Tuesday, 11 February 2014

குளிர்காலத்தில் ஏற்படும் வறண்ட தலைமுடிக்கான சில பராமரிப்பு டிப்ஸ்…

குளிர்காலம் என்றாலே குளிர்ந்த காற்றும் மிதமான பனிபொழிவும் தான் நினைவிற்கு வரும். இவை இனிமையாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சரும பதிப்புகள் நம்மை வருத்தப்படச் செய்யும். அதனால், இந்த குளிர்காலங்களில் நமது உடல்நல மற்றும் சரும பராமரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் குளிர்காலங்களில் ஏற்படும் சரும மற்றும் உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மீண்டும் இந்த வருடத்திற்கான குளிர்காலத்தை வரவேற்க தயாராகுங்கள். குளிர்காலம் இனிமையாக இருந்தாலும் இது பிரச்சனைகளுக்கான காலமும் கூட. இந்த காலத்தில் உங்கள் சருமமும் தலைமுடியும் வறண்டு போய்விடுவதால், அவற்றின் பராமரிப்பு தவிர்க்க முடியாத ஒன்று. குளிர்காலத்தை கண்டு பயம் கொள்ளுபவர்கள் பலர் உண்டு. குளிர்காலங்களில் வீசும் குளிர்ந்த காற்றை நீங்கள் ரசிப்பவராக இருக்கலாம். ஆனால், அது உங்கள் தலைமுடியை பாதிக்கக்கூடும் என்பது உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத உண்மை.

டிசம்பர் மாதமே வருக வருகவே! உங்கள் விலை உயர்ந்த உடை அலமாரியில் இருக்கும் ஸ்வெட்டர் மற்றும் ஸ்கார்ப்களை எடுப்பதற்கான நேரம் இதுதான். இவை அனைத்தும் உண்மை என்றால், குளிர்காலங்கள் உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்யும் என்பதும் உண்மைதான். குளிர்காலத்தில் தட்பவெட்ப நிலைகளில் வேறுபாடு ஏற்படுவது பொதுவான ஒன்றாகும்.

இதுவே உங்கள் தலை முடி வறண்டு போவதற்கான காரணமாகும். காலங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை அதனால் அதன் நிலைகளுக்கு ஏற்றவாறு இணங்க வேண்டும். ஒவ்வொரு காலங்களும் உங்கள் சருமத்திலும், தலைமுடியிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். குளிர்கால மாதங்கள் உங்கள் தலைமுடியை வறண்டு போகச் செய்து, அதில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்துவிடும். தலைமுடி மற்றும் தலைச் சருமத்தின் ஈரப்பத பற்றாக்குறை உங்கள் தலைமுடிக்கு பல எண்ணற்ற பிரச்சனைகளை விளைவிக்கும். உங்கள் தலைமுடிக்கான குளிர்கால பராமரிப்பு டிப்ஸ் இதோ உங்களுக்காக. இதனை படித்து பின்பற்றினால், அழகான தலைமுடியை எளிதாக பெறலாம்.

எண்ணெய்களில் கவனம் தேவை

வறண்ட தலைமுடியின் பராமரிப்பில் முதன்மையான தாதுப்பொருளாக இருப்பது இன்றியமையாத எண்ணெய்கள் தான். குளிர்காலங்கள் தலைமுடியையும் தலைச்சருமத்தையும் வறண்டு போகச் செய்யும். அப்பொழுது இன்றியமையாத எண்ணெய்களாகிய தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்தால் சிறந்த பலனை அடையலாம். இது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும்.

“கூடாது”

தலைமுடிக்கு வண்ணம் பூசுதல், அயர்னிங் செய்வது, ஸ்ட்ரீகிங் செய்வது போன்றவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது. இது குளிர்காலங்களில் தலைமுடி பராமரிப்பில் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் உங்கள் அழகான தலைமுடிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதனால், இவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது. குளிர்கால தலைமுடி பராமரிப்பு மிகவும் இன்றியமையாதலால் தலைமுடியை கவனமாக பராமரிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான ச‌மோஷா வீட்டிலேயே செய்யும் முறை!

“வெஜிடபிள் சமோசா செய்யும் முறை

தேவையான பொருட்கள்

மைதா மாவு – ஒன்றரை கோப்பை
வெண்ணெய் – இரண்டு மேசைக்கரண்டி
உப்புத்தூள் – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
உருகைக்கிழங்கு – அரைக் கிலோ
பச்சைபட்டாணி – முக்கால் கோப்பை
பொடியாக நறுக்கிய வெங்காயம் – இரண்டு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – இரண்டு
துருவிய இஞ்சி – ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால்தேக்கரண்டி
கரம்மசாலா – அரைத்தேக்கரண்டி
புதினா தழை – ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு பிடி
எண்ணெய் – இரண்டு கோப்பை

செய்முறை :

இஞ்சியை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

உருளைகிழங்கை வேகவைத்து தோலை உரித்து வைக்கவும். பச்சைப்பட்டாணியை வேகவைத்த கிழங்குடன் சேர்த்து ஒன்றும் பாதியுமாக மசித்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி காயவைத்து, நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கவும்.

அதன் பிறகு எல்லாத் தூளையும் போட்டு கிளறவும்.

பின்னர் மசித்த கிழங்கு கலவையை கொட்டி, கொத்தமல்லி, புதினாவை அத்துடன் சேர்க்கவும்.

அனைத்தையும் ஒன்றாக கலந்து, வேகவிட்டு இறக்கி நன்கு ஆறவைக்கவும்.

பிறகு மைதாமாவில் உப்புத்தூள், சூடுபடுத்திய வெண்ணெய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து கைகளால் நன்கு பிசையவும். பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து பூரி மாவு போல் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக 10 – 12 உருண்டைகள் செய்து வைக்கவும்.

பிறகு ஒரு உருண்டையை எடுத்து பூரி போல், ஆனால் மெல்லியதாக தேய்த்து, இரண்டாக வெட்டவும். பின்பு ஒரு அரை வட்டத்தில் உருளைகிழங்கு கலவையை வைத்து மூடி ஓரங்களை தண்ணீரால் தடவி அழுத்தி ஒட்டவும்.

இதைப் போலவே எல்லா உருண்டைகளையும் சமோசக்களாக செய்து வைக்கவும். பிறகு ஒரு குழிவான சட்டியில் எண்ணெய்யை ஊற்றி, நன்கு காய வைத்து, பிறகு அடுப்பின் அனலை பாதியாக குறைத்து வைத்து சமோசாக்களை இரண்டு அல்லது மூன்றாக போடவும்.

அவை பொன்னிறமாக வேகும் வரை வேகவிட்டு, திருப்பிப்போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும். பிறகு மீண்டும் அனலைக் கூட்டி, பின்பு குறைத்து மேற்கூறிய முறையில் எல்லாவற்றையும் பொரித்து எடுக்கவும்.

சுவையான சமோசா தயார்.

முக அழகிற்கு தகுந்த புருவ மாற்றம் !!

முகத்தின் ஒட்டு மொத்த அழகைக் காட்டுவதில் புருவத்துக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். வில் போன்ற புருவம், அடர்த்தியான புருவம், தடிமனான புருவம், கீற்று போன்ற புருவம் என்று வகைப்படுத்தி கூறலாம். முகத்துக்கு ஏற்ப, கண்களுக்கு ஏற்ப புருவத்தை ட்ரிம் செய்து கொள்ளுங்கள்.

• குறுகிய நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் இடைவெளி அதிகம் இருக்கட்டும்.

• நீண்ட நெற்றி உள்ளவர்களுக்கு புருவங்களுக்குள் அதிக இடைவெளி தேவையில்லை.

• ஓவல் முகம் உள்ளவர்களுக்கு புருவம் சிறு வளைவுடன் இருந்தால் வசீகரமாக இருக்கும்.

• அகன்ற மூக்கு உள்ளவர்கள் புருவங்களின் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள்.

• புருவங்கள் நெருங்கி இருந்தால் முகம் குறுகி, கண்கள் சிறிதாக தெரியும்.

• சதுர முகம் உள்ளவர்கள் பெரிய வளைவாக பிறை வடிவில் மாற்றிக் கொள்ளுங்கள். முகம் ஓவல் வடிவமாகத் தெரியும்.

• புருவத்தின் முடிவு மிகவும் கீழ் நோக்கி இருந்தால் வயதான தோற்றம் தரும். மாற்றிக்கொள்ளுங்கள்.

• கருப்பு நிறம், அழகிய முகம் உள்ளவர்கள் புருவத்தை சரி செய்து கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.

• வட்ட முகம் உள்ளவர்கள் புருவம் கீழ் நோக்கி வருவதுபோல் அமைத்துக் கொள்ளவும்.

• நீண்ட, ஓவல் முகம் உள்ளவர்கள் சிறிய புருவத்தை அமையுங்கள்.

• நீளமூக்கு உள்ளவர்களுக்கு புருவம் தழைத்தே இருக்கட்டும். தினம் விளக்கெண்ணெய் தடவுங்கள். முடி நன்றாக வளரும்.

• வீட்டிலேயே புருவத்தை சீர் செய்பவர்கள் பிளேடால் எடுக்காதீர்கள். அதிகமாக வளர ஆரம்பித்துவிடும். எதிர்த்திசையில் எடுத்தால் முரட்டுத்தனமாக வளரும். அடுத்த முறை நூலினால் எடுக்கும்போது அந்த இடத்தில் ஆழப்புள்ளி உண்டாகலாம்.

• உடைக்கு மேட்சான நிறத்தில் ஐ ஷேடோ எடுங்கள். கண்களை மூடி புருவம் மீது ப்ரஷ்ஷால் தடவுங்கள்.

அஜீரண தொல்லையிலிருந்து விடுபட ஓமம்!

அஜீரணத்தால் ஏற்படும் வயிற்று வலிக்கு 50 கிராம் ஓமத்தை ஒரு சட்டியில் வறுத்து அதை முறத்தில் கொட்டித் தேய்க்க உமி நீங்கிச் சுத்தமாகும். அதைப் புடைத்து அம்மியில் வைத்து அத்துடன் அதே அளவு பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்து அதில் சிறிதளவு காலை மாலை இரு வேளை வீதம் சாப்பிட்டு வெந்நீர் அருந்திவர வயிறு குணமாகும். உப்புசமும் நீங்கும்.


முருங்கை இலையை உப்புச் சேர்த்து லேசாக நசுக்கி கசக்கிப் பிழிந்து வரும் சாற்றில் இரண்டு ஸ்பூன் சாப்பிட உடனே வயிற்றுவலி ந“ங்கும். வெந்தயத்தை ஓர் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் எடுத்து தயிரில் சேர்த்துச் சாப்பிட வயிற்றுவலி குணமாகும். சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 10 கிராம், பனை வெல்லம் 5 கிராம் இவற்றில் சுக்கைத் தோல் நீக்கிவிட்டு பின் மற்ற சரக்குகளையும் தூளாக்கி அத்துடன் பனை வெல்லத்தையும் சேர்த்து அரைத்துக் காலையில் சிறிதளவு உள்ளுக்கு அருந்தி வர அஜீரண சம்பந்த வயிற்றுவலி குணமாகும்.


குழந்தை வயிற்று வலியால் துடித்தால் வசம்பு சுட்ட சாம்பலுடன் சிறிது தேன் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி விடுவதோடு, வசம்பு சுட்டகரியைச் சிறிது நீர்விட்டு குழைத்து வயிற்றில் கனமான பற்று போட்டுவந்தால் குணமாகும். வயிற்றுக் கடுப்பு அதிகமாக இருக்குமானால் தொட்டால் சிணுங்கி செடியின் இலையை அரைத்து சுண்டைக்காயளவு தயிரில் கலந்து சாப்பிட குணமாகும். சிறிது பெருங்காயத்தை பொரித்து நீர் மோரில் சேர்த்து அத்துடன் கறி மஞ்சள் தூளில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கி ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தினால் வாயு சம்பந்த வயிற்றுவலி நீங்கும்.


 இஞ்சிச்சாறுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, கல் உப்பைப் பொடித்துச் சேர்த்துக் குடித்தால், செரிமானக் கோளாறு சட்டென சரியாகும். கால் ஆணி சரியாக ஒரு எளிய வைத்தியம்: தக்காளியை இரண்டாக வெட்டி, அதன் சதைப் பகுதியை ஆணியின் மேல் வைத்து, மீதி அரை தக்காளியால் அதை மூடி, ஒரு துணியால் கட்டிக் கொண்டு தூங்கவும். கூடவே ஓமத்தை பொடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து, 1 டீஸ்பூன் அளவு இரவில் சாப்பிடவும். 1 வாரம் இரண்டையும் செய்து வர, கால் ஆணி குணமாகும்.


மணத்தக்காளி வாய் புண்ணுக்கு நல்லது எனத் தெரியும். மணத்தக்காளிக் கீரையை காரமில்லாமல் பச்சைப் பருப்புடன் சேர்த்து சமைத்தோ, கீரையை லேசாக வதக்கி, வதக்கிய மிளகாய், தேங்காய், உப்பு சேர்த்து அரைத்து தயிரில் கலந்தோ சாப்பிட, நீண்ட நாள் இருமலால் உண்டான தொண்டைப் புண்ணும், ரணமும் ஆறும். இஞ்சியைக் கழுவி, தோல் நீக்கி சின்னத் துண்டுகளாக வெட்டவும்.


சுத்தமான தேனில் அதை நான்கைந்து நாட்கள் ஊற வைக்கவும். தினம் இதில் ஒரு துண்டு சாப்பிட்டு வர, சருமச் சுருக்கங்கள் நீங்கி, இளமை ஊஞ்சலாடும். முட்டைக்கோஸை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் பொடியாகும்படி சுற்றவும். அத்துடன் கொஞ்சம் உப்பும் மிளகுத்தூளும் கலந்து, கொஞ்சம், கொஞ்சமாகச் சாப்பிட, எப்படிப்பட்ட கபமும் காணாமல் போகும்.


முட்டைக்கோஸ் வேக வைத்த தண்ணீரை வெதுவெதுப்பாகக் குடிப்பதும் பலன் தரும். திடீரென காது வலிக்கிறதா? பூண்டை உரித்து, ஒரு மெல்லிய துணியில் சுற்றி, வலிக்கிற காதுக்குள் 1 மணி நேரம் வைத்திருக்கவும். 2-3 நாட்களுக்கு அப்படிச் செய்தால், காது வலி சரியாகும். சீழ் வடிவதும் நிற்கும். 

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க…

கர்ப்பமாக இருக்கும் போது உணவுகளில் கவனமா இருங்க…

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நிறைய உணவுக் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் எந்த உணவுகளைப் பார்த்தாலும், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இது கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் ஏற்படக்கூடிய உணர்வுகள் தான். சிலருக்கு உணவுகளை சாப்பிடவே தோன்றாது. ஆனால் ஒருசில உணவுகளைப் பார்த்தால், அதன் மீது ஆசை அதிகரிக்கும். அப்போது பசி இல்லாவிட்டாலும் சாப்பிடுவார்கள். உதாரணமாக, நிறைய கர்ப்பிணிகள் இனிப்புகள், காரமான உணவுகள் அல்லது ஜங்க் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.

அதிலும் குறிப்பாக ஜங்க் உணவுகளை தான் பெரும்பாலான கர்ப்பிணிகள் விரும்புவர். ஆனால் அவற்றை கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்கக வேண்டும். ஏனெனில் அவை உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அவை சாதாரணமாகவே ஆரோக்கியமற்றது, கர்ப்பிணிகளுக்கு சொல்லவா வேண்டும்.

எனவே கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை சாப்பிடக்கூடாது என்று சிலவற்றை பட்டிலிட்டுள்ளோம். அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, கவனமாக இருங்கள்

சோடா

கர்ப்பமாக இருக்கும் போது கார்போனேட்டட் பானங்களான சோடா அல்லது கூல்டிரிங்ஸ் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உடலில் வாயுத் தொல்லையை அதிகரிப்பதோடு, அதில் கலோரிகள் அதிகம் உள்ளன.

தயிர்

பால் பொருட்களில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கும். எனவே கர்ப்பிணிகள் பால் பொருட்கள், குறிப்பான தயிரை அதிகம் சாப்பிட்டால், எலும்புகள் வலுவடையும்.

ஜூஸ்

ஜூஸ் வகைகளில் கேரட், பீட்ரூட் மற்றும் இதர பழச்சாறுகள் மிகவும் ஆரோக்கியமானவை. முக்கியமாக கர்ப்பிணிகளுக்கு சிறந்தது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி


பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பாக்டீரியா அதிகம் இருக்கும். ஜங்க் உணவுகளில் உள்ள இறைச்சிகள் அனைத்தும் பதப்படுத்தப்பட்டவையே. எனவே நிச்சயம் இதனை தவிர்க்க வேண்டும்.

முழு தானியங்கள்


தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், செரிமான மண்டலம் நன்கு இயங்கும். மேலும் தானியங்களில் கலோரிகள் மிகவும் குறைவு.

நூடுல்ஸ்

இந்த உணவுகளை மிகவும் வேகமாக சமைத்துவிடலாம். ஆனால் அந்த உணவுகளை கர்ப்பிணிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அதில் உப்பு, கலோரிகள் அதிகம் இருப்பதோடு, செரிமானமடைவது கடினமாகிவிடும்

சீஸ்

கொழுப்பு குறைவான சீஸில் கலோரிகள் குறைவாகவும், கால்சியம் அதிகமாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி இதில் பாக்டீரியா இருக்காது. எனவே இது கர்ப்பிணிகளுக்கான சிறந்த உணவாகும்.

உறைந்த உணவுகள்

உறைந்திருக்கும் உணவுகளில் உப்புகள் அதிகம் இருக்கும். அத்தகைய உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமற்றவை.

கேரட்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் சிறந்தது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதும்ட பொலிவோடு அழகாக இருக்க கேரட்டை அதிகம் சாப்பிடலாம்.

சாலட்

மிகுந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்றால் சாலட் என்று சொல்லலாம். ஏனெனில் சாலட்டானது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றால் செய்யப்படுவதால், இதில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிடுவதால், வயிறு நிறைவதோடு, கலோரிகளும் குறைவாக இருக்கும்.

பழங்கள்

பழங்களில் ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பேரிக்கய் மற்றும் மற்ற பழங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியவை. அதிலும் அவற்றை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், கருவில் இருக்கும் சிசுவிற்கும் நல்லது. எனவே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், அப்போது பழங்களை சாப்பிடுவது நல்லது. ஆனால் பப்பாளி மற்றும் அன்னாசியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Monday, 10 February 2014

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.


வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்

கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?

பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.


கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா. இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம் தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்.


புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.

பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

பாலா - கும்பகோணம், தஞ்சாவூர் கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம்!

கும்பகோணம், தஞ்சாவூர் பகுதி கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம். அவர்களில் திறமையானவர்களை தேடி கண்டறிந்து பாலா முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

 காரணம்? இயக்குனர் பாலாவின் அடுத்த படம் கரகாட்டம் சம்பந்தப்பட்டது. தமிழ்சினிமா வரலாற்றிலேயே கரகாட்டக்காரன் படத்தைதான் ஓப்பன் டென்ட்டரில் விட்டு வியாபாரம் செய்தார்கள். அப்பவே கோடிகளை அள்ளிய படம் அது.

அதற்கப்புறம் அதே டைப்பில் படங்கள் வந்தாலும், எதுவும் போஸ்டர் காசுக்கு கூட பிரயோஜனமில்லாமல் போய்விட்டது.

 நாதஸ்வரம், கரகாட்டம் போன்ற கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வரும் நிலையில் பர்பெக்ட் படைப்பாளியான பாலா அந்த பக்கம் தன் பார்வையை செலுத்தியிருப்பதும், அதற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் அந்த கலைஞர்களை பெருமைப்பட வைத்திருக்கிறது.

 இனி அந்த கலை அழியாது என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த படத்தில் கரகாட்டக்காராக சசிகுமார் நடிக்கிறார். கரகாட்டக்காரியாக ஸ்ரேயா நடிக்கிறார்.

சும்மாவே இடுப்பை அந்த ஆட்டு ஆட்டுவார் ஸ்ரேயா. (மறந்திருந்தால் கந்தசாமியை ஒருமுறை தகவலை பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவும்) இந்த படத்தில் விடுவாரா?

 இருந்தாலும் பயிற்சி முக்கியம் என்று கூறிவிட்டாராம் பாலா. அவருக்கு பயிற்சி கொடுக்கவும், சசிகுமாருக்கு கற்றுக் கொடுக்கவும்தான் இந்த கரகாட்ட கோஷ்டிகளின் சென்னை பயணம்.

 ஆடுகிறவர்களுக்கு பெண்டு நிமிர்கிறதோ, இல்லையோ? சொல்லிக் கொடுப்பவர்கள் பாடு சுளுக்குதான்.