கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கௌதம் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசை ரஹ்மான். இதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கும் ரஹ்மானே இசை என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் நேரமின்மை காரணமாக ரஹ்மான் இசையமைக்கவில்லை எனவும் கௌதம் தனது முன்னாள் நண்பர் ஹாரிஸை இந்தப் படத்தில் பயன்படுத்த உள்ளார் எனவும் உறுதிச் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
கௌதமின் முதல் படம் மின்னலேயில் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன் பிறகு கௌதம் படம் என்றால் இசை ஹாரிஸ் என்பது எழுதப்படாத விதியானது. இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்காக ரஹ்மானிடம் சென்றார் கௌதம்.
இந்தத் தகவலை அவர் ஹாரிஸிடம் கூறவில்லை. மூன்றாவது நபர் மூலமாகவே ஹாரிஸ் இந்தத் தகவலை அறிந்து கொண்டார். அப்போது இருவருக்குள்ளும் விழுந்த விரிசல் இன்னும் சரியாகாமல் உள்ளது.
பலமுறை கௌதம் பிரிவுக்கு நான்தான் காரணம், மீண்டும் ஹாரிஸுடன் இணைய விரும்புகிறேன் என கூறியும் பிரிந்தவர்கள் கூடுவதற்கான எந்த வழியும் உருவாகவில்லை. இந்நிலையில் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நேர்மறையானது. கௌதம் அஜீத்தை வைத்து இயக்கும் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் இசைந்துள்ளாராம்.
விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment