Thursday, 13 March 2014

ஜெயிக்கப்போவது குருவா..? சிஷ்யனா..?

தமிழ் சினிமாவை கலக்கிய காமெடியன்களில் கவுண்டமணி, வடிவேலு ஆகிய இருவருக்கும் தனி இடம் உண்டு. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அவர்கள், தற்போது மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.


கவுண்டமணி, வாய்மை, 49ஓ ஆகிய படங்களிலும், வடிவேலு ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலும் தற்போது நடித்துள்ளனர்.


 இதில் கவுண்டமணி நடித்த 49ஓ, வடிவேலுவின் தெனாலிராமன் படங்களின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதனால், ஏப்ரல் மாதம் அப்படங்களை வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது.


இதே மாதத்தில் ரஜினியின் கோச்சடையான், விஷாலின் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயனின் மான்கராத்தே உள்பட பல படங்கள் திரைக்கு வர உள்ளன.


 என்றாலும், ஒரே நேரத்தில் இரண்டு மெகா காமெடியன்கள் நடித்த படங்கள் வெளியாவதால், இவர்களுக்கிடையேயும் ஒரு போட்டியை உருவாக்கி விட்டு பரபரப்பு கூட்ட முடிவு செய்துள்ளனர்.


அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது தடபுடலாக நடைபெறும் கட்அவுட் கலாசாரம், மேற்படி காமெடியன்களின் படங்கள் வெளியாகும்போது உருவாகும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment