Thursday 13 March 2014

லட்சுமி மேனனுக்காக விஷால் - விஷ்ணுக்குயிடையே பெருஞ்சண்டை!

பாண்டியநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் - லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள படம் ''நான் சிகப்பு மனிதன்''. திரு இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி மேனன் முதன்முறையாக முத்தக்காட்சிகளில் எல்லாம் நடித்துள்ளார்.


இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மார்ச் 13ம் தேதி) சென்னையில் நடந்தது. இவ்விழாவில் நடிகர்கள் விஷ்ணு, விக்ரகாந்த் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


அப்போது விழாவில் பேசிய விஷ்ணு, விஷாலிடம், 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் ஷூட்டிங்கை காண, நான் வருகிறேன் என்று கூறினேன். விஷால் பலமுறை தட்டி கழித்தார். பின்னர் அவரே ஒருநாள் என்னை வர சொன்னார்.


அங்கு விஷால், லட்சுமி மேனனுக்கு தடபுடலாக விருந்து வைத்து கொண்டிருந்தார். நான் லட்சுமி மேனனை பார்க்க எண்ணினேன், ஆனால் கடைசிவரை என்னை, லட்சுமி மேனனை பார்க்கவே விஷால் விடவில்லை. விஷால் என்ன லட்சுமி மேனனுக்கு பாதுகாவலரா என்று நகைச்சுவையாக கேட்டார்.


விஷ்ணுவுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஷால், விஷ்ணு தானாக இப்படி பேசவில்லை. யாரோ பேசச்சொல்லி கேட்பது போன்று தோன்றுகிறது. நான் ஹீரோயின்களை ரொம்பவே மதிக்கிறேன். பாலா சாரின் அவன் இவன் படத்தில் நடித்தபோது பெண்கள் மீதான மரியாதை இன்னும் அதிகரித்தது.


அந்தப்படத்தில் பெண் வேடத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக பாலா சார் எனக்கு 10 நாட்களுக்கு மேல் பயிற்சி கொடுத்தார். பெண்களின் நடை, உடை, பாவனை எப்படி என்று கற்றுக்கொள்ள அவர்களிடம் நேரடியாக பழகவிட்டு எனக்கு பயிற்சி கொடுத்தார். பெண் போன்று நடிப்பதற்கு நான் கிட்டத்தட்ட ஒருவாரம் ஆனது. அப்போது முதல் பெண்களின் மீதான மதிப்பு எனக்கு கூடிவிட்டது.


லட்சுமி மேனன் மிகவும் சின்னப்பொண்ணு, அவர் பயந்த சுபாவம் உடையவர். விஷ்ணுவின் அப்பாவோ ஐ.ஜி.யாக இருப்பவர். விஷ்ணு சும்மா எதேச்சையாக லட்சுமியிடம் பேசப்போக அவர் ஈவ்டீசிங் என பயந்து போலீஸை கூப்பிட்டுவிட்டால், பிறகு விஷ்ணுவின் அப்பாவான ஐ.ஜி.யே தன் மகனை கைது செய்து அழைத்து போக நேரிடும். அப்படி ஒரு விபரீதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் விஷ்ணுவை, லட்சுமி மேனனை பார்க்க நான் அனுமதிக்கவில்லை என்று நகைச்சுவையாக கூறினார். 

0 comments:

Post a Comment