Wednesday, 19 March 2014

விஜய்யின் பவர்புல் வில்லன் நீல் நிதின் முகேஷ்...?


விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நீல் நிதின் முகேஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முதலகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்த போது வங்கமொழி நடிகர் டோட்டா ராய் சௌத்ரி அதில் கலந்து கொண்டார். அவர்தான் படத்தின் வில்லன் என்று கூறப்பட்டது.


ஆனால் அந்தச் செய்தியை முருகதாஸ் மறுத்தார். கொல்கத்தா சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு வங்க நடிகர் தேவைப்பட்டார். அதற்காகவே டோட்டா ராய் சௌத்ரியை பயன்படுத்தினோம். அவர் படத்தின் முக்கிய வில்லன் கிடையாது. பவர்ஃபுல்லான வில்லனை தேடி வருகிறோம் என்று கூறினார். அதையடுத்து விஜய்யின் வில்லன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.


இந்நிலையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷின் பெயர் அடிபடுகிறது. சமீபத்தில் நீல் நிதின் முகேஷ் சென்னை வந்து முருகதாஸை சந்தித்துவிட்டு சென்றார். அதன் பிறகு விஜய்பட வில்லன் நீல் நிதின் என்று உறுதிபட கூறுகின்றனர்.


இந்தப் படத்தில் விஜய் ஜோ‌டியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

0 comments:

Post a Comment