Friday, 7 February 2014

சில்லி சிக்கன் கராஹி - சமையல்!

தேவையான பொருட்கள்:

கோழி – 500 கிராம்

பச்சை மிளகாய் – 5.

கசகசா – அரை தேக்கரண்டி.

மிளகாய்ப் பொடி – 1 தேக்கரண்டி.

இஞ்சி (அரைத்தது) – 1 தேக்கரண்டி.

பூண்டு (அரைத்தது) – 2 தேக்கரண்டி.

கொத்தமல்லி பொடி – 1 தேக்கரண்டி.

எலுமிச்சை பழங்கள் – 2

நறுக்கிய வெங்காயம் 2.

நறுக்கிய தக்காளி – 2.

கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:

ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அரைத்த இஞ்சியை ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு இவை இரண்டையும் கோழிக் கறியுடன் சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். 2 பச்சை மிளகாய்களை எண்ணெயில் விட்டு லேசாக வறுக்கவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய், கறிவேப்பிலை, கசகசா, சிறிது வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு சுமார் 2 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை இதில் போட்டு சுமார் 5 நிமிடம் வதக்கவும். மசாலாவை இதனுடன் சேர்க்க வேண்டாம்.

இப்போது கோழியை எடுத்து இதில் சேர்த்து பொன்னிறமாக வரும்  வரும் வரை கிண்டி விடவும். பிறகு தக்காளிகளையும் சேர்த்து சில நிமிடங்கள் நல்ல சூட்டில் வறுக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்கனவே வறுத்த பச்சை மிளகாய்கள், கொத்தமல்லி, மிச்சமுள்ள எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றை கறியுடன் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் ஊற விடவும்.

சப்பாத்தி , ரொட்டி அல்லது சாதத்துடன் பரிமாறவும்.

அஞ்சான் சூர்யா அதிக சம்பளத்திற்கு செய்த தந்திரம் என்ன?

அஞ்சான் படத்தில் ரூ.40 கோடி சம்பளம் வாங்குகிறாராம் சூர்யா.
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது.

இந்நிலையில் சூர்யா தற்போது லிங்குசாமி தயாரித்து இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு சம்பளம் 18 கோடி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுவாக சூர்யாவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. அதனால் இப்படத்தின் தெலுங்கு உரிமையையும் சூர்யா கேட்டிருக்கிறார்.

தயாரிப்புத் தரப்பு அதற்கும் சம்மதம் சொல்லிவிட்டதாம். தெலுங்கு உறுமை குறைந்தது 20 கோடியாவது போகும். அப்படியென்றால் சூர்யாவில் சம்பளம் 40 கோடியா? எaன்று கொலிவுட்டில் முணுமுணுக்கிறார்கள்.

, ரஜினிக்கு மகள் கோவிலில் வழிபாடு!

ரஜினியின் 2–வது மகள் சவுந்தர்யா. இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முடிவடைந்து வருகிற ஏப்ரல் மாதம் 11–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

கோச்சடையான் படம் வெளியாவதை தொடர்ந்து சவுந்தர்யா நேற்று கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கோவிலுக்கு சென்றார்.

அங்கு சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடுகளில் கலந்து கொண்ட அவர், கோவிலின் பிரதான நேர்ச்சையான துலாபாரம் நேர்ச்சையும் அளித்தார்.

இதில், ரஜினியின் எடைக்கு வெண்ணை சாத்துவதாக வேண்டிக் கொண்டார். அதன்படி சுமார் 75 கிலோ எடைக்கு வெண்ணை வழங்கி பிரார்த்தனை செய்தார்.

கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்த பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்த அவர், பின்னர் அங்கிருந்து தங்கியிருந்த விடுதிக்கு கிளம்பிச் சென்றார்.

கோச்சடையான் படம் முதல் முறையாக மோஷன் கேப்சர் என்ற தொழில் நுட்பத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. தற்போது நடத்தப்பட்டு வரும் படப்பிடிப்பு முறைக்கு இது மாற்று முறையாகும். இதனை டைரக்டர்கள் இந்திய சினிமாவின் முதல் முயற்சியாக கருதுகிறார்கள்.

இந்த படத்தில் ரஜினி 2 வேடம் ஏற்று நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். மேலும் சரத்குமார், நாசர், ஆதி, ருக்மணி உள்ளிட்டோரும் நடித்து இருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மராத்தி, போஜ்பூரி, வங்காளம், பஞ்சாபி போன்ற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவருகிறது.

சர்வதேச அளவில் ஆங்கிலத்திலும் இந்த படம் வெளியிடப்படுகிறது.

இதுபற்றி சவுந்தர்யா கூறும் போது, கோச்சடையான் படம் இந்திய சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றார். 

அலறும் கோலிவுட் நடிகைகள்!

பாணா காத்தாடி சமந்தாவுக்கு தமிழ் சினிமா ஆரம்பத்திலிருந்தே சோதனைக்களமாகவே இருந்துள்ளது. மணிரத்னம், ஷங்கர் என மெகா டைரக்டர்களின் படங்கள் கிடைத்தபோது, தோல் அலர்ஜி நோய் காரணமாக, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. அதன்பிறகு சில வருடங்களுக்குப்பிறகு சமீபத்தில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தில் கமிட்டானபோதும் அதே தோல் அலர்ஜி தலைதூக்கியது. இருப்பினும் சீரியசாக சிகிச்சை எடுத்து இப்போது கோடம்பாக்கத்தில் அதிரடி பிரவேசம் செய்ய தயாராகி விட்டார் சமந்தா.

அதைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருப்பதால், கோலிவுட்டிலுள்ள நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. காரணம், சமந்தாவை நாயகியாக்கினால், தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் படத்தை நல்ல விலைக்கு விற்று விடலாம். அதோடு, இங்குள்ள சில நடிகைகளை மாதிரியே தேவையில்லாத கண்டிசனெல்லாம் போடமாட்டார்.

குறிப்பாக, பாடல் காட்சிகளில் லிமிட் வைக்காமல், எந்த மாதிரி காஸ்டியூம் கொடுத்தாலும் அணிந்து நடித்து தாராள கவர்ச்சியை வழங்குவார் என்று படாதிபதிகளின் கவனம் சமந்தா பக்கம் திரும்பியிருப்பதுதான். இதனால், செக்போஸ்ட் தாண்ட மாட்டேன் என்று எக்குத்தப்பாக முடியை கோதிவிட்டபடி பேட்டி கொடுக்கும் சில இளவட்ட நடிகைகளும், சமந்தாவின் வரவு நம்மையும் சாய்த்து விடுமோ என்று கலவரமடைந்துள்ளனர்

‘உ’ உஉஊஊ... - திரைவிமர்சனம்!


திரைப்படத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் தம்பி ராமையா. ஒருநாள் இவர் சினிமா தயாரிப்பாளரான பயில்வான் ரங்கநாதனிடம் கதை சொல்கிறார். அங்கு அவரிடம் கதையின் கருவை மட்டும் சொல்கிறார். இதை ஏற்றுக்கொண்ட பயில்வான் ரங்கநாதன், கதையின் விரிவாக்கத்தை தயார் செய்யும்படி சொல்கிறார்.

கதையின் விரிவாக்கத்தை உருவாக்க தனக்கு உதவியாளர்கள் வேண்டும் என்று எண்ணுகிறார் தம்பி ராமையா. இதனால் இவருடன் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களை உதவியாளராக பணிப்புரிய அழைக்கிறார். அவர்கள் ''உனக்கே ஒன்றும் தெரியாது. உன்னிடம் நாங்கள் பணிபுரிவதா'' என்று இவரை கேலி கிண்டல் செய்கிறார்கள். இதனால் கோபம் அடையும் தம்பி ராமையா ஒருநாள் நான் படம் எடுத்து காண்பிக்கிறேன் என்று போதையில் அவர்களிடம் சவால் விட்டுச் செல்கிறார்.

தனியாக செல்லும் இவர் போதையில் வழியிலே விழுந்து விடுகிறார். அந்த வழியாக வரும் போலீசார் சந்தேகத்தின் பெயரில் இவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுகிறார்கள். அங்கு தம்பி ராமையா, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் நான்கு இளைஞர்களை சந்திக்கிறார். இவர்களை தனக்கு உதவியாளர்களை சேரும்படி அழைக்கிறார். இவர்களும் மறுப்பு தெரிவிக்காமல் பணிபுரிய சம்மதிக்கிறார்கள்.

நான்கு இளைஞர்கள் உதவியோடு தம்பி ராமையா கதையின் விரிவாக்கத்தை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கிடையில் இவர் சவால் விட்டு சென்ற இவரது நண்பர்கள், இவர் இயக்குனர் ஆகிவிட கூடாது என்று தம்பி ராமையா உருவாக்கும் படத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.

இவர்கள் செய்யும் தடைகளை தாண்டி படத்தை இயக்கினாரா? அந்தப்படம் வெற்றியடைந்ததா? என்பதே மீதிக்கதை.

படத்தில் தம்பி ராமையாவை வைத்து கதை பிண்ணப்பட்டிருக்கிறது. அதை முழுமையாக புரிந்து கொண்ட தம்பி ராமையா படத்தை தன் நடிப்பு திறமையால் கதையை அழகாக எடுத்துசென்றிருக்கிறார். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. இவர் மட்டும் தனித்து தெரிகிறார். தம்பி ராமையாவும் நான்கு இளைஞர்களும் செய்யும் அரட்டைகள் அருமை.

உதவியாளர்களாக வரும் நான்கு இளைஞர்கள் தங்களால் முடிந்தவரை சிரிப்பு வரவழைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் அவர்கள் ரசிக்கும்படி இருந்தாலும் அடுத்த காட்சியிலே வெறுப்பை வரவழைக்கிறார்கள். நாயகன், நாயகி என இவர்கள் எடுக்கும் படத்திலே வருவதுபோல் அமைக்கப்பட்டுள்ள காட்சி பார்ப்பவர்களுக்கு ரசிக்கும் படியாக இல்லை.

அபிஜித் ராமசாமி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சுமார்தான். ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவில் ஒரு சில காட்சிகளை ரசிக்கலாம். இளம் வயதிலேயே இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் ஆஷிக் நான்கு இளைஞர்களை வைத்து படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தை சுமந்து செல்லும் பெரிய பொறுப்பை தம்பி ராமையாவை மேல் சுமத்தியிருக்கிறார். இதில் இவர் வெற்றி கண்டிருக்கிறாரா என்பது கேள்வி குறி.

மீண்டும் அஜித்தின் புதிய இளமைத் தோற்றம்!

1980-90களில் கமலஹாசன், ரஜினிகாந்தின் ஆதிக்கம் தமிழ்த் திரையுலகில் மேலோங்கியிருந்தபோதே நவரச நாயகன் எனப்படும் நடிகர் கார்த்திக் தன்னுடைய நடிப்புத் திறமையினால் தனி முத்திரை பதித்தார். 100 படங்களுக்கும் மேலாக கதாநாயக அந்தஸ்தில் நடித்துள்ள இவர் தற்போது வில்லன் வேடங்களில் நடிக்க முன்வந்துள்ளார். ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிக்கும் 'அநேகன்' திரைப்படத்தில் இவர் வில்லனாக நடித்துவருகிறார். இப்போது ஏ.எம்.ரத்னத்தின் தயாரிப்பில் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்திலும் வில்லனாக நடிக்க கார்த்திக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்தும், கார்த்திக்கும் முன்பே இரு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் ஹீரோவாக நடித்த 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்தில் அஜித் கௌரவ வேடத்தில் தோன்றியுள்ளார். அதேபோல் அஜித் நடித்த 'ஆனந்தப் பூங்காற்றே' படத்தில் நடிகர் கார்த்திக் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் இந்தப் படங்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கு வந்தன.

'வீரம்' படத்தின் வெற்றியை அடுத்து அஜித், கெளதம் மேனனின் படத்தில் இணைந்துள்ளார். கௌதம் இயக்கத்தில் அஜித் நடிக்கும் முதல் படம் இதுவாகும். நிதிப் பிரச்சினைகளில் திண்டாடும் கெளதம் மேனனுக்கு உதவும் விதமாகவே அஜித் தானே முன்வந்து இந்தப் படத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படம் வெகு நேர்த்தியாகவும், நவீன உத்திகளுடனும் தயாரிக்கப்பட இருப்பதால் ஒப்பனைக் கலைஞர்களிலிருந்து நடனக் கலைஞர்கள் வரை ஹாலிவுட்டிலிருந்து வரவழைக்கப்பட உள்ளனர். அஜித்தும் சமீபத்திய கருப்பு, வெள்ளை தலைமுடியுடன் கூடிய தோற்றத்தை மாற்றி இந்தப் படத்தில் இளமையாகக் காட்சியளிக்க உள்ளார். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பையுமே அமெரிக்காவில் நடத்துவதற்கு மேனன் திட்டமிட்டுள்ளார். மேலும் அஜித்தின் படங்களில் இதுவே மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ளதாகத் தெரிகின்றது. 

அம்மா - அப்பா வித்தியாசம் என்ன?

அம்மா - அப்பா வித்தியாசம் என்ன?

இயற்கை நமக்கு அம்மா, அப்பா என்று பெற்றோரைக் கொடுத்திருக்கிறது. இதில் அம்மா என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ரகசியம் இருக்கிறது. அப்பா என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்கிற ரகசியமும் இருக்கிறது.

தமிழில் "ம்மா' இரண்டும் மெல்லின எழுத்துக்கள். "அ' என்பது உயிர்எழுத்தில் முதல் எழுத்து. தமிழில் எப்படி வைத்தார்கள்? நாம் உயிர் எடுத்ததில் முதல் காரணம் அப்பா, அம்மா. உயிர் எழுத்தில் முதல் எழுத்து அவர்களுக்கு "அ' அடுத்தது என்ன அழகு என்றால் அம்மாவில் "ம்,மா' இரண்டும் மெல்லின எழுத்து.

 அப்பாவில் "ப்,பா' இரண்டும் வல்லின எழுத்து என்ன அர்த்தம்? வாழ்க்கையில் அம்மா இரண்டு மடங்கு மென்மையாக இருக்க வேண்டும். அப்பா இரண்டு மடங்கு வன்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.