Sunday, 2 February 2014

‘இது நம்ம ஆளு ‘ ஆகுமா ? தலைப்பு மாறப்போகிறது...?

சிம்பு – நயன் – சூரி கூட்டணியில் உருவாகி வரும் தனது புதிய படத்தை காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார், இயக்குநர் பாண்டிராஜ். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. சூட்டிங் முடிந்ததும் அதன் எடிட்டிங் வேலைகளை உடனுக்குடன் முடித்து பம்பரமாய்ச் சுற்றிவரும் இயக்குநர் பாண்டிராஜிடம் பேசினோம்.

‘‘சிம்பு, நயன் கூட்டணியை மையமாக வைத்துள்ள காட்சிகள் கலர்ஃபுல்லாக வந்திருக்கிறது. மூன்று செட்யூல் ஷூட்டிங் முடிந்தது. அடுத்த செட்யூல் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் படமாக்கப்பட உள்ளது. படத்தின் தலைப்பை இன்னும் இறுதி செய்யவில்லை. ‘இது நம்ம ஆளு’ என்பதை ஒரு யோசனையாகத்தான் வைத்திருக்கிறோம். அதேபோல படத்தில் சிம்புக்கு இன்னொரு ஜோடியும் உண்டு. அவர் யார் என்கிற தேர்வில்தான் இப்போது கவனம் செலுத்தி வருகிறோம்.

படத்தில் சிம்புக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ் நடிக்கிறார். நயன்தாரா சேலை சுடிதார் என்று முழுக்க முழுக்க குடும்பப் பாங்கான பெண்ணாக வலம் வருவார். சூரிக்கும் நயனுக்கும் இடையிலான காமெடி டிராக்கை தனியே 2 நாட்கள் ஷூட் செய்தோம். எல்லோரும் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்த நாட்களாகவே அவை மாறிப்போனது. இந்தப் படம் கமர்ஷியல் படமாக இருந்தாலும் கண்ணியமாக படம் எடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். அதனாலேயே படத்தில் குத்துப்பாடல், கவர்ச்சி ஆட்டத்திற்கு வேலையே வைக்கவில்லை. படத்தின் பாடலின் அமைப்புக்கும் சூழலுக்கும் அவசியம் என்றால் வெளிநாட்டில் ஷூட் செய்யலாம்.

இதுவரைக்கும் அப்படி ஒரு யோசனை தோன்றவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் இப்படத்தில் சிம்புவும்

நயனும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். அது படத்திற்கு பலமாக இருக்கும்!’’ என்றார், பாண்டிராஜ்.

0 comments:

Post a Comment