Friday, 14 February 2014

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்!

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்

1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.

2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.

3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.

4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக் கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான்.

5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.

6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்கா விட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.

7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத் தையும் முழு மனதாய் கணவன் ஏற்க வேண்டும். கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)

8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித் தான் நடத்துகின்றனர்.

9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் சீக்கிரமாய் வீடு திரும்ப முயற்சிக்கணும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் பார்த்ததும் வந்து விடக் கூடியதல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.

நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

காணாமல் போனவைகள் - "தானிய குதிர்"

காணாமல் போனவைகள் - "தானிய குதிர்"


பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு.



குதிரிடல் (ஆங்கிலம்-granary,bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும முக்கியமான நடைமுறையாகும்.நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது.



சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.



இக்குதிர்கள பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் என்ன?

 தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்..

    திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
    திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
    திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
    திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380


    திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
    திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
    திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
    திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.


    திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
    திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
    திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
    திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை


    திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
    திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
    திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
    திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்


    திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
    திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
    திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
    திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்



    திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
    திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
    திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
    திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்


    திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
    திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
    எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
    ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.


            திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

47 வகை நீர்நிலைகள்!

 01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்

02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது

03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி

05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்

06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு

07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை

08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது

09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்

10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்

11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு

12. கடல் -(Sea) சமுத்திரம்

13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்

14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. கால் - (Channel) நீரோடும வழி

16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி

17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை

18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை

19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை

20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு

22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு

25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்

26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு

28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை

29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை

30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்

31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்

32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்

34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்

35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்

36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்

37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு

38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்

39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு

41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை

42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்

43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு

44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது

45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்

46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்

47. வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்

"காமராஜர் ஒரு சகாப்தம்"

கடவுளுக்காக வாதம் நடந்த காலகட்டத்தில் மக்களுக்காக வாதம் செய்த முதல் வக்கீல்!


முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த காவல் துறை மத்தியில் பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த முதல் போலீஸ்!


ஓட்டு வேட்டைக்காக உழைத்த அரசியல் வாதிகளுக்கு மத்தியில் மக்களின் ஓட்டு வீடுகளுக்காக உழைத்த முதல் அரசியல்வாதி!


மூன்று வேட்டி சட்டை முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும் வாழ்ந்து முடித்து  விட்ட முதல் ஏழை!

எப்படி ஆள வேண்டும்?

எப்படி வாழ வேண்டும்?

என்பதற்கு உதாரணமாய்

இருந்த முதல் தலைவன்....

"என்றுமே" இவரை வெல்ல எவரும் இல்லை...


இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான்...!

இந்த படத்தில் நீங்கள் காண்பது உண்மைதான் .
 . .
ஒரு சில ஆண்டுக்கு முன்னர் ரஷ்ய செய்தியாளர்களைச் சேர்ந்த இரு நபர்கள் மொபைலின் கதிர்வீச்சு எந்த விதத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று மக்களிடத்தில் விளக்குவதற்காக ஒரு அரங்கத்தில அனைவரையும் கூடச்செய்தனர் அங்கு micro-oven போன்ற அமைப்பை உருவாக்கி அதில் ஒரு முட்டையை வைத்து அதில் இரு புறமும் மொபைல் போன்களை வைத்து விட்டனர்

இரண்டிற்க்கும் தொடர்பை ஏற்படுத்தி விட்டு
இரு போன்களுக்கு அருகிலும் radio tap ஒலிபரப்பி உரையாடல் தொடரப்பட்டது ...

தொடரப்பட்ட 40 நிமிடத்தில் முட்டையிலிருந்து வெப்பம் வெளிவர ஆரம்பித்தது

அடுத்த 65 நிமிடத்தில் முட்டை முழுமையாக அவிந்து விட்டது ........

தொலைக்காட்சியில் இது நேரடியாக ஒலிபரப்பப் பட்டு அந்த நாடே விழிப்புணர்வு பெற்றது

ஒரு முட்டைக்கே இந்த கதி என்றால் அதை விட மெல்லிய நமது மூலை ?

அதிக நேரம் உரையாடுவதை நிறுத்தி விடுங்கள்

நம் அரசாங்கம் இதை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாது....? 

குழந்தையின் விக்கலை நிறுத்த இந்த முறையை முயற்சித்து பாருங்கள்..!

குழந்தையின் விக்கலை நிறுத்த இந்த முறையை முயற்சித்து பாருங்கள்..!

பிறந்த குழந்தையை சரியாக கவனிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் குழந்தைகளுக்கு விக்கல் எடுக்கும் போது அவர்களது உடலே ஒருவித ஆட்டத்தை ஏற்படுத்தும். அதைப் பார்த்தால், அனைத்து அம்மாக்களுக்கும் பயமாக இருக்கும். ஆகவே அத்தகைய விக்கலை நிறுத்துவதற்கு என்ன வழியென்று தெரிந்து கொண்டீடு, விரைவில் அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும். அதைவிட்டு அது தானாக போய்விடும் என்று காத்துக் கொண்டிருந்தால், பின் குழந்தை அழத் தொடங்கி, அதன் அழுகையே நிறுத்துவது பெரும் அவஸ்தையாகிவிடும்.

ஆகவே அத்தகைய விக்கலை உடனே நிறுத்துவதற்கு ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றி வந்தால், குழந்தையின் விக்கலை எளிதில் நிறுத்திவிடலாம். சரி, இப்போது அந்த விக்கலை எப்படியெல்லாம் செய்தால் நிறுத்திவிடலாம் என்று பார்ப்போம்.

குழந்தையின் விக்கலை நிறுத்த, இத ட்ரை பண்ணுங்க...
பொதுவாக விக்கலை நிறுத்துவதற்கு சிறிது நேரம் மூச்சை பிடித்துக் கொண்டு விட்டால், நின்றுவிடும். ஆனால் இந்த முறை குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே அதற்கு பதிலாக வேறு என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை அதிகப்படியான காற்றை விழுங்குகிறது. இதனால் அடிக்கடி விக்கல் ஏற்படுகிறது. எனவே குழந்தைகள் அதிகப்படியான காற்றை விழுங்காமல் இருப்பதற்கு, பால் கொடுக்கும் நேரத்தில் அவ்வப்போது ஒரே பக்கத்தில் கொடுக்காமல், அடிக்கடி நிலையை மாற்றிக் கொண்டே இருந்தால், குழந்தைகள் அதிகமான காற்றை விழுங்காதவாறு பார்த்துக் கொள்ளலாம். மேலும் விக்கலும் ஏறப்டாமல் இருக்கும்.

* தாய்ப்பால் கொடுத்தப் பின்னர் குழந்தைகள் ஏப்பத்தை விட வேண்டும். அவ்வாறு ஏப்பம் வந்தால், தாய்ப்பாலின் போது, அவர்கள் விழுங்கிய காற்றானது வயிற்றில் இருந்து வெளியேறிவிடும். மேலும் சில சமயங்களில் அத்தகைய ஏப்பமும் குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் தடுக்கும்.

* குழந்தைகள் விக்கல் எடுக்கும் போது அவர்களது முதுகுப் பகுதியை மெதுவாக தேய்த்துக் கொடுத்தால், அவை விக்கலை நிறுத்திவிடும்.

* குழந்தைகளுக்கு விக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு பசிக்கும் முன் தாய்ப்பால் கொடுத்துவிட வேண்டும். விக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணம் வாயுத் தொல்லை என்றும் சொல்லலாம்,. எனவே குழந்தைகள் வாயுத் தொல்லையினால் தான் விக்கல் எடுக்கிறார்கள் என்றால், அதன் அறிகுறியாக அவர்கள் வாந்தி எடுப்பார்கள். ஆகவே அவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்படாமல் இருப்பதற்கு, அவர்களுக்கு அவ்வப்போது பால் கொடுக்க வேண்டும்.

* தாய்ப்பால் கொடுத்தும் விக்கல் நிற்கவில்லையெனில், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிட வேண்டும். அதைவிட்டு, தொடர்ந்து கொடுத்தால், பின் குழந்தை வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடும். பின்னர் இதுவே அவர்களை பெரும் அவஸ்தைக்குள்ளாக்கிவிடும்.