Wednesday, 19 March 2014

அமீர்கானுக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!

2014 லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய சின்னங்கள் என்ற பட்டியலில் பாலிவுட் நடிகர் அமீர்கானையும் தேர்தல் கமிஷன் இணைத்துள்ளது.


தேர்தல் கமிஷன் தனது வாக்காளர் விழிப்புணர்வு பணியில் அமிர்கானையும் இணைத்துக் கொள்ள உள்ளது. இதற்காக, சிறப்பு குறும்படம் ஒன்றையும் அமீர்கான் தயாரித்து, நடித்து வருகிறார்.


பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்களை ஓட்டளிக்க செய்வதற்காக தேசிய சின்னங்கள் என்ற கவுரத்தை தேர்தல் கமிஷன் அளித்து வருகிறது.


இதுவரை இந்த கவுரவம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம், பாட்மிட்டன் வீராங்கணை சானியா மிர்சா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு, எவ்வாறு ஒட்டளிப்பது என்பது குறித்தும் மக்களுக்கு புரிய வைக்கும் விளம்பரங்களில், தேர்தல் கமிஷனுக்காக நடித்துக் கொண்டுகின்றனர்.

0 comments:

Post a Comment