Sunday 23 February 2014

கோபத்தைக் கட்டுப்படுத்தும் இனிப்பு பானம்…!

இனிப்பான பானங்களை அருந்துவது குறித்துப் பொதுவாக இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. சிலருக்கு எப்போதும் download‘ஜில்’லென்று இனிப்பான பானங்களை அருந்துவது பிடிக்கும். சிலரோ- குறிப்பாக சற்று வயதானோர்- இனிப்பான பானத்தை நீட்டினாலே விலகி ஓடுவர்.


ஆனால் இனிப்பான பானங்களைப் பற்றிய ஓர் இனிய தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். அதாவது, இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படுமாம். தங்கள் ஆராய்ச்சியில் இவ்வாறு கண்டுபிடித்துள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்றில் வெளியிட்ட கட்டுரையில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இனிப்புப் பதார்த்தங்களை விட, இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ, கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சம்பவங்களோ ஏற்பட்டால் அதை மனதளவில் கட்டுப்படுத்தி சாந்தத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.


குறிப்பாக குளுக்கோஸ் பானங்களைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இயல்பாகவே மனதை அடக்கி ஆளும் ஆற்றல் அதிகரிப்பதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் டாம் டென்னிசன் தெரிவித்துள்ளார். இனிப்புப் பான பிரியர்களுக்கு இந்தத் தகவல் இனிமையானதுதான். ஆனால் அமிழ்தமும் அளவோடு இருப்பது நல்லது என்கிறார்கள் நம் முன்னோர்கள்!

0 comments:

Post a Comment