நேர்எதிர் படத்தை வெளியிட்ட வி கிரியேஷன்ஸ் தாணு கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் என்னமோ ஏதோ படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.
தெலுங்கில் ஹிட்டான அலா மொதலயிந்தி படத்தின் தமிழ் தழுவல்தான் என்னமோ ஏதோ.
தெலுங்கில் நானி நடித்த வேடத்தை கௌதம் கார்த்திக்கும், நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும், சினேகா உல்லால் நடித்த வேடத்தில் நிகிஷா படேலும் நடித்துள்ளனர்.
தெலுங்கில் படத்தை இயக்கியவர் நந்தினி ரெட்டி.
என்னமோ ஏதோவை ரவிபிரசாத் புரொடக்சன்ஸ் தயாரிக்க ரவிதியாகராஜன் இயக்கியுள்ளார். கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படம் இது.
சமீபத்தில் இந்தப் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்தனர்.
இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை தாணுவின் வி கிரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.
0 comments:
Post a Comment