Wednesday 12 March 2014

ரஜினி தமிழரா? இல்லையா? சிந்திக்க வேண்டிய தமிழ் மக்கள்!

கோச்சடையான் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து தள்ளி விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர்.


ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர் ஒருவர் ரஜினியிடம், தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி, நல்லவேளை நாடார், முதலியார், செட்டியார் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் தமிழன் முதலமைச்சராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோசம் என்று புத்திசாலித்தனமாக பதிலுரைத்தார்.


இப்படி முன்பு ரஜினி சொன்ன பதிலை நினைவுகூர்ந்த வைரமுத்து, இப்படித்தான் எம்.ஜி.ஆரையும் மலையாளி என்றார்கள்.


 பின்னர் ரஜினியை கன்னடர் என்றார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அதையெல்லாம் கடந்தவர்கள். பேச்சு, பழக்கவழக்கத்தின் மூலம் தமிழர்களாக மாறிப்போனவர்கள் என்று பேசினார்.


ஆனால் அதையடுத்து பேச வந்த சரத்குமார், ரஜினி தமிழரா? இல்லையா? என்ற சந்தேகத்தை திடீரென்று கிளப்பி விட்டிருக்கிறார் வைரமுத்து.


ஆனால் அவர் எப்போதோ தமிழராகி விட்டார்.


அதனால் அவர் இப்படி கேட்க வேண்டியதன் அவசியம் இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை என்று வைரமுத்துவுக்கு பதில் கொடுக்கும வகையில் பேசினார் சரத்குமார்.

0 comments:

Post a Comment