Saturday, 15 March 2014

மீண்டும் ஜோடி சேரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், லட்சுமி!


பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமியும் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். இவர்கள் இணையும் படத்தை மதுமிதா இயக்குகிறார்.


பாலசுப்பிரமணியமும், லட்சுமியும் தெலுங்குப் படமான மிதுனத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படமும், இவர்களின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது.


அந்தப் படத்தைப் பார்த்த மதுமிதா தனது மூணே மூணு வார்த்தை படத்தில் இவர்களை நடிக்க வைத்துள்ளார்.


கொலகொலயாய் முந்திரிக்கா படத்துக்குப் பிறகு மதுமிதா இந்தப் படத்தை இயக்குகிறார். எஸ்.பி.பி.யின் மகன் சரண் படத்தை தயாரிக்கிறார்.


அர்ஜுன் சிதம்பரம், அதிதி செங்கப்பா, வெங்கடேஷ் ஹரிநாதன் நடிக்கும் இப்படத்தில் ஹீரோவின் தாத்தா, பாட்டியாக எஸ்.பி.பி.யும், லட்சுமியும் வருகின்றனர்.


இவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதிஹாசன்!

விஷாலின் புதிய படத்தில் அவரது ஜோ‌டியாக ஸ்ருதி நடிக்க உள்ளார். இந்தத் தகவலை நான் சிகப்பு மனிதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷால் கூறினார்.


பாண்டியநாடு படத்தைத் தொடர்ந்து நான் சிகப்பு மனிதனிலும் லட்சுமிமேனனுடன் நடித்தார் விஷால். லட்சுமிமேனன் மீது விஷாலுக்கு தனிப்பட்ட அன்பு என்று இதனை பலர் திரித்து எழுதினர்.


 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிலும் நடிகர் விஷ்ணு லட்சுமிமேனனை முன்னிறுத்தி விஷாலை கிண்டல் செய்தார்.


அவரது பேச்சுக்கு பதிலளித்து பேசிய விஷால் அடுத்தப் படத்தில் ஸ்ருதியுடன் நடிப்பதாக கூறினார்.


ஸ்ருதி தமிழில் நடித்த 7 ஆம் அறிவு, 3 படங்கள் சரியாகப் போகவில்லை. இந்தி, தெலுங்கிலும் ஸ்ருதியின் முதல் படங்கள் தோல்வியடைந்து அதன் பிறகே வெற்றியை ருசித்தார்.



 தமிழில் முதலிரு படங்கள் தோல்வியடைந்தாலும் மூன்றாவதாக விஷாலுடன் நடிக்கும் படம் வெற்றியைத் தேடித் தருமா?

எனது மகனும் நடிப்பார் - மு.க.அழகிரி

மு.க.அழகிரியின் மகனும் கிளவுட் நைன், மீகா நிறுவனங்கள் சார்பாக படங்கள் தயாரித்து வருகிறவருமான துரை தயாநிதி விரைவில் நடிகராகிறார். இந்தச் செய்தியை ரஜினியை சந்தித்த பின் பத்திரிகையாளர்களிடம் மு.க.அழகிரி கூறினார்.


இன்று காலை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு மகன் துரை தயாநிதியுடன் சென்றார் அழகிரி. நீண்ட நேரம் அவர்கள் பேசினர்.



ரஜினியை சந்தித்துவிட்டு வந்த அழகிரி ரஜினியை சந்தித்ததற்கான காரணத்தை பத்திரிகையாளர்களிடம் கூறினார். அத்துடன் தனது மகன் நடிக்கயிருக்கும் படம் பற்றி ரஜினியுடன் பேசியதாகவும் தெரிவித்தார்.



ஸ்டாலின், அழகிரி யுத்தம் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்டாலினின் மகன் உதயநிதி படங்களை தயாரிப்பதுடன் நடிக்கவும் செய்கிறார். அவருக்கு போட்டியாக துரை தயாநிதியும் நடிப்பில் இறங்குகிறாரா?



வரும் நாள்களில் அரசியல் களமும், சினிமாதுறையும் பல்வேறு ஆச்சரியங்களை சந்திக்கும் என்பதை இந்த சந்திப்பு உணர்த்துகிறது.

Friday, 14 March 2014

விஷாலின் நாசுக்கான பேச்சை நம்பும் நடிகர்!

விஷால்-விக்ராந்த் இருவருமே நல்ல நண்பர்கள். அதன் அடிப்படையில்தான் மார்க்கெட்டில் எழ முடியாமல் தடுமாறிக்கொண்டு வந்த அவருக்கு தனது பாண்டியநாடு படத்தில் நல்லதொரு வேடத்தை கொடுத்து கைதூக்கி விட்டார் விஷால்.


இதனால் நெகிழ்ந்து போன விக்ராந்த், இதே சினிமாவில் எனக்கு நெருக்கமான அண்ணன் இருந்து செய்யாத உதவியை விஷால் செய்து விட்டார் என்று அவரை பெருமையாக பேசினார்.


ஆனால், அதையடுத்து தான் நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் படத்தில் விக்ராந்துக்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை விஷால். அதனால் இதுகுறித்து அவரைக்கேட்டால், இந்த படத்தில் விக்ராந்துககு ஏற்ற வேடம் இல்லை. அதனால் கொடுக்கவில்லை. ஆனால், அவரை வைத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன் என்கிறார்.


அப்படி விக்ராந்த்தை வைத்து தயாரிக்கும் படத்தில் நான் இருக்க மாட்டேன். அந்த படத்தில் அவர் மட்டுமே நாயகன். அதனால், இந்த படத்தில் சின்ன கேரக்டரை கொடுத்து அவரது ரேஞ்சை இறக்க வேண்டாமே என்ற ஒரு எண்ணமும் மனதளவில் இருந்ததால் அவரை இந்த படத்தில் பயன்படுத்தவில்லை என்று கூறும் விஷால், விக்ராந்துக்காக வித்தியாசமான கதையை தேடிக்கொண்டிருக்கிறோம் என்கிறார்.

கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியாச்சு!

பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் பசங்க நடித்த கோலிசோடா ரொம்ப பவர்புல்லாக அமைந்து விட்டது. கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியிருக்கிறது.


தொடர்ந்து 50 நாட்களாக கோலிசோடாவின் விற்பனை குறையவில்லை. 75 லட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்ட கோலிசோடா, இதுவரைக்கும் 7 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், தயாரிப்பாளர் ஷேர் மட்டும் 5 கோடிக்கு மேல் கிடைத்திருப்பதாகவும் விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


படத்தை இயக்கிய விஜய் மில்டனை, விஜய்யிலிருந்து விஜய் சேதுபதி வரைக்கும் பாராட்டி, அடுத்து எனக்கொரு கதை ரெடி பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார்கள். படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா ஆகியோருக்கும் அடுத்த படங்கள் கிடைத்திருக்கிறது.


விஜய் மில்டன் தற்போது பாலாஜி சக்திவேலின் ரா...ரா...ரா...ராஜ்குமார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


இதே நிறுவனத்திற்கு தான் விஜய்மில்டன் அடுத்த படம் இயக்க இருக்கிறார். கோலிசோடாவை பார்க்க தவறவிட்டவர்கள் இப்போதும் சத்யம், எஸ்கேப், தேவி, அபிராமி, பிவிஆர், மாயாஜால் மால் தியேட்டர்களில் பார்க்கலாம்.

கோச்சடையான் - என்ன ரீலுவிட்டாலும் ஓடவே ஓடாது...?

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினியின் கோச்சடையான் படத்தின் ஆடியோ, டிரைலர் வெளியீட்டு விழா நடந்ததையடுத்து அப்படத்தின் பாடல் மற்றும் டரைலரும் யு.டியூப்பில் வெளியிடப்பட்டது.


அதை இரண்டே நாளில் 12 லட்சம் ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். அதைப்பார்த்து சில ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளியிட்டபோதும், பலர் இதென்ன கார்ட்டூன் படம் மாதிரி உள்ளது என்று அதிருப்தியை தெரிவித்துள்ளார்களாம்.


ரசிகர்களின் இந்த கருத்து அப்படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை பெரும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது. அதையடுத்து ரசிகர்களை தெளிவுபடுத்தும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டிருக்கிறார். அதையடுத்து செளந்தர்யா வெளியிட்டுள்ள செய்தியில், கோச்சடையானை கார்ட்டூன் படம் என்று நினைக்கக்கூடாது.


 இதுஒரு அனிமேஷன் படம். அவதார், டின் டின் போன்ற படங்களை எப்படி ரசித்தீர்களோ அதேபோன்ற மனநிலையுடன் ரசிக்க வேண்டும். மாறாக, ரஜினியின் முந்தைய படங்களை மனதில் கொண்டு இப்படத்தை பார்க்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும், கோச்சடையானில் நிஜ ரஜினியை திரையில் பார்க்க முடியாது. அனிமேஷன் வடிவில்தான் பார்க்க முடியும். ஆனால், எல்லா வகையிலும ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இப்படம் ரஜினியின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார் செளந்தர்யா.

யோவ்வ்.. என்னையான்யா காப்பியடிச்ச...? பாலாவின் மிரட்டல் கேள்வி?

தீராத விளையாட்டுப்பிள்ளை, சமர் படங்களை அடுத்து விஷாலை நாயகனாகக்கொண்டு திரு இயக்கியுள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. பாண்டியநாடு படத்தை அடுத்து இப்படத்தையும் விஷால், தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார்.


 ரஜினி ஏற்கனவே நடித்த படத்தின் தலைப்பு என்றபோதும், அந்த படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத அளவுக்கு மாறுபட்ட கதையில் அதாவது திடீர் திடீரென்று தூங்கி விழும் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார் விஷால்.


இந்நிலையில், நேற்று நடந்த நான் சிகப்பு மனிதன் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தைப்பற்றி பலரும் ஜாலியாக பேசினார். அதிலும் எந்த விழாவிலும் அதிகமாக பேசாத டைரக்டர் பாலாவும் இந்த விழாவில் ஜாலியாக பேசினார். அவர் பேசும்போது, இந்த படத்தில் எனது நிஜ கேரக்டரையே காப்பியடித்து படமாக்கி விட்டனர் என்றார்.


 காரணம், நான் தினமும் காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 11 மணிக்குத்தான் ஸ்பாட்டுக்கு செல்வேன். அதேமாதிரி,நள்ளிரவு படப்பிடிப்பு என்றால் அதிகாலையில்தான் செல்வேன். இதை நான் வேணுமென்று செய்யவில்லை. எல்லாத்துக்கும் காரணம் தூக்கம்தான்.



நல்லா தூங்கி விடுவேன். அதனால் இந்த படத்தில் விஷால் தூங்கிக் கொண்டேயிருப்பார் என்பதை கேள்விப்பட்டதும் என்னை காப்பியடித்துதான் இந்த கேரக்டரை டைரக்டர் திரு உருவாக்கி விட்டனர் என்று தோன்றியது என்று பாலா கிண்டலாக பேச, விழா அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது.