Wednesday, 19 March 2014

சமுத்திரகனி இயக்கத்தில் - ´´கிட்ணா´´ எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!

சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.


 அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


நிமிர்ந்து நில் படத்தை பார்த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஐ.பி.எஸ். அதிகாரி வால்டர் தேவாரம் போன்றோர்கள் பாராட்டினார்கள். இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த சந்தோஷத்துடனேயே எனது அடுத்தப்பட வேலையை ஆரம்பித்துவிட்டேன்.


எனது அடுத்தப்படத்தின் தலைப்பு ´´கிட்ணா´´. கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் கிட்ணா. இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது.


இப்படத்தில் நானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளேன்.


என்னுடன் அமலாபால் நடிக்கிறார்.


முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.


அமலாபால் 1 வயது முதல் 45 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார். நான் 35 வயது முதல் 65 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறேன்.


படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. காடும் காடு சார்ந்த இடமும் தான் எனது படத்தின் கதைக்களம். நிச்சயம் இப்படம் அமலாபாலுக்கு நல்லதொரு பெயரை தரும் என்றார். 

Tuesday, 18 March 2014

தல – தளபதி ஷாக்! எல்லாம் போச்சி...?

நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை.


பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்று, தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டு படங்கள்தான் என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த இரண்டு படங்களில் ஒன்று கோலி சோடா, மற்றொன்று தெகிடி.


ஆனால் ஊடகங்களில் விஜய் நடித்த ஜில்லாவும், அஜீத் நடித்த வீரம் படமும் பெரும் வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தின. இந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல என்றும், அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.


பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்ற வெற்றியை கூட தல – தளபதி படங்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. மேலும் கோலிசோடா அதிகளவான தியேட்டர்களில் 50 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தெகிடி படமும் முதல் வார கலெக்ஷனைவிட, இரண்டாவது வார கலெக்ஷன் அதிகமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஹன்சிகா பேசியதை நீங்க கேட்டீங்களா! இது மான் கராத்தே கூத்து!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தின் பாடல் வெளியீடு நேற்று சென்னை சத்யம் சினிமா திரையரங்கில் நடந்தது.


அந்த விழாவில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ், தேவா, ஷங்கர், பிரபு சாலமன், சூரி, கேயார், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் ஹன்சிகா தமிழில் பேசி ஆடியன்ஸ் அனைவரையும் அசத்தினார். எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் தொடங்கிய ஹன்சிகா, இயக்குனரை பற்றி கூறும்போது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல இயக்குனர் சிறியவராக இருந்தாலும் பெரிய ஆள் என்று தெரிவித்தார்.


சிவகார்த்திகேயனை எஸ்.கே என்றுதான் தான் கூப்பிடுவதாகவும், அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.


இறுதியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் புகழ் சும்மா கிழி கிழின்னு இந்த படம் வந்துருக்கு என்று ஹன்சிகா சொல்லியபோது ஆடியன்ஸ் மத்தியில் பலத்த கரகோஷம் ஏற்பட்டது.

இவருதேன் அடுத்த சூப்பர் ஸ்டாராம்..?

ஒரு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டுகிறார்கள் என்றால் அதனை ஒரு மேடை நாகரிகம் என்பார்கள். அது கொஞ்சம் அளவு கடந்து போனால், ஜால்ரா என்பார்கள். அதுவே உதாரணத்துடன் சொன்னால் உண்மை என்பார்கள்.

இன்றைக்கு நடந்த ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், மற்றும் செயலாளர் டி.சிவா இருவருமே சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சிவாவே போதுமே சார் என்று சைகையால் கெஞ்சும் அளவுக்கு இவர்களது பேச்சு இருந்தது.

பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது, “நான் குவைத்திற்கு சென்றிருக்கும்போது அங்கே ஒரு லேப்டாப்பில் தமிழ்ப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் படத்தை நிறுத்துங்கள் என்றேன். ஆனால் குழந்தைகள் அனைவரும் அதனை எதிர்த்தார்கள். அதன் உளவியல் என்ன தெரியுமா..? இன்றைய தினத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்பது எனக்குப் புரிந்தது..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, “சொல்லப் போறது மேடையா இருந்தாலும் மேடைக்காக சொல்லலை. அவருடைய தொடர்ச்சியான 5 படங்கள். அவை கொடுத்த வெற்றி.. அவர் தனது பெர்மார்மென்ஸை வளர்த்துக்கிட்டிருக்குற வேகம். அவரைச் சுற்றியிருக்கிற நண்பர்கள்.. சின்னக் குழந்தை முதல் பெரியவங்கவரைக்கும் அவருக்குக் கிடைச்சிருக்குற ஆடியன்ஸ்.. இதையெல்லாம் வைச்சு சொல்றேன்.. இன்றைய இளையதலைமுறையின் சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..” என்றார்.

கேயார் பேசும்போது, “இன்னிக்கு ஒரு நடிகரோட கால்ஷீட்டுக்கு எத்தனை கோடி வேண்ணாலும் தரேன்னு சொல்லிட்டு தயாரிப்பாளர்கள் ஓடி வர்றாங்கன்னா அது சிவகார்த்திகேயனுக்குத்தான்.. இவரோட அடுத்தடுத்த படங்கள் தொடர்ச்சியாக சூப்பர்ஹிட்டா ஓடி கோடிகள்ல லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருப்பதை பார்த்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானோன்னு சொல்லத் தோணுது. முன்னாடில்லாம் எம்.ஜி.ஆர். படங்களுக்குத்தான் இப்படியொரு பேச்சு விநியோகஸ்தர்கள், தியேட்டர்கார்ர்கள் மத்தில இருக்கும். இன்னிக்கு சிவகார்த்திகேயன் படமா.. என்ன ஏதுன்னு கேக்காமலேயே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ரெடியா இருக்காங்க. அந்த அளவுக்கு இவரோட வளர்ச்சி இருக்கு..” என்றார்.

இப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ரெண்டு பேருமே ஏற்றிவிட்டுப் போனார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் காசு விஷயத்தில் ரொம்ப கெட்டியாக இருக்கிறார் என்று திரையுலகில் பலமான பேச்சு.. சம்பளமும் வாங்கிக் கொண்டு லாபத்திலும் பங்கு கேட்கும்விதமாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் என்று முணுமுணுக்கிறார்கள். வருவதை வாங்கிக் கொண்டு நடிக்கும் சாதாரண நடிகரல்ல அவர் என்பது அவரது பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம். இந்தப் படத்துக்காக பெரிய பட்ஜெட்ல செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் கண்டிப்பா பெருசாத்தான் இருக்கும். தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும். நான் ஆர்ட்டிஸ்டா..? ஸ்டாரா..? ஹீரோவா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும்போது என்னைப் பார்த்தால் ரசிகர்கள் சந்தோஷப்படணும். இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன். இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியமும் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு… இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும்போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்…” என்றார்.

தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களின்போதும், பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸின்போதும் தியேட்டர் கட்டணங்கள் அளவு கடந்து உயர்த்தப்பட்டு ரசிகர்களின் பர்ஸ் காலியாகிறது என்கிற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல்தான் நமது ஹீரோக்கள் கோடிகளை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதே மனப்பான்மையோடு சிவகார்த்திகேயனும் இருப்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது..

“தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.” என்பதெல்லாம் “எவ்வளவுன்னாலும் கொடுத்துப் பாருங்க.. படம் நல்லாயிருக்கும்”னு தனது வெள்ளந்தியான வார்த்தைகளால் ரசிகர்களின் பாக்கெட்டில் உரிமையோடு கையைவிட்டு பணத்தைச் சுடுகிறார் என்றுதான் தோன்றுகிறது..!

கேயார் தெரிவித்த மேடை நாகரிக வார்த்தைகளுக்கு ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரென்று பார்த்தால் மனிதர் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், “இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார்.

வருத்தமாகத்தான் இருக்கிறது.. பணத்தினை மட்டுமே மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் சூட்டப்படவில்லை என்பது இங்கே யாருக்கு புரியப் போகிறது..!?

என் மகன் லவ்வை அத்துவிட்டுட்டாரே: புலம்பிய டாடிக்கு இயக்குனர் செம டோஸ்!


என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம்.


விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார். அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார். அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான்.


இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது.


இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.

உதயமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம், பத்திரிகையும் வரப்போகிறது!

இளையராஜாவின் பெயரில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கயிருக்கிறது. இசைஞானி என்ற பெயரில் வாரப்பத்திரிகையும் வெளிவர உள்ளது.


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் பலர் தனிப்பட்ட முறையில் ஒன்றிணைந்து அவர் பெயரில் மன்றங்களும், பேரவையும் வைத்துள்ளனர். வருடந்தோறும் இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால் இளையராஜாவின் சம்மதத்துடன் அவரது பெயரில் ரசிகர் மனற்ம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இளையராஜாவின் சம்மதத்தடன் தொடங்கப்படும் இந்த அமைப்பானது, இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாகக் கொண்டு செயல்படும்.


அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் அமைப்பாக இளையராஜா ரசிகர் மன்றம் இருக்கும். இந்த மன்றத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு, சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கயிருக்கிறாராம் இளையராஜா.


மன்றம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5 மதுரையில் நடக்கயிருக்கும் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட உள்ளனர். அன்று இசைஞானி வார இதழையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

ஐயா சாமி...! ஆபாசமாக படமெடுக்கவே இல்லை..!

எனது மகளை ஆபாசமாக படமெடுத்தனர் என்று தயாரிப்பாளர் ரவிதேவன் மீது தரப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளார்.


சென்னை சாலிக்கிராமம் காவரித் தெருவைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. துணை நடிகை. அவரை விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க தயாரிப்பாளர் ரவிதேவன் ஒப்பந்தம் செய்தார். விளம்பரப் படத்தை இயக்கியவர் ராமநாதன்.


ஆண்மைவிருத்தி சம்பந்தப்பட்ட காமசூத்ரா மாத்திரை விளம்பரம் அது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் பாக்யஸ்ரீ முதலிரவு அறைக்குள் பாலுக்கு பதில் காமசூத்ரா மாத்திரைகள் அடங்கிய சிறிய பெட்டியுடன் செல்வதாக விளம்பரம் எடுக்கப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்த பிறகு, எனது மகளை வைத்து ஆபாசப் படம் எடுத்தனர் என்று பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரை ரவிதேவன் மறுத்தார்.


சம்பந்தப்பட்ட விளம்பரத்தை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பித்தார். படத்தில் நடிக்க சம்மதித்து, படப்பிடிப்பு நடந்த பிறகு பிரச்சனை செய்வது சரியல்ல என்றவர், பணம் தந்தால் புகாரை வாபஸ் வாங்குவதாக போனில் முகம் தெரியாதவர்கள் மிரட்டுவதாகவும் கூறினார்.