Thursday, 13 March 2014

குக்கூவுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு! யூ சான்றிதழும் வரிவிலக்கும் கிடைத்தது..!


திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் குக்கூ. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் இயக்கி உள்ளார். இவர் லிங்குசாமியிடம் உதவியாளராக இருந்தவர்.


அண்மையில் நடந்த இதன் பாடல் வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட பாடல்களும், டிரைலரும் படத்துக்கு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


மேடையிலேயே நடிகர் சூர்யா, ராஜுமுருகனுக்கு தலைவணங்கி மரியாதை செய்தது படத்தின் மதிப்பை இன்னும் கூட்டியிருக்கிறது.


குக்கூவை பார்த்த தணிக்கை குழுவினரும் இயக்குனரை மனதார பாராட்டி உள்ளனர். யு சான்றிதழும் வழங்கி உள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் வரிவிலக்கும் கிடைத்து விடும்.


 அட்டகத்தி தினேஷூடன் மாளவிகா என்ற புதுமுகம் நடித்துள்ளார். நெரிசலும், இரைச்சலும், நிறைந்த சென்னை நகரத்தில் வாழும் இரு பார்வையற்றவர்களின் காதல் கதை.


அந்த காதலோடு பார்வையற்றோர்கள் வாழும் உலகத்தை காட்டுகிற படம். வருகிற 21ந் தேதி ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment