Wednesday, 19 March 2014

கார்த்தியின் "காளி" கல்லாகட்டுமா..? புது தகவல்!


சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா என்று ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த கார்த்தி நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் படங்களுக்குப் பிறகு வெளிவந்த பிரியாணியும் சுமாராகவே போனது.


மூன்று தோல்விகளுக்குப் பின் கார்த்தி ஒப்பந்தமானது அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித்தின் காளி படம்.


காளி என்று பெயர் வைத்த படங்கள் அனைத்தும் எதிர்பாராத விபத்துகளை சந்தித்துள்ளதால் காளி என்ற பெயரை மாற்ற முடிவு செய்தனர். ஆனால் இதுவரை பெயர் இறுதி செய்யப்படவில்லை.


விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு சிறிது தடைபட்டது. படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் செதுக்கி சீராக்கினர். இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


சமீபத்தில் படத்தின் கிளைமாக்ஸை பெரம்பூரில் படமாக்கினர். இரவு நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.


இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த காளி என்ற இளைஞனாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேதரின் தெரேசா. சந்தோஷ் நாராயணன் இசை.


ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்து வருகிறது.

0 comments:

Post a Comment