Wednesday, 19 March 2014

இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!


ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இளையராஜா எனும் வயதை வென்ற 'இளைஞரி'ன் வேகத்தைப் பார்க்கும்போது.

எண்பதுகளில் நாம் பார்த்த அதே வேகத்தோடு இந்த 2014லிலும் இசையைத் தந்து கொண்டிருக்கிறார் மனிதர். அதுவும் ஐந்து மொழிகளில்...


இந்த ஆண்டு மட்டும் அவரது இசையில் வரவிருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா... 20!


இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!


ஒரு ஊர்ல, நாடி துடிக்குதடி போன்றவை கடந்த ஆண்டு வந்திருக்க வேண்டியவை. அவற்றையும் சேர்த்தால் 22 படங்கள்.


பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் 'உன் சமையல் அறையில்' படத்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இசையமைக்கிறார் ராஜா. பாடல்களை மூன்று படங்களுக்கும் ஒரே மாதிரி போடாமல், மூன்றுக்கும் தனித் தனியாகவே இசையமைத்துத் தந்திருக்கிறார் இளையராஜா என்கிறார் பிரகாஷ் ராஜ்.


தெலுங்கில் பாபா சத்ய சாய் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டு மெகா படங்கள் ராஜாவின் இசையில் வரவிருக்கின்றன. மேலும் இரு படங்களுக்கு இசையமைக்க சம்மதித்துள்ளார், இவை 2015 கணக்கு!


எம்சும் பெண்குட்டியும், மார்த்தாண்ட வர்மா, காதா, சாம்ராஜ்யம் 2 போன்றவை ராஜாவின் இசையில் வரும் மலையாளப் படங்கள். சத்யன் அந்திக்காட்டின் அடுத்த படத்துக்கும் ராஜாதான் இசை.


கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் படம் தவிர, மைத்ரி மற்றும் இன்னொரு பெயரிடப்படாத படத்துக்கும் ராஜா இசையமைக்கிறார்.


தமிழில் ராஜராஜ சோழனின் போர்வாள், வேலு பிரபாகரனின் கலைஞனின் காதல், ஸ்ரீ ராமாநுஜர், மேகா, திறக்கப்படாத கதவு, மூங்கில் காடு, பாலா இயக்கும் படம், பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம், மகேந்திரனின் புதிய படம் போன்றவை ராஜாவின் இசையில் உருவாகி வருகின்றன.


இந்தியில் பால்கியின் புதிய படத்துக்கும் ராஜாதான் இசை என்பது நினைவிருக்கலாம்.

ஆரம்பிச்சிட்டாங்கப்பா... அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனாம்!

எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் என அறிவிக்கப்பட்டவர் ரஜினி. அன்றுமுதல் இன்றுவரை அந்த நாற்காலியில் அவர் ஒருவர்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.


இன்னொன்று சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மட்டுமேயான ஒரு அடைமொழியாகவும் மாறிவிட்டது.


ஆனால் இடையில் பல நடிகர்கள் இரண்டு மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்ற பேச்சு கிளம்பிவிடும். இதை பல நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்களே கிளப்பிவிடுவதுண்டு.


எண்பதுகளின் ஆரம்பத்தில் கார்த்திக் - பிரபு, இறுதியில் ராமராஜன், ராஜ்கிரண், அடுத்து விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு, சூர்யா - விக்ரம் இப்படி பலரும் இந்த சூப்பர் ஸ்டார் அடைமொழிக்குள் திணிக்க முயன்று கடைசியில்.. ம்ஹூம்.. சூப்பர் ஸ்டார் என்ற நிலை காலத்தை தாண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.


இந்த நிலையில் தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு (சினிமாவில் அப்படி சொல்லிக் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!) நடிக்க வந்த சிவகார்த்திகேயன், வரிசையாக மூன்று ஹிட்கள் கொடுத்ததும், இப்போது தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என நினைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.


மான்கராத்தே ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேருமே இதனை உணர்ந்ததோடு, வெளிப்படையாக இது ரொம்ப ஓவராச்சே என்று கமெண்டும் அடித்துவிட்டுச் சென்றனர்.


இந்த விழாவில் பேசிய அனைவருமே சிவ கார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரோ, ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டுப் பேசி, அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்தி என்றார்.


இந்த பேச்சுகளால் மந்திரித்துவிட்டதுபோலாகிவிட்ட சிவகார்த்திகேயன், தனது பேச்சில் இதற்கெல்லாம் மறுப்போ, சங்கடப்பட்ட உணர்வையோ காட்டிக் கொள்ளவே இல்லை. மாறாக ரொம்ப மகிழ்ச்சியாக இவற்றை ஏற்றுக் கொண்டார்.

ஆஞ்சநேயா படத்தின்போது அஜீத் கேட்டாரே, 'ஏன் நான் சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படக் கூடாதா?' என்று. அந்தத் தொனியில்தான் அவர் பேச்சு அமைந்தது!

ரஹ்மானை ஏன் ஓரங்கட்டினார்கள்...? ஹாரிஸ் ஜெயராஜ் முழு விளக்கம்!


கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கௌதம் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசை ரஹ்மான். இதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கும் ரஹ்மானே இசை என்று முதலில் கூறப்பட்டது.


ஆனால் நேரமின்மை காரணமாக ரஹ்மான் இசையமைக்கவில்லை எனவும் கௌதம் தனது முன்னாள் நண்பர் ஹாரிஸை இந்தப் படத்தில் பயன்படுத்த உள்ளார் எனவும் உறுதிச் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.


கௌதமின் முதல் படம் மின்னலேயில் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன் பிறகு கௌதம் படம் என்றால் இசை ஹாரிஸ் என்பது எழுதப்படாத விதியானது. இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்காக ரஹ்மானிடம் சென்றார் கௌதம்.


இந்தத் தகவலை அவர் ஹாரிஸிடம் கூறவில்லை. மூன்றாவது நபர் மூலமாகவே ஹாரிஸ் இந்தத் தகவலை அறிந்து கொண்டார். அப்போது இருவருக்குள்ளும் விழுந்த விரிசல் இன்னும் சரியாகாமல் உள்ளது.


பலமுறை கௌதம் பிரிவுக்கு நான்தான் காரணம், மீண்டும் ஹாரிஸுடன் இணைய விரும்புகிறேன் என கூறியும் பிரிந்தவர்கள் கூடுவதற்கான எந்த வழியும் உருவாகவில்லை. இந்நிலையில் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நேர்மறையானது. கௌதம் அஜீத்தை வைத்து இயக்கும் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் இசைந்துள்ளாராம்.


விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

கார்த்தியின் "காளி" கல்லாகட்டுமா..? புது தகவல்!


சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா என்று ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த கார்த்தி நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் படங்களுக்குப் பிறகு வெளிவந்த பிரியாணியும் சுமாராகவே போனது.


மூன்று தோல்விகளுக்குப் பின் கார்த்தி ஒப்பந்தமானது அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித்தின் காளி படம்.


காளி என்று பெயர் வைத்த படங்கள் அனைத்தும் எதிர்பாராத விபத்துகளை சந்தித்துள்ளதால் காளி என்ற பெயரை மாற்ற முடிவு செய்தனர். ஆனால் இதுவரை பெயர் இறுதி செய்யப்படவில்லை.


விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு சிறிது தடைபட்டது. படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் செதுக்கி சீராக்கினர். இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


சமீபத்தில் படத்தின் கிளைமாக்ஸை பெரம்பூரில் படமாக்கினர். இரவு நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.


இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த காளி என்ற இளைஞனாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேதரின் தெரேசா. சந்தோஷ் நாராயணன் இசை.


ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்து வருகிறது.

தாணு கையில் "என்னமோ ஏதோ" அதிசயம்!


நேர்எதிர் படத்தை வெளியிட்ட வி கிரியேஷன்ஸ் தாணு கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் என்னமோ ஏதோ படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.


தெலுங்கில் ஹிட்டான அலா மொதலயிந்தி படத்தின் தமிழ் தழுவல்தான் என்னமோ ஏதோ.


தெலுங்கில் நானி நடித்த வேடத்தை கௌதம் கார்த்திக்கும், நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் ராகுல் ப்‌ரீத் சிங்கும், சினேகா உல்லால் நடித்த வேடத்தில் நிகிஷா படேலும் நடித்துள்ளனர்.


தெலுங்கில் படத்தை இயக்கியவர் நந்தினி ரெட்டி.


என்னமோ ஏதோவை ரவிபிரசாத் புரொடக்சன்ஸ் தயாரிக்க ரவிதியாகராஜன் இயக்கியுள்ளார். கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படம் இது.


சமீபத்தில் இந்தப் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்தனர்.


இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை தாணுவின் வி கிரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.

விஜய்யின் பவர்புல் வில்லன் நீல் நிதின் முகேஷ்...?


விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நீல் நிதின் முகேஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முதலகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்த போது வங்கமொழி நடிகர் டோட்டா ராய் சௌத்ரி அதில் கலந்து கொண்டார். அவர்தான் படத்தின் வில்லன் என்று கூறப்பட்டது.


ஆனால் அந்தச் செய்தியை முருகதாஸ் மறுத்தார். கொல்கத்தா சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு வங்க நடிகர் தேவைப்பட்டார். அதற்காகவே டோட்டா ராய் சௌத்ரியை பயன்படுத்தினோம். அவர் படத்தின் முக்கிய வில்லன் கிடையாது. பவர்ஃபுல்லான வில்லனை தேடி வருகிறோம் என்று கூறினார். அதையடுத்து விஜய்யின் வில்லன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.


இந்நிலையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷின் பெயர் அடிபடுகிறது. சமீபத்தில் நீல் நிதின் முகேஷ் சென்னை வந்து முருகதாஸை சந்தித்துவிட்டு சென்றார். அதன் பிறகு விஜய்பட வில்லன் நீல் நிதின் என்று உறுதிபட கூறுகின்றனர்.


இந்தப் படத்தில் விஜய் ஜோ‌டியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமுத்திரகனி இயக்கத்தில் - ´´கிட்ணா´´ எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!

சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.


 அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


நிமிர்ந்து நில் படத்தை பார்த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஐ.பி.எஸ். அதிகாரி வால்டர் தேவாரம் போன்றோர்கள் பாராட்டினார்கள். இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த சந்தோஷத்துடனேயே எனது அடுத்தப்பட வேலையை ஆரம்பித்துவிட்டேன்.


எனது அடுத்தப்படத்தின் தலைப்பு ´´கிட்ணா´´. கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் கிட்ணா. இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது.


இப்படத்தில் நானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளேன்.


என்னுடன் அமலாபால் நடிக்கிறார்.


முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.


அமலாபால் 1 வயது முதல் 45 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார். நான் 35 வயது முதல் 65 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறேன்.


படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. காடும் காடு சார்ந்த இடமும் தான் எனது படத்தின் கதைக்களம். நிச்சயம் இப்படம் அமலாபாலுக்கு நல்லதொரு பெயரை தரும் என்றார்.