Monday, 17 March 2014

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமல் நடிக்கும் உத்தம வில்லனில் அவருக்கு ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா நடிக்கின்றனர்.

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞராக கமல் நடிக்க அவரின் நெருங்கிய நண்பர் நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்க ‘உத்தம வில்லன்' படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை அமைத்தவரும் கமல்ஹாசன் தான்

உத்தம வில்லன் கமலின் ஜோடிகளாக ஊர்வசி, பூஜா குமார், ஆன்ட்ரியா!

கமலின் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜா குமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் இதிலும் நடிக்கிறார்கள். கமல் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இயக்குனர் கே.பாலசந்தர் மற்றும் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார்கள்.

இப்படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார்.

மனோரஞ்சனை கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குனராக கே.பாலச்சந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.கே.விஸ்வநாத்தும் நடிக்கின்றனர். 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமார் நடிக்கிறார். 21ஆம் நூற்றாண்டுக் கமலின் காதலியாக ஆண்ட்ரியா ஜெர்மையாவும் நடிக்கின்றனர்.

முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கொல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கொக்கு செட்டியார் என்ற முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க கமல்ஹாசன் மற்றும் விவேகா பாடல்களை எழுதுகின்றனர். ஒளிப்பதிவு ஷாம்தத், படத்தொகுப்பு விஜய் சங்கர். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக இயக்குனர் லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் படத்தை தயாரிக்கிறார்.

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் கும்மாளம் போட்ட விராத் கோலி!! படங்கள் !

இந்தியாவின் முன்னணி வீரரான விராத் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராத் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் இணைந்து ஷம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான் நெருக்கம் ஏற்பட்டதாம்.


இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கு முன்பாக அனுஷ்காவை சந்தித்து விட்டு தான் கோலி புறப்பட்டார்.


இந்நிலையில் இருவரும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.


அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார், ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோலி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளதாக தெரிகிறது.


சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனராம்.


ஆசிய கிண்ணப் போட்டியில் இறுதி போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை, தோல்வி பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அனுஷ்கா சர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

கமல்ஹாசன் படத்தில் இருந்து காஜல் அகர்வாலை விரட்டியடித்த ஆண்ட்ரியா.

கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தை பற்றிய சில புதிய விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.


இந்த படத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடிக்கின்றார். ஒரு வேடத்தின் பெயர் உத்தமன். 8ஆம் நூற்றாண்டின் நாடககலைஞராக நடிக்கும் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடிக்கிறார். மேலும் நாடகக்கலைஞரான உத்தமனை விரட்டி விரட்டி காதலிக்கும் அரசி வேடத்தில் பூஜா குமாரும், பூஜா குமாரின் தந்தையாக நாசரும் நடிக்கின்றனர்.


இன்னொரு கமல் 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் மனோரஞ்சன். இவருக்கு குருவாக கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் மனோரஞ்சனையும் ஒரு பெண் ஒருதலையாக விரட்டி விரட்டி காதலிக்கிறார். அவர்தான் பூ பார்வதி.


இரண்டு வேடங்களுக்கும் உள்ள ஒற்றுமையை அற்புதமான கிளைமாக்ஸில் விளக்க உள்ளார்களாம்.


முதலில் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால், தயாரிப்பு தரப்பு அவரை நீக்கிவிட்டு, ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆண்ட்ரியா ஏற்கனவே விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் கமல்ஹாசனுடன் நடித்ததால், சம்பளம் குறித்து பேரம் பேசவில்லை. எனவே ஆண்ட்ரியாவையே இந்த படத்திலும் ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

நமீதா ஏன் அரசியலுக்கு வருகிறார் தெரியுமா?

நமீதா தேர்தலில் போட்டியிடப் போவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


நமீதா அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.


இது குறித்து நமீதா கூறியதாவது:–


நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். 3 கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளன. எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.


பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை இப்போது சொல்ல முடியாது.


அரசியல் கட்சியில் இணைந்த பிறகு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன். அதை விரைவில் எதிர் பார்க்கலாம். நான் அரசியலில் ஈடுபடுவதால் சினிமா வாழ்க்கை பாதிக்குமா என்ற கேள்விக்கு இடமில்லை. காரணம் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டு இருக்கவில்லை. நல்ல கதைகள் அமையும் பட்சத்தில் நடிப்பேன்.


தமிழக மக்கள் என் மீது நிறைய அன்பு வைத்துள்ளார்கள். அவர்களுக்கு ஏதேனும் திருப்பி செய்யும் நோக்கில் தான் அரசியலுக்கு வருகிறேன். தேசிய அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. தமிழக அரசியலில் தான் ஈடுபடுவேன். மக்களிடம் நிறைய அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த தேர்தலில் நிறைய வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கிறேன்.


இவ்வாறு நமீதா கூறினார்.

”எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி” மன்சூர் அலிகான் பேச்சு!

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளியாக இருக்க முடியும் என்று நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.


பாராளுமன்ற தேர்தல் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ''இந்த பாராளுமன்ற தேர்தலில், மக்களுக்கு அதிக ஆர்வம் இல்லை. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


”எரியற கொள்ளில எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி” மன்சூர் அலிகான் பேச்சு


கோடி கோடியாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அரசியல் நடத்த முடியும் என்கிற நிலை உள்ளது. சொத்துக்களை காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அரசியலுக்கு வருகிறார்கள்.


இந்த மண்ணின் மைந்தர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாரும் வரவில்லை. தமிழ்நாட்டில் இருந்து 40 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி போவார்கள். அவர்களில், 5 பேர் மந்திரிகளாகி விடுவார்கள். அந்த ஐந்து பேரும் இதற்கு முன்னால் மந்திரிகளாக இருந்தவர்கள் என்ன செய்தார்களோ, அதையே தான் இவர்களும் செய்வார்கள். தமிழர்களின் நலனுக்காக யாரும் உழைக்கப் போவதில்லை.


இந்த தேர்தலில், சில நடிகர்-நடிகைகள் தேர்தல் பிரசாரத்துக்கு போகிறார்கள். சில நடிகர்-நடிகைகள் அரசியல் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார்கள். எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பதை வரவேற்கிறேன். நக்மா, நமீதா, சோனா மூன்று பேருக்கும் வாழ்த்துகள்.


நடிகர்கள் சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். முதலில் மிகுந்த கட்டுப்பாட்டோடு கட்சி ஆரம்பிக்கிறார்கள். போகப்போக அந்த கட்சிக்குள்ளும் குடும்ப அரசியல் நுழைந்து விடுகிறது. அப்புறம் ஊழல் என்கிறார்கள். ஊழலை ஒழிப்போம் என்கிறார்கள். அந்த ஊழல் எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து சிறந்த இயக்கத்தில் இருந்து அழைப்பு வந்தால், நான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்''என்று கூறியுள்ளார்.

நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்!

தான் கர்ப்பமாக இருப்பதாக சிலர் வதந்தி பரப்புவதாக நடிகை ப்ரியாமணி கூறியுள்ளார்.


பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் 'பருத்தி வீரன்' படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி.


நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்


தமிழில் வந்த வாய்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, தெலுங்கு -இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டினார். கடைசியில் சில கன்னடப் படங்களில்தான் நடிக்க முடிந்தது. இப்போது வாய்ப்புகள் இல்லாமல், மலையாளப் பக்கம் ஒதுங்கியுள்ளார்.


இந்த நிலையில் பிரியாமணி ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் ஒரு பேச்சு உலா வர ஆரம்பித்துவிட்டது.


இது உண்மைதானா என்று ப்ரியாமணியிடம் கேட்டபோது, "என்னைப் பற்றி மனம் போன போக்கில் எழுதுகிறார்கள். கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.


நான் கர்ப்பமா இருக்கேன்னு வதந்தி பரப்புறாங்களே! - ப்ரியாமணி வருத்தம்


இவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவது இல்லை. தமிழில் எனக்கு வாய்ப்புகள் இல்லை. முன்பு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் நான்தான் புறக்கணித்துவிட்டேன்.


இனி வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். படங்கள் இயக்கும் ஐடியாவும் இருக்கிறது," என்றார்.

பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி! மவுசு கூடுகிறது...!

பெண்களுக்காக பெண்கள் ஒரு தனி வெப் டிவியை ஆரம்பித்துள்ளனர்.


உலக மகளிர் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப் டிவிக்கு ஸ்த்ரீ என்று பெயர் சூட்டியுள்ளனர்.


இந்த வெப் டிவியில் முழுக்க முழுக்க பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகின்றன.


பெண்களின் சுய முன்னேற்றத்துக்காகவும், அவர்கள் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு பெறவும் இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை வழி வகுக்கின்றன.


பெண்களுக்காக பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட வெப் டிவி!


அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், சட்டம், பெண்கள் விழிப்புணர்வு, சுய முன்னேற்றம், சமையல் என பல்வேறு துறைகளில் உள்ள பெண் சாதனையாளர்களும் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சிகளில் பகிர்ந்து கொள்கிறார்கள்.


ஒவ்வொரு நிகழ்ச்சியும் 10 நிமிடம் என்ற அளவில் ஒரு நாளைக்கு மொத்தம் 24 பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் இந்த ஸ்திரீ டிவியில் ஒளிபரப்பாகின்றன. ஆரம்பத்தில் தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை தர உள்ள இந்த ஸ்த்ரீ டிவி வெகு விரைவில் பல மொழிகளிலும் பல புதுமையான நிகழ்ச்சிகளை தர உள்ளது.


இந்த ஸ்த்ரீ டிவி இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஒளிபரப்பாகும். அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்த்ரீ டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை எந்தவித இணைய வேக தடங்களும் இல்லாமல் ஒரே நேரத்தில் பலரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளனர்.