Tuesday, 18 March 2014

அஜித்தா வேணாம் சாமி ! தீபிகா படுகோனே!

கெளதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.


பின்னர் அவர் இரண்டு மெகா பட்ஜெட் தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டிருப்பதால் அவரால் அஜீத் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. எனவெ அவர் படத்தில் இருந்து விலகினார். இதனால் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க பலர் பரிசீலிக்கப்பட்டனர்.


தற்போது தீபிகா படுகோனேவிடம் இயக்குனர் கெளதம் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் அஜீத் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை.


தீபிகா படுகோனே அஜித்துடன் நடிக்க ரூ.7கோடி சம்பளம் கேட்கிறார். ரூ.7 கோடிக்கு குறைவாக கொடுத்தால் அஜீத் படத்தில் நடிக்க முடியாது என கறாராக் கூறிவிட்டார்.


இவ்வளவு பெரிய தொகையை ஹிரோயினுக்கு கொடுக்க தயாரிப்பாளர் மறுத்துவிட்டதால், கெளதம் மேனன் வேறு நடிகையை பரிசீலனை செய்து வருகிறார். தற்போது நயன் தாரா மற்றும் காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

சிம்புவுக்கு தருமடி கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிம்புவும் ஹன்சிகாவும் பிரிந்ததற்கு படத்துறையில் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவற்றில் ஒன்று…சிவகார்த்திகேயன் ஹன்சிகா இடையிலான நட்பு.

மான் கராத்தே படத்தில் இணைந்து நடிக்கும்போது ஹன்சிகா உடன் சிவகார்த்திகேயன் நட்பாகப்பழகியதுதான் சிம்புவை சினம் கொள்ள வைத்தது என்றும், அதன் காரணமாகத்தான் ஹன்சிகா உடனான காதலுக்கு குட்பை சொன்னார் என்றும் ஒரு கதை உலவிவரும்நிலையில்….

மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயனின் பேச்சு, அவரது பேச்சில் உள்குத்து இருக்கிறதோ என்ற சந்தேகத்தை உண்டாக்கிவிட்டது.

அப்படி என்ன பேசினார் சிவகார்த்திகேயன்?

‘‘இந்த படம் இவ்வளவு அழகா, கலர் ஃபுல்லா வந்ததுக்குக் காரணம் தயாரிப்பாளர்கள் ஏ.ஆர். முருகதாஸ், மதன் அவர்கள்தான். எனக்கு அருமையான டீம் அமையறது ரொம்ப லக்குதான்.

இங்க ஜெயிக்கிறதுக்கு ஒரே வழி கடின உழைப்புதான். ஆனால், நல்ல டீம் அமைஞ்சா ஈஸியா ஜெயிச்சிடலாம். நிறைய பேர் அதை லக்குனு சொல்றாங்க. அப்படின்னா நான் பயங்கர லக்கிதான்.

எல்லா படத்துலயும் பாடல்கள்தான் படத்துக்கு அடையாளம். தியேட்டருக்கு ரசிகர்களை வரவைக்கிறதே பாடல்கள்தான். அனிருத், இந்த படத்துல கொடுத்திருக்கிற பாடல்களுக்கு டான்ஸ் ஆடறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சி. என்னால முடியவேயில்லை. சாதாரணமா இந்தப் பாடல்களுக்கு நடந்தே போயிட முடியாது. டான்ஸ் ஆடினால் மட்டும்தான் அந்த பாடல்களுக்கு மேட்ச் பண்ண முடியும்.”

என்று வழக்கமான வாசிப்புகளுக்குப் பிறகு ஹன்சிகா மேட்டரை டச் பண்ணினார் சிவகார்த்திகேயன். “ இந்த படத்துக்கு ஹன்சிகா , ஹீரோயின்னு சொன்ன உடனே, பாருப்பா இவனுக்கு பயங்கர மச்சத்தைன்னு சொன்னாங்க. அவங்க கூட நடிக்கதானங்க செஞ்சேன்? அது ஒரு பெரிய தப்பா?”

என்று அவர் கேட்டது வெளிப்பார்வைக்கு காமெடியாகத் தோன்றினாலும், அது காமெடி இல்லை, சீரியஸ்.

“இது சிம்புவுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த பதிலடி” என்றே சொல்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்.

தேசிய விருதுப் போட்டிக்கு 40 தமிழ் படங்கள்!!



2013ம் ஆண்டுக்கான தேசிய விருது போட்டியில் 40 தமிழ் படங்கள் மோதுகின்றன.



61வது தேசிய திரைப்பட விருது வரும் மே மாதம் அறிவிக்கப்பட உள்ளது.



கடந்த பெப்ரவரி 14ம் திகதி வரை போட்டிக்கு படங்களை அனுப்ப கால அவகாசம் தரப்பட்டிருந்தது.



40 தமிழ் படங்கள் பல்வேறு தலைப்பின் கீழ் இப்போட்டியில் மோத உள்ளது.




தேசிய விருதில் மொத்தம் 30 விருது பிரிவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



6 மெழுகுவர்த்திகள், ஆதலால் காதல் செய்வீர், ஹரிதாஸ், மரியான், மூடர் கூடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும், தலைமுறைகள், தங்க மீன்கள் மற்றும் விடியும் முன் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.



பொக்ஸ் ஒபீஸ் பட பிரிவில் கோலிசோடா, எதிர் நீச்சல், குட்டிப்புலி, பாண்டிய நாடு, ராஜா ராணி, சூதுகவ்வும் படங்களும் மற்றும் திரைக்கு வரவுள்ள இனம், நெடுஞ்சாலை, ராமானுஜம் ஆகிய படங்களும் நுழைந்துள்ளன.

இது நடிகை அஞ்சலியின் திருவிளையாடல்!

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார்.


சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. உடல் எடையும் கூடியது. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.


இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளன. மொபைல் போன் சுவிட்ஜ்ஆப் செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கு திரையுலகினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது.


அமெரிக்காவுக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை. தொடர்ந்து தேடும் படலம் நடக்கிறது.

பல கண்டிஷன் போடும் நித்யா மேனன்

நித்யா மேனன் என்றதும் தெலுங்கிலும் மலையாளத்திலும் விநியோகஸ்தர்கள் விழுந்தடித்து அவர் நடித்த படங்களை வாங்குகிறார்கள்.


தெலுங்கிலும் மலையாளத்திலும் நித்யா மேனன்க்கு இருக்கும் மார்கெட் தமிழில் அவருக்கு இல்லை என்பது மாலினி 22 பாளையங்கோட்டை திரைப்படத்திலிருந்தே நமக்கு தெரிந்த விஷயம்.


மாலினி 22 படத்திற்கு பிறகு அவர் தமிழில் நடித்த ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படம் வாங்க ஆள் இல்லாமல் முடங்கியுள்ளது.
இந்நிலையில் நித்யாவை, படத்தில் புக் செய்ய அணுகும் இயக்குனர்களிடம் அதிக கண்டிஷன் போடுகிறாராம்.


நான் நடிக்கும் படத்தில் எது எது இருக்ககூடாது என ஒரு பட்டியலே முன் வைக்கிறாராம்.
ஆகையால் இது வேலைக்கு ஆகாது என கேரளா வரை செல்லும் இயக்குனர்கள் நித்யாவின் வீட்டில் தலையை கூட காட்டுவது இல்லையாம்.

அலுத்துப்போன தங்கர்பச்சான்!

அழகி, சொல்ல மறந்த கதை போன்ற படங்களை இயக்கிய தங்கர் பச்சான் வெகுகாலம் முன் களவாடிய பொழுது என்ற படத்தையும் முடித்தார்.



களவாடிய பொழுது திரைப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் அப்படத்தை வெளியிட பெரும் பாடுபட்டிருக்கிறார்.



இப்படத்தை வெளிகொண்டு வர பல முயற்சிகளை எடுத்துள்ளார் ஆனாலும் அப்படம் வெளியிட முடியவில்லை.



சலித்துப்போன தங்கர்பச்சான் இனி இப்படத்திற்காக காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என அடுத்த படத்திற்கு தாவி விட்டார்.



அந்த படத்தில் தன் மகனையே ஹீரோவாக நடிக்க வைக்க அவருக்கு ஜோடியாக முன்னனி ஹீரோயின்களை தேடி வருகிறாராம் தங்கர்பச்சான்.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா – ஜி.விக்கு யாரு?

பென்சில் என்ற படத்தின் மூலம் பேனா சைஸ் கூட இல்லாத ஜீவி பிரகாஷ் ,ஹீரோ அவதாரம் எடுத்து உள்ளார் என்பது பழைய செய்தி.


தற்போது தன்னுடைய அடுத்து படத்துக்குக்கான கதை விவாத்தில் இறங்கி உள்ளாராம் நம்ம ஜிவி .


முதல் படமே வர வில்லை அதற்குள் தன்னுடைய இரண்டாவது படத்தை அறிவித்து விட்டார்.


இதில் சுவாரசியம் என்னவென்றால் தன்னால் முன்னணி கதாநாயகி கூடலாம் நடிக்க முடியாது என்ற தெரிந்த கொண்டு ஜீவி, சமீபத்தில் புதுமுக  இயக்குனர் அட்ஹிக் சொன்ன  டைட்டில் கேட்டு பஜ்ஜர் ஆகி உடனே ஓகே சொல்லி விட்டதாக தகவல்.


அவர் சொன்ன டைட்டில் "திரிஷா இல்லைன்னா நயன்தாரா" , அட டா  டைட்டில்  செம என்று சொல்லி இயக்குனர் அட்ஹிக் சொன்ன ஒன்லைன் கேட்டு ரொம்பவும் பிடித்து போக , உடனே Rebel Studio என்ற தயாரிப்பு நிறுவனத்திடம்  இயக்குனரை அனுப்பி வைத்தாராம்.



அவர்களுக்கும் கதை பிடித்து போக கூடிய விரைவில் இப் படத்தை தொடங்க உள்ளனராம்.


Rebel studio ஏற்கனவே விஜய் சேதுபதின் மெல்லிசை படத்தை தயாரித்து கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.