Saturday, 15 March 2014

வெற்றிமாறன் + தனுஷ் + பார்த்திபன் = வெற்றி (or) மெகாவெற்றி!

 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


'பொல்லாதவன்', 'ஆடுகளம்' படத்தினைத் தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


முதலில் இந்தியில், இக்கதையினை இயக்கத் திட்டமிட்ட வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி, தற்போது தமிழிலேயே பண்ணலாம் என்று திட்டமிட்டு கதையில் சிறுசிறு மாற்றங்களை செய்திருக்கிறது.


தற்போது இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடிகர் பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தனுஷ், பார்த்திபனுடன் வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.


நாயகி, இசையமைப்பாளர் என்ற அனைத்தையுமே சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். இப்படத்தினை தனுஷ் நடித்து, தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment