தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் செய்தி கவுண்டமணி மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பதே.
அந்த எதிர்பார்ப்பினை மேலும் சூடாக்க மற்றொரு செய்தியும் வெளியாகியுள்ளது.
கவுண்டமணி நடிப்பில் தற்பொழுது உருவாகிவரும் 49-O திரைப்படம் ஏப்ரலில் வெளியாகவிருப்பதாகப் படக்குழு விளம்பரம் செய்துள்ளது.
வருகிற ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதம் தங்களது படத்தினை வெளியிடலாம் என்று நினைத்திருந்த பலரும் பட வெளியீட்டினை ஏப்ரலில் இருந்து தள்ளிவைக்கவோ அல்லது மார்ச் மாதத்திலேயே வெளியிடவோ முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் உலகமகா நக்கல் நாயகன் கவுண்டமணி நடிப்பில் உருவாகிவரும் 49-ஓ திரைப்படத்தினை ஏப்ரலில் வெளியிடப் படக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது.
49-O என்ற இப்படத்தின் தலைப்பே தேர்தல் மற்றும் வாக்காளர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் இப்படம் தேர்தலுக்கு முன்னதாக வெளியிடப்படலாம் என்றும் மக்கள் பேசிவருகின்றனர்.
மக்களுடன் கூட்டணி ஏப்ரல் முதல் என்ற வாசகங்களுடன் வெளியாகியிருக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் பெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பிவருகின்றன.
கவுண்டமணியின் நக்கல் நகைச்சுவைகளில் திளைத்துக் களிப்புற ஒட்டுமொத்தத் தமிழகமுமே காத்திருக்கின்றது.

0 comments:
Post a Comment