Monday, 17 March 2014

மோசடியும், காதலும் கலந்த ஒகேனக்கல் கதையின் எக்ஸ்க்ளுசிவ்...!



நடைமுறை பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு எப்போதும் மவுசு இருக்கவே செய்கிறது. இந்தியாவின் தலையாயப் பிரச்சனையான ஊழலைப் பற்றிய படம் என்பதால் நிமிர்ந்து நில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர். அதேபோலொரு முக்கிய பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ஒகேனக்கல்.


ஒகேனக்கல் அழகும் ஆபத்தும் நிறைந்த பகுதி. அதேபோல் இப்படத்தின் கதையிலும் இவ்விரண்டும் இருக்கிறது. சீட்டு நடத்திவிட்டு ஏழைகளின் பணத்துடன் கம்பிநீட்டும் மோசடியை இப்படத்தில் விலாவரியாக காட்டுகிறார்கள். சீட்டு மோசடியால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார்களாம். ஆபத்தான சீட்டு மோசடியுடன் அழகான காதலும் படத்தில் உள்ளது.


எழில் புரொடக்சன் சார்பாக மூன்று பேர் இணைந்து தயாரிக்க எம்.ஆர்.மூர்த்தி படத்தை இயக்கியுள்ளார். எம்.ஆர்.மூர்த்தி கன்னடத்தில் பிரபலமான பெயர். அங்கு மூன்று படங்களை இயக்கிவிட்டு தமிழகம் வந்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதை, வசனமும் இவரே.


கதாநாயகனாக பாபு நடிக்கிறார். அவருக்கு ஜோடி ஜோதிதத்தா என்ற மும்பை நடிகை. இன்னொரு ஹீரோவாக ப்ருத்வி, அவருக்கு ஜோடி ஸ்ராவியா. இவர்களுடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.எஸ்.திருப்பதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


உமாபத்மநாபன், நளினி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், முத்துக்காளை, கிரன் மனோகர், காதல் தண்டபாணி, பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன் என ஏராளமானோர் நடித்துள்ளனர். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்ய சரண் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அம்மாவா...? தபுவை கோபப்படுத்திய பெண் இயக்குனர்!

பல வருடங்களுக்கு முன்பே, மனசுக்குப் பிடித்த படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்தவர் தபு. மனசுக்குப் பிடித்திருந்தால் சின்ன வேடமானாலும், என்ன வேடமானாலும் நடிக்க தபு தயார். அதனை தவறாக புரிந்து கொண்டார் இயக்குனர் ஸோயா அக்தர்.


விஷயம் இதுதான். ஸோயா அக்தர் இயக்கும் படத்தில் ப்ரியங்கா சோப்ரா நடிக்கிறார். அவரின் அம்மாவாக நடிக்க திறமையும், அழகும் கொண்ட நடிகை தேவை. ஸோயாவின் கெட்ட நேரம், அவர் மனதில் தபுவின் முகம் தெரிய, தைரியமாக அவர் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினார்.


வந்த காரியத்தை சொன்னதும் தபுவின் முகத்தில் தாளிக்காமலே கடுகு வெடித்தது. ப்ரியங்கா சோப்ரா இன்று ஜோடியாக நடித்து வரும் முன்னணி நடிகர்களுடன் எல்லாம் ஒருகாலத்தில் தபுவும் ஜோடி போட்டிருக்கிறார். அதுவுமில்லாமல் 31 வயது ப்ரியங்காவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு ஐம்பது வயதெல்லாம் இல்லை தபுவுக்கு. ஜஸ்ட் 42 தான்.


இதுக்கு மேல் இப்படியொரு ஆஃபருடன் வந்தால் அவ்வளவுதான் என்று அடித்து விரட்டாத குறையாக ஸோயாவை துரத்தியிருக்கிறார் தபு.


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் அஜீத்துக்கு ஜோடியாக நடித்த தபு அதற்குள் அம்மாவா? ஸோயா மீது நமக்கே லேசா கோபம் வருதே

அரிமா நம்பி எக்ஸ்க்ளுசிவ் தகவல்....!


விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்து வரும் அரிமா நம்பியின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.


துப்பாக்கி படத்தின் போது முருகதாஸின் உதவி இயக்குனர்கள் இருவருக்கு படம் செய்ய வாய்ப்பளிப்பதாக தயாரிப்பாளர் தாணு வாக்குத் தந்திருந்தார். படம் வெளிவந்ததும், தான் சொன்னபடி முருகதா‌ஸ் உதவி இயக்குனர் ஆனந்த் சங்கரை இயக்குனராக்கினார். அந்தப் படம்தான் அரிமா நம்பி.


விக்ரம் பிரபு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் நம்ம ட்ரம்ஸ் சிவமணி. எனர்ஜியின் இன்னொரு பெயரான சிவமணி உலகம் முழுக்க பிரபலம் என்றாலும் அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பது என்பது இதுவே முதல்முறை. சிவமணியின் பாடல்களையும், இசையையும் கேட்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.


படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்துவரும் நிலையில் அடுத்த மாதம் - ஏப்ரல் 13ஆம் தேதி பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.


படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. இங்கே... திரையுலகம் 'ஷாக்'

திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ வெளியாகி திரையுலகினரை பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


பேஸ்புக்கில் காட்டு தீ போல் இந்த வீடியோவும் அதுகுறித்த செய்தியும் பரவியது. இதை திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் உருவத்தில் உள்ள ஒருவர், ஒரு இளம் துணை நடிகையுடன் படுக்கையில் இருப்பது போன்ற படம் அது.


இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் குறித்த ஆபாச வீடியோ.. திரையுலகம் 'ஷாக்'


இதுகுறித்து முருகதாஸ் தரப்பில் கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது முருகதாஸ் இல்லை, அவரைப் போன்றே உள்ள நபரை வைத்து பெயரையும், வளர்ச்சியையும் தடுப்பதற்காக இந்த நாச வேலையை செய்துள்ளனர்.


மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்கு தொடர முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.


இதுபோல திரையுலக பிரபலங்களை வைத்து ஏகப்பட்ட ஆபாசப் படங்கள் இதற்கு முன்பும் வந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையையும் நாடியுள்ளனர். ஆனாலும் இப்படிப்பட்ட செயல்கள் புற்றீசல் போல தொடர்ந்து புறப்பட்டு வந்தபடியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளை நினைத்து கவலையில் நட்சத்திர தம்பதி!

கோலிவுட்டைச் சேர்ந்த நட்சத்திர தம்பதி ஒன்று தங்கள் குழந்தைகளை நினைத்து கவலைப்படுகிறதாம்.


கோலிவுட்டைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான அவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோவாக இருந்தார். தற்போதும் தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.


அவரது மனைவி பல ஆண்டுகள் கழித்து அண்மையில் தான் கோலிவுட்டில் ரீ என்ட்ரி ஆனார். ஒரு காலத்தில் அவரும் பெரிய ஹீரோயினாக இருந்தவர் தான்.

அவர்களின் மகளும், மகனும் பெற்றோரை போன்று ஜொலிக்கவில்லை. மகள் தான் அப்படி ஆயிற்று மகனாவது பெரிய ஆளாக வருவான் என்று எதிர்பார்த்தனர்.


ஆனால் மகனுக்கு கோலிவுட்டில் மவுசு இல்லை. இதனால் நட்சத்திர தம்பதி தங்கள் குழந்தைகளை நினைத்து வருத்தப்படுகிறார்களாம்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கோச்சடையான் படத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராய்ட் கிங்டம் ரன் கேமுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ரஜினி - தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். சவுந்தர்யா ரஜினி இயக்கியுள்ளார். நடிப்பு பதிவாக்க தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாராகும் முதல் படமான கோச்சடையானுக்கு ஆன்ட்ராய்ட் கேம் செயலியை உருவாக்கியுள்ளது ஹங்காமா நிறுவனம்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

இந்த ஆண்டில் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள முதல் செயலி இது. காடு, துறைமுகம், பெரிய கோட்டைகளில் நடக்கும் சண்டையைப் போல இந்த கேம் உருவாக்கப்பட்டுள்ளது.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கோச்சடையான் ரஜினி தனி வீரனாக ஒரு படையையே எதிர்த்து ஜெயிப்பது போல உருவாக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டுக்கு அபார வரவேற்பு கிடைத்துள்ளது.

அதுவும் ரஜினியை முதல் முறையாக இந்த மாதிரி கேமில் பார்ப்பது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தந்துள்ளது.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

வ்ரூவி மூலம் கோச்சடையான் Reign of Arrows என்ற இன்னொரு விளையாட்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கேம் அறிமுகமான சில மணி நேரங்களிலேயே ஏராளமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இணையத்தைக் கலக்கும் கோச்சடையான் ஆன்ட்ராய்ட் கேம்கள்!

கூகுள் ப்ளே தளத்தில் இந்த விளையாட்டுகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழ் நடிகர் ஒருவருக்கு இதுபோல விளையாட்டு உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்!

கல்பனா ஹவுஸ்.. கன்னடம், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் இது. அடுத்து தமிழிலும் இதே பெயரில் வெளியாகிறது. அவன் இவன் மதுஷாலினிதான் படத்தின் நாயகி.


மைசூர் காட்டுக்குள் நடந்த திகிலூட்டும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை இது. வேணு கார்த்திக், த்ரில்லர் மஞ்சு ஆகியோரும் நடித்துள்ளனர். குமார் டைரக்டு செய்திருக்கிறார்.


மதுஷாலினி நடிக்கும் பேய்ப் படம் கல்பனா ஹவுஸ்


‘கல்பனா ஹவுஸ்' படத்தின் கதை பற்றி இயக்குநர் குமார் கூறுகையில், "பிரபல என்கவுன்ட்டர் போலீஸ் அதிகாரி தனது குடும்பத்துடன் ஓய்வெடுப்பதற்காக காட்டுக்குள் இருக்கும் விருந்தினர் மாளிகையில் வந்து தங்குகிறார்.


அங்கு சில மர்மமான சம்பவங்கள் அவர்களை பயமுறுத்துகின்றன. போலீஸ் அதிகாரியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.


இதற்கு காரணம் அந்த பங்களாவில் இறந்துபோன ஒரு பெண்ணின் ஆவிதான் என்கிறார்கள். அதைக்கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள். அவர்கள் உயிர் பிழைத்தார்களா? அல்லது ஆவியினால் பழிவாங்கப்பட்டார்களா? என்பதே கதை.


தரண் மூவிஸ் சார்பில் ஆர்.நாகராஜன் தயாரித்து வருகிறார். படத்தில் பரபரப்பும், விறுவிறுப்பும் குறையாமல் இருப்பதற்காக, பாடல்களே இல்லாத படமாக இது தயாராகிறது,'' என்றார்.