Tuesday, 18 March 2014

இது நடிகை அஞ்சலியின் திருவிளையாடல்!

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார்.


சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார். முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. உடல் எடையும் கூடியது. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின.


இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவி உள்ளன. மொபைல் போன் சுவிட்ஜ்ஆப் செய்யப்பட்டு உள்ளது. தெலுங்கு திரையுலகினரால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ரகசிய திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது.


அமெரிக்காவுக்கு சென்று விட்டதாகவும் கூறுகின்றனர். ஆனால் அது உறுதிபடுத்தப்படவில்லை. தொடர்ந்து தேடும் படலம் நடக்கிறது.

0 comments:

Post a Comment