Wednesday, 12 March 2014

சோனம் கபூரின் ஷேவிங் படங்கள் - புதிய சர்ச்சை!


சர்ச்சையானாலும், சந்தி சிரிச்சாலும் தினம் பத்திரிகைகளில் பெயர் வந்தால்தான் சிலருக்கு தூக்கமே வரும். சோனம் கபூருக்கு இதுவரை அப்படியொரு வியாதி இல்லை.


ஆனால் அவரின் இந்த ஸ்டில்களைப் பார்க்கையில் பிரபலபோபியா அவரையும் அட்டாக் செய்துவிட்டதோ என்று சந்தேகம்.


ஆட்டு இறைச்சியில் ஆடை செய்து அதனை போட்டோ எடுத்து விளம்பரப்படுத்துவது, கட்சி கொடிகளை உடம்பில் போர்த்தி எலெக்சன் நேரம் பார்த்து தங்களைப் பிரபலப்படுத்துவது என்று பாலிவுட் நடிகைகள் ஒருமார்க்கமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.


இந்நிலையில் முகம் முழுக்க ஷேவிங் க்‌ரீம் பூசி கத்தியால் ஷேவ் செய்யும் போஸ் தந்துள்ளார் சோனம்.


இது எந்தப் படத்துக்காகவும், விளம்பரத்துக்காகவும் எடுத்ததில்லை. பிரபல போட்டோகிராஃபருக்கு சோனம் தந்த அதிரடி போஸ் இது.


அப்பா அனில் கபூரிடம் சொல்லி யாராவது கண்டிக்க சொல்லுங்களேன்.

0 comments:

Post a Comment