Thursday, 13 March 2014

சிங்கம் படத்தை வெறுக்கும் - சூர்யா! காரணம் என்ன..?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் திரைப்படத்தின் நடித்துவரும் சூர்யா, இப்படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.


வெங்கட் பிரபு படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படத்திற்குக் கதை சொல்லும் இயக்குனர்கள் பெரும்பாலும் சிங்கம் படத்தின் பாணியிலேயே கதை சொல்வதாகவும், அப்படம் மாதிரியான கதைகளைத் தன்னிடம் கூற வேண்டாம் என்று சொல்லிவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


சூர்யாவின் கேரியரில் சிங்கம் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் மிக முக்கியமான பங்களிப்பினைச் செய்துள்ள படங்களாகும்.


குறிப்பாக சிங்கம்-2 படம் ஆந்திராவில் சக்கைப்போடு போட்டு, தெலுங்கு ரசிகர்களையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.


ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது என்பதால் சூர்யா இந்த முடிவிற்கு வந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


தற்பொழுது சூர்யா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புக்கள் நிறைவடைந்துள்ளன.


இதுவரை படம்பிடிக்கப்பட்டுள்ள காட்சிகளால் சூர்யா மிகவும் திருப்தியாக இருப்பதாக் கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட்டில் இப்படத்தினை வெளியிடப் படக்குழு தீர்மானித்துள்ளது.


அஞ்சான் திரைப்படத்தில் முதல் முறையாக சூர்யா- சமந்தா ஜோடி சேர்ந்துள்ளனர்.

0 comments:

Post a Comment