Thursday, 20 March 2014

முக்கியப் புள்ளிகளுக்கு பினாமியாக மாறிய இயக்குநர் லிங்குசாமி...?

ஒரே நேரத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.


அதோடு, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உட்பட அரை டஜன் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஆளுக்கொரு ஆபீஸ் போட்டுக்கொடுத்து ஸ்டோரி டிஸ்கஷனில் உட்கார வைத்திருக்கிறார்.



இதை எல்லாம் பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு ஏதுய்யா இவ்வளவு பணம்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக அடிபடுகிறது. அதற்கான பதிலாக இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.


லிங்குசாமி படம் எடுப்பது அவரது சொந்தப்பணம் இல்லை, அவரது பெயரில் திரையுலகில் புழங்கும் மொத்தப் பணமும் அழகிரியின் மகன் துரைதயாநிதியின் பணம். சுமார் 200 கோடியை லிங்குசாமியிடம் கொடுத்திருக்கிறார் துரை தயாநிதி என்கிறார்கள் கிசுகிசுப்பாக.


 இன்னொரு தரப்போ, இத்தகவலை அடியோடு மறுப்பதோடு லிங்குசாமியின் பணப்புழக்கத்துக்கான காரணமாக மதுரை அன்புவை சுட்டிக் காட்டுகிறார்கள்.


ஏறக்குறைய 50 கோடிக்கு மேல் மதுரை அன்புவிடம் கடன் வாங்கியுள்ளாராம் லிங்குசாமி. மாதத்தின் முதல் தேதி அன்று வாங்கிய கடனுக்கான வட்டியை கரெக்டாகக் கொடுத்துவிடுகிறாராம்.


அந்த நம்பிக்கையின் பேரில்தான் லிங்குசாமி எந்த நேரத்தில், எத்தனை கோடிகள் கேட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ரெடி பண்ணி கொடுத்துவிடுகிறாராம் மதுரை அன்பு.

சினிமாவில் நாணயமாக நடந்து கொள்வது மிகப்பெரிய விஷயம்தான்..!

அசினு ரொம்ப நல்லவங்க..! கேரள அரசு விருது கொடுத்தாங்க..!


கேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மூலம் இந்திக்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாகி விட்டார்.


அங்குள்ள பிரபல ஹீரோக்களே அசினுக்கு பிரத்யேக சிபாரிசு செய்து வந்ததால், இப்போது வரை நீடித்துக்கொண்டிருக்கிறார்.


அவ்வப்போது மார்க்கெட் சரிந்தபோதும், யாராவது நடிகர்கள் புகுந்து அசினுக்கு கைகொடுத்ததால் இப்போதும் தாக்கு பிடித்துக்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே தமிழ், தெலுங்கு, இநதியில் தான் இயக்கும் படத்தின் நாயகியாகவும் அசினை புக் பண்ணியிருக்கிறார் மணிரத்னம்.


இப்படி பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் அசின், சினிமாவில் தான் சம்பாதிக்கிற பணத்தின் ஒரு கணிசமான தொகையை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார். குறிப்பாக, அனாதை பிள்ளைகளை அவர் படிக்க வைத்து வருகிறார்.


 அவர்களது படிப்பு முடிகிற வரை மொத்த செலவையும் தானே ஏற்று வருகிறார். அதனால் அசினின் இந்த சமூக சேவையை உற்சாகப்படுத்தும் விதமாக சமீபத்தில் கேரளா அரசு, அசினை கெளரவித்துள்ளது.


இதையடுத்து, இன்னும் நிறைய சமூக சேவையை செய்ய தூண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அசின்.

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அலையும் அமிதாப் பச்சன்! என்ன கொடுமை சார்....!


பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர் என கூறப்படும் நடிகர் அமிதாப் பச்சன்.


ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த வயதில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை; நிறைய வாய்ப்புகள் தன்னை விட்டு போய்விட்டதாக கூறி உள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அமிதாப் பேட்டி அளித்துள்ளார்.


 அதில், திரையுலகில் உங்களுக்கு வயதாகி விட்டால், உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்காது.


 அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத போது உங்களைத் தேடி எது வருகிறதோ அதனை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


எப்போதும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில் வயதானவர்கள் நடிக்க வேண்டி உள்ளது.


அதனால் அவர்கள் தங்கள் வயதை ஒத்த நடிகர்களையே கதைக்கு தேர்வு செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தலைவலி அதிகம் வரமல் தவிர்ப்பது எப்படி?

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும்.

இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

*இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

*தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

*இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

எளிய முறையில் கையாண்டால் :

1. பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

2. தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3. ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும்.

4. அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.

5. இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்!

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.


தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.


சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.


முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?


கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.


நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.


கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.


ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.


சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.


பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.


ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும். 

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள். அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி எதிர்ப்பு.!


அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு முருகதாஸ் ‘தல’ என்று பெயர் கூட வைத்துவிட்டாராம்.



அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய கால்ஷீட்டுக்காக கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், ஆகியோர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.



தீனா படத்தில்தான் முதன்முதலாக அஜீத்தை ‘தல’ என்று கூப்பிட வைத்தது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் கஜினி படத்தில் இணைந்தனர். ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தில் இருந்து அஜீத் திடீரென விலகினார். அதன்பின்னர் சூர்யா நடிப்பில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.



தற்போது ஒருஆக்ஷன் கதையின் திரைக்கதை முழுவதையும் முடித்து கையில் வைத்துள்ள முருகதாஸ் இந்த படத்தில் அஜீத் நடித்தால் மிகவ்ம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை நேரில் சந்தித்து கதையையும் கூறிவிட்டார். ஆனால் அஜீத்திடம் இருந்து இன்னும் முடிவு கிடைக்கவில்லை.



கவுதம் மேனனின் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்யவேண்டும் என ஷாலினி வற்புறுத்தி வருவதால், மனைவியின் பேச்சுக்குத்தான் அவர் முதலிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. மனைவி ஷாலினிகாக ஆபரேஷனுக்கு நேரம் ஒதுக்கிவிட்டு முருகதாஸ் படத்தை அஜீத் மறுத்துவிடுவார் என்றுதான் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.