Tuesday, 18 March 2014

என் மகன் லவ்வை அத்துவிட்டுட்டாரே: புலம்பிய டாடிக்கு இயக்குனர் செம டோஸ்!


என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம்.


விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார். அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார். அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான்.


இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது.


இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.

உதயமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம், பத்திரிகையும் வரப்போகிறது!

இளையராஜாவின் பெயரில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கயிருக்கிறது. இசைஞானி என்ற பெயரில் வாரப்பத்திரிகையும் வெளிவர உள்ளது.


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் பலர் தனிப்பட்ட முறையில் ஒன்றிணைந்து அவர் பெயரில் மன்றங்களும், பேரவையும் வைத்துள்ளனர். வருடந்தோறும் இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால் இளையராஜாவின் சம்மதத்துடன் அவரது பெயரில் ரசிகர் மனற்ம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இளையராஜாவின் சம்மதத்தடன் தொடங்கப்படும் இந்த அமைப்பானது, இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாகக் கொண்டு செயல்படும்.


அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் அமைப்பாக இளையராஜா ரசிகர் மன்றம் இருக்கும். இந்த மன்றத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு, சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கயிருக்கிறாராம் இளையராஜா.


மன்றம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5 மதுரையில் நடக்கயிருக்கும் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட உள்ளனர். அன்று இசைஞானி வார இதழையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

ஐயா சாமி...! ஆபாசமாக படமெடுக்கவே இல்லை..!

எனது மகளை ஆபாசமாக படமெடுத்தனர் என்று தயாரிப்பாளர் ரவிதேவன் மீது தரப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளார்.


சென்னை சாலிக்கிராமம் காவரித் தெருவைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. துணை நடிகை. அவரை விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க தயாரிப்பாளர் ரவிதேவன் ஒப்பந்தம் செய்தார். விளம்பரப் படத்தை இயக்கியவர் ராமநாதன்.


ஆண்மைவிருத்தி சம்பந்தப்பட்ட காமசூத்ரா மாத்திரை விளம்பரம் அது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் பாக்யஸ்ரீ முதலிரவு அறைக்குள் பாலுக்கு பதில் காமசூத்ரா மாத்திரைகள் அடங்கிய சிறிய பெட்டியுடன் செல்வதாக விளம்பரம் எடுக்கப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்த பிறகு, எனது மகளை வைத்து ஆபாசப் படம் எடுத்தனர் என்று பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரை ரவிதேவன் மறுத்தார்.


சம்பந்தப்பட்ட விளம்பரத்தை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பித்தார். படத்தில் நடிக்க சம்மதித்து, படப்பிடிப்பு நடந்த பிறகு பிரச்சனை செய்வது சரியல்ல என்றவர், பணம் தந்தால் புகாரை வாபஸ் வாங்குவதாக போனில் முகம் தெரியாதவர்கள் மிரட்டுவதாகவும் கூறினார். 

அமர்க்களமாக நடந்த மான் கராத்தே ஆடியோ விழா (படங்கள்)

சும்மா சொல்லவில்லை. படுஅமர்க்களமாகதான் நடந்தது மான் கராத்தே பாடல்கள் வெளியீட்டுவிழா. அரங்கு கொள்ளாத அழைப்பாளர்களுடன் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் முட்டி மோதியதில் சில விரும்பத்தகாத சம்பவங்கள். தடித்தடியாக இருந்த பவுன்சர்கள் அழைக்கப்பட்டவர்களையும் அலைக்கழித்தவிதம் பலரை முகம் சுழிக்க வைத்தது.


சிறப்பு அழைப்பாளர் ஷங்கர். நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன் என்றவர் அவரின் ஒவ்வொரு படத்தை குறிப்பிட்டு பேசியது, மேடை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட வெறும் வார்த்தையல்ல என்பதை உணர்த்தியது. நான் காரில் ஏறினால் வணக்கம் சென்னை பாடல்கள்தான் ஒலிக்கும் என்றது அனிருத்தை கள்வெறி கொள்ள வைத்திருக்கும்.



சரியான பாதையில் போய்கிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயன் பற்றி சொன்னவர், இப்படியோ போனால் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைந்து கொள்ளலாம் என்றார்.


இது மட்டும் சிவ கார்த்திகேயனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. விழா நெடுக கும்மியடித்த ரசிகர்களும், சிவ கார்த்திகேயனின் பேச்சும், அவர் ஏற்கனவே முன்னணி லிஸ்டில் இருப்பதை போலதான் இருந்தது.


என்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் இந்த நிலைக்கு வர ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் என்னை விழாமல் தாங்கிப் பிடிப்பார்கள் என்றார் சிவ கார்த்திகேயன்.


அண்ணாத்தே விரைவில் கட்சி ஆரம்பித்து சிஎம் போஸ்டுக்கு கர்ச்சீஃப் போடுவார் போலத் தோன்றியது. விழா நெடுக வருங்கால சூப்பர்ஸ்டார் என்று மேடையில் இருந்தவர்களும், ரசிகர்களும் கூச்சலிட்டதே அதற்கு சான்று.

நான் வளர்கிறேனே முருகா...


நடிகைகள் கோயிலுக்குச் செல்வதும், பூஜை செய்து யாகம் வளர்ப்பதும் அதிசயமில்லை. அதுபோலதான் லட்சுமி மேனன் பழனிக்கு வந்ததும், தங்கத்தேர் இழுத்ததும்.


மலையாளிகள் என்னதான் தமிழர்களை மட்டம் தட்டினாலும் ஆன்மீக விஷயத்தில் மலையாளி இந்துக்களுக்கு பழனியும், கிறிஸ்தவர்களுக்கு வேளாங்கண்ணியும் தவிர்க்க முடியாத வழிபாட்டுத்தலங்கள். குழந்தைகளின் முதல்முடியை காணிக்கை செலுத்த மலையாளிகள் அதிகம் படையெடுப்பது பழனிக்குதான்.


லட்சுமிமேனன் முதல்முறை பழனி வந்தபோது கும்கியில் நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது முருகனிடம் தமிழ், மலையாளத்தில் அதிக படங்கள் செய்ய வேண்டும், செய்கிற படங்கள் வெற்றிபெற வேண்டும், சினிமாவில் நிலையான இடத்தைப் பிடிக்க வேண்டும், எல்லாம் நடந்தால் தங்கத்தேர் இழுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டாராம்.


முருகன் அருளால் நான் இப்போது வளர்ந்து வருகிறேன். அதனால்தான் தங்கத்தேர் இழுக்க வந்தேன் என்றார் லட்சுமிமேனன்.


தமிழ்க் கடவுளான முருகா... மலையாள நடிகையை வளர வைத்த நீ தமிழ் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பே வழங்குவதில்லையே. முருகா... இதென்ன ஓரவஞ்சனை.

ஷகிலா வேடத்தில் நடிப்பதாக வதந்தி : அஞ்சலி!!

கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை சினிமா படமாகிறது. இதற்கான திரைக்கதையை ஷகிலாவே எழுதி உள்ளார். சினிமா அனுபவங்கள், கதாநாயகியாக ஆசைப்பட்டு கவர்ச்சி நடிகை ஆக்கப்பட்டது, திரைக்குப் பின்னால் தனக்கு நேர்ந்த தொல்லைகள், மலையாள பட உலகினர் பின்னிய சதி வலைகள் அனைத்தையும் ஷகிலா இந்த படம் மூலம் காட்சிப்படுத்த உள்ளார்.


இந்தியில் டேர்டி பிக்சர் பெயரில் படமான சில்க் சுமிதா வாழ்க்கை கதை வெற்றிகரமாக ஓடியதால் இதுவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் ஷகிலாவாக அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் வந்தன. அஞ்சலி தற்போது மீண்டும் மாயமாகி விட்டதாகவும், அமெரிக்காவில் குடியேறி விட்டார் என்றும் செய்திகள் வந்தன.


இந்த நிலையில் அவர் திடீரென ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது..


நான் ஷகிலா வேடத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளன. அதில் உண்மை இல்லை. அந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவில்லை அதற்கு பதில் வேறொரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த கதை எனக்கு ரொம்ப பிடித்தது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை. இதுபோன்ற கதையைதான் நான் தேடிக்கொண்டு இருந்தேன்.


இயக்குனர் சொன்னதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனை படமாக இருக்கும். எல்லோருக்கும் படம் பிடிக்கும் என்று அஞ்சலி கூறினார்.

மதுவுக்கு நோ! சொல்லும் குடிமகன்!

சந்தானத்துடன் சேர்ந்துகொண்டு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சரக்கடிப்பார் உதயநிதி.. ஆனால் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் காதல் தோல்வியால் புலம்பினாலும்கூட சந்தானம் மட்டுமே ட்ரிங்ஸ் அருந்துவார். உதயநிதி அதை தொடாமல் பேசிக்கொண்டு மட்டும் இருப்பார்.


இதற்கு உதயநிதி சொல்லும் காரணம் நம்மை வியக்க வைக்கிறது..”என்னுடைய படங்களில் நான் மது அருந்துவது மாதிரியான காட்சிகளில் மது அருந்துவது போல நடிப்பதை தவிர்த்துவிடுகிறேன்.. இயக்குனரின் கதைப்படி காட்சிகளில் நான் தலையிட மாட்டேன்..


ஆனால் இனிவரும் என்னுடைய படங்களில் இது சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்கவேண்டி இருந்தாலும் கூட, நான் மது அருந்துவதில்லை என முடிவே செய்திருக்கிறேன்..” என்கிறார் உதயநிதி.


மேலும் “நான் வந்திருப்பது பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து. நான் நடிக்கும் கேரக்டர்கள் மூலமாக சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை. அதுவும் தவிர நமக்கும் சமூக பொறுப்பு என்பது இருக்கிறதே” என்றும் காரணம் கூறியுள்ளார். உதயநிதியின் இந்த முடிவு நிச்சயம் பாராட்டத்தக்கது.