவத்தல் எல்லாமே கண்கள் தம்மைக் காத்துக்கொள்ள, தாமாகவே(automatic) எடுக்கும் முயற்சியாகும்.
அழுகை மட்டும் இல்லாது போயிருந்தால், தன் கைக்குழந்தைக்குப் பசி எடுப்பதைத் தாயால் எப்படி உணர முடியும்?

நாம் துன்ப, துயரமான சூழ்நிலைகளில் அழாமல் அடக்கி வைக்கும்போது எங்கள் உடலானது, கூடிய விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது, நாம் கவலையடையும்போது எமது உடலானது அதிக அளவில் அழுத்த, நச்சுக் ஹோர்மோன்களை உற்பத்தி செய்கிறது, நாம் அழும்போது இக் ஹோர்மோன்கள் உடலிலிருந்து கண்ணீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றது. இவ்வாறு அழாமல் தேக்கி வைக்கும் ஹோர்மோன்கள் உடலுக்கு ஆபத்தானவையாகும். இவை மன அழுத்தம், பலவித வாத, நரம்பு நோய்கள், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:-

 பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- 

வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- 

கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- 

கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:-

ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- 

மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:-

 வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- 

தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:-

 பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- 

கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்!

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத
தகவல்களும்

1. உலகத்தின் 97.2% தன்ணீர்
உப்புத்தண்ணீர்
என்பது உங்களுக்கு தெரியுமா?

2. சூரியன் வெளிச்சம்
பூமிக்கு வந்தடைய 8.30
நிமிஷங்கள் ஆகின்றன.

3. கோகோ கோலாவின் ஒரிஜினல்
பாட்டிலின்
கலர் பச்சை.

4. மனித வயிற்றில் இருக்கும்
பெரும் பாகங்களை எடுத்துவிட்டால்
கூட உயிர் வாழலாம்.

உதாரணத்திற்க்கு ஒரு லங்க்ஸ் /
ஒரு கிட்னி, ஸ்ப்ளீன், 75% லீவர், 80
இன்டன்ஸடைன், இவையெல்லாம்
எடுத்தால் எத்தனை வருடம்
வேண்டுமானாலும் உயிர் வாழலாம்.

5. பட்டுபூச்சிக்கு 11 மூளைகள்.
அட்டைப்பூச்சிக்கு 32 மூளைகள்.

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை!

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும்.

 இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்

'மாலிபவுல்' - விநோதமான பறவை!

ஆஸ்திரேலியாவின் 'மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப விநோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடி வைத்து விட்டு சென்று விடும்.

குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன. இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய் பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி.

இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது..?

நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது

நம் பூமியில் கிடைக்கும் தங்கமானது ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும்,

காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர்.

2 பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.