Friday, 31 January 2014

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளித் தட்டுக்களை சுத்தம் செய்ய சில டிப்ஸ்...

வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே. வெள்ளி என்பது இருக்கும் வரை, அது பாத்திர வடிவில் இருந்தாலும் சரி, அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அது மின்னிக் கொண்டே தான் இருக்கும். ஆனால் அதற்கு, அதனை சீரான முறையில் துடைத்து பராமரிக்க வேண்டும்.

பாத்திர வடிவில் இருந்தும் சரி அல்லது அசல் வெள்ளியாக இருந்தாலும் சரி, அதனை சுத்தப்படுத்தும் வழிமுறை ஒரே மாதிரியானவை தான். அதனால் இந்த இரண்டு வகையிலும் உங்களிடம் வெள்ளி இருந்தால் அவைகளை சுத்தப்படுத்த சில அடிப்படையான பொருட்களில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால் வெள்ளியை துடைப்பது ஒருஎன்பது சோர்வடையச் செய்யும் ஒரு வேலையாகும். அதற்கு அதிகளவில் பொறுமை தேவைப்படும். அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றியாக வேண்டும்.

வெள்ளி பொருட்களை சுத்தப்படுத்த மென்மையான பொருட்கள் தேவை என்பதையும் மறந்து விடக்கூடாது. கடுமையான மற்றும் திடமான பொருட்களை கொண்டு வெள்ளியை சுத்தப்படுத்த கூடாது. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். வெள்ளிப் பொருட்களை சுத்தப்படுத்த உங்களுக்காக சில டிப்ஸ்:

சீரான முறையில் சுத்தப்படுத்துதல்

சீரான முறையில் சுத்தப்படுத்துவது என்றால் வெள்ளி பாலிஷ் போடுவது என்று அர்த்தமில்லை. அது உங்கள் வெள்ளிப் பொருட்களை பாழாக்கி விடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு மென்மையான துணி அல்லது மென்மையான முட்களை கொண்ட பிரஷ்ஷை கொண்டு வெள்ளிப் பொருட்களை துடைக்க வேண்டும். அப்பப்போ, வெதுவெதுப்பான சோப்பு நீரிலும் அவைகளை துடைக்கலாம். இதனால் அவைகளில் காணப்படும் கறைகள் நீங்கும். கழுவிய பின்பு மென்மையான துணியை கொண்டு ஈரத்தை துடைத்திடுங்கள்.

பேக்கிங் சோடாவின் பயன்பாடு

வெள்ளியை துடைக்க பேக்கிங் சோடாவையும் கூட பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை ஒரு கை எடுத்து வெதுவெதுப்பான நீரில் போடுங்கள். அது நீரில் கரையும் வரை காத்திருக்கவும். கரைந்த பின்பு, உங்கள் வெள்ளி தட்டுக்களை உலோகத்தகடு மூலம் மூடுங்கள். பின் அதனை அந்த பேக்கிங் சோடாவின் கலவையில் போட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின், உலோகத்தகடை எடுத்து, வெள்ளி தட்டை மென்மையான துணியை கொண்டு துடைத்திடுங்கள்.

ஸ்பாஞ்சை வைத்து சுத்தப்படுத்துதல்

கடுமையானதாக இல்லாத குறைந்த அளவிலான பொருட்களை கொண்டு வெள்ளிப் தட்டுக்களை சுத்தப்படுத்தலாம். மென்மையான ஈர ஸ்பாஞ்சை மென்மையான சோப்பில் முக்கி வெள்ளி தட்டின் மீது தேய்க்கவும். செராமிக் அல்லது கண்ணாடியை கொண்டு செய்யப்பட்ட வெள்ளிப் பாத்திரம் என்றால் ஸ்பாஞ்சை மிதமான சோப்பு கலந்த சுடுநீரில் நனைக்கலாம்.

மிதமான சோப்பை கொண்டு சுத்தப்படுத்திய பிறகு, வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவுங்கள். பின் ஒரு மென்மையான துணியை கொண்டு தட்டை துடைத்திடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மென்மையான துணி பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். கம்பளி கலந்த துணியை பயன்படுத்தாதீர்கள். கழுவும் போது கையுறை அணிய விரும்பினால் அவை பிளாஸ்டிக் அல்லது பருத்தியால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ரப்பர் கையுறையை பயன்படுத்தினால் அது தட்டை பாழாக்கி விடும்.

நன்றாக பாலிஷ் செய்யுங்கள்

வெள்ளி தட்டை சுத்தப்படுத்த மற்றொரு வழியாக விளங்குகிறது வெள்ளி பாலிஷ். நல்ல பாலிஷ் மூலம் தட்டை பளபளக்க செய்யலாம். ஈர ஸ்பாஞ்சை கொண்டு துடைத்த பின்னர், தட்டின் மீது வெள்ளி பாலிஷ் க்ரீமை தடவுங்கள். இந்த க்ரீமை மென்மையான துணியை கொண்டு தடவுங்கள். தட்டை ரொம்பவும் அழுத்தி துடைக்காதீர்கள். பாலிஷை தட்டை சுற்றி மெதுவாக தடவுங்கள். பருத்தி அல்லது முட்களை கொண்ட பிரஷ்ஷை வைத்து பாலிஷை தடவலாம். பாலிஷ் செய்த பின்பு உங்கள் வெள்ளித் தட்டு பளபளப்பாக இருப்பதை நீங்கள் காணலாம்.

வெள்ளித் தட்டை கழுவ போடுவதற்கு முன் அதில் படிந்திருக்கும் உணவு கறைகளை முதலில் நீக்க வேண்டும். தட்டின் தேய்மானத்தை இது தடுக்கும். சீரான முறையில் இப்படி செய்து வந்தால் வெள்ளிப் பொருட்களை அடிக்கடி கழுவ வேண்டியதை தவிர்க்கலாம்.

வெள்ளிப் பாத்திரங்கள் பாதுகாக்க ஐடியா!

இன்றைக்கு தங்கத்தைப் போல வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த அளவிற்கு மதிப்பு மிக்க வெள்ளிப் பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை. வெ‌ள்‌ளி‌ப் பா‌த்‌திர‌ங்க‌ள் ம‌ற்று‌ம் நகைகளை எ‌வ்வளவுதா‌ன் பாதுகா‌ப்பாக வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் ‌சில நேர‌ங்க‌ளி‌ல் அவை கறு‌ப்பாக மா‌றி ‌விடு‌கி‌ன்றன. இதற்கு காரணம் அவற்றின் தர‌த்‌தி‌ல் குறை இல்லை. காற்று பட்டாலே வெள்ளியானது கருத்துவிடுவது இயல்புதான். எனவே வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை‌ப் எ‌வ்வாறு பாதுகா‌ப்பது எ‌‌ன்பதை அ‌றி‌‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பாலீதின் கவர்

மரப்பெட்டிக‌ளி‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொரு‌ட்களை வைக்கவேண்டாம். ஏனெனில் மரத்தில் இருக்கும் அமிலம் வெள்ளியின் மேல்பகுதியை பாதிக்கும். அ‌ப்படி மர‌ப்பெ‌ட்டி‌யி‌ல்தா‌ன் வை‌க்க வே‌ண்டிய ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் வெ‌ள்‌ளி‌ப் பொருளை பா‌லி‌த்‌தீ‌ன் கவ‌ரி‌ல் போ‌ட்டு ந‌ன்கு மூடி வை‌க்கவு‌ம்.

நகைப்பெட்டிகளில் ஒவ்வொரு நகைகளையும் தனித்தனியாக வையுங்கள். வெள்ளியின் மீது செ‌ய்‌தி‌த்தாளோ, ரப்பர் பேண்டோ அல்லது பிளாஸ்டிக் பொரு‌ட்களோ படும்படி வைக்க வேண்டாம்.

காற்றுப் படக்கூடாது

ஒ‌வ்வொரு முறையு‌ம் வெ‌‌ள்‌ளி நகையை பய‌ன்படு‌த்‌து‌ம் போது நம் உடலில் சுரக்கும் எண்ணெய் பசையால் வெள்ளியின் ஒளி மங்க வாய்ப்பிருக்கிறது. எனவே பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு அதனை ந‌ன்றாக துடை‌த்து ‌பி‌ன்ன‌ர் பாதுகா‌‌ப்பாக எடு‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம்.

பயன்படுத்திய வெள்ளி பொருட்களை மென்மையாக சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கழு‌வி உடனேயே காயவைத்தால் கூட போதுமானது. நீண்ட நேரங்களுக்கு அதை வெளியில் வைக்க வேண்டாம். வெள்ளியை குளிர்ச்சியான, வறண்ட இடங்களில், காற்றுபுகாத பெட்டிகளில் வைக்கவேண்டும்.

மங்கிப்போகும்

ஒரு சிலர் வீடுகளில் வெள்ளித் தட்டு, வெள்ளி டம்ளர் போன்றவைகளை உபயோகிப்பார்கள். வெள்ளித்தட்டுகளில் உணவுகளை போட்டு வைத்து நீண்ட நேரம் வைக்க வேண்டாம். ஏனெனில் சில உணவுப் பொருட்களில் உள்ள அமிலங்கள் வெள்ளித்தட்டை மங்கச் செய்யும். அதேபோல் பாத்திரம் கழுவும் மெஷின்களில் வெள்ளிப் பாத்திரங்களைப் போட வேண்டாம் அவை நசுங்கிவிடும்.

பூஜை சாமான்கள்

 குத்துவிளக்கு, ஆரத்தி தட்டு போன்றவைகளை வெள்ளியில் வைத்திருப்பது வாடிக்கை. அவற்றை வாரம் ஒருமுறையாவது எடுத்து வெள்ளியை சுத்தம் செய்யும் பொருளைப் போட்டு துடைத்து சுத்தம் செய்து வைக்கவும். இல்லையெனில் அவை கருத்துவிடும்.

அசினுக்கு பாலிவுட்டில் அதிர்ச்சி !

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த அசின் கஜினி ரீமேக்கில் ஆமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க அந்த படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து மளமளவென அசினுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அவரை பார்த்து த்ரிஷா, காஜல் அகர்வால், இலியானா என தென்னிந்திய ஹீரோயின்கள் வரிசையாக பாலிவுட்டுக்கு படையெடுத்தனர். வேகமாக வளர்ந்து வந்த அசினுக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் அவர் நடித்த 3 இந்தி படங்கள் கடைசியாக திரைக்கு வந்தன.

கடந்த வருடம் முழுவதும் ஒரு படம் கூட அவருக்கு வரவில்லை. இந்த ஆண்டில் "ஆல் இஸ் வெல்" என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தென்னிந்திய நடிகைகள் மீது கவனம் செலுத்திவந்த பாலிவுட் ஹீரோ மற்றும் டைரக்டர்கள் மீண்டும் கேத்ரினா கைப், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, சோனாக்ஷி சின்ஹா, அலியா பட், பரினீதி சோப்ரா என சீனியர் மற்றும் இளம் நடிகைகளையே தேடிச் சென்றனர். இதனால் பாலிவுட்டை நம்பி பறந்த தென்னிந்திய ஹீரோயின்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாலிவுட்டில் இயக்குனர்களால் அசின் ஓரம்கட்டப்பட்டுவிட்டாலும் விளம்பர படங்களை நம்பி அங்கேயே தங்கி இருக்கிறார். சமீபத்தில் அழகு சாதனம் பொருட்கள் நிறுவனம் ஒன்றின் தூதராக அவர் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.

தோல்வி என்பது அபிப்ராயம்தான் ...!

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும் வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத் தக்கதல்ல. சிலர் சின்ன தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, எல்லாவற்றையும் இழந்ததாய் சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் எதிர்காலம் என்ற ஒன்று இருக்கும்வரை, இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒருவர் வெற்றி நோக்கி முழு மூச்சோடு முயன்றார் என்பதற்கான ஆதாரம்தான் தோல்வி. ஒரு மனிதனை உலுக்கும் விதமாகத் தோல்வி வரும்போது எப்படித் தாங்குவது என்ற கேள்வி எழலாம். உலுக்கப்படும்போது, மரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் காய்ந்த இலைகள் விழுகின்றன. கனிந்த பழங்கள் விழுகின்றன. இலைகள், மனிதனின் பலவீனங்களுக்கு அடையாளம்.

தோல்வியில் நமது பலவீனங்களை உதிர்ப்பதும், சோதனைக் காலங்களிலும் பிறருக்குப் பயன்படுவதும் வெற்றியாளர்களின் அம்சங்கள்.

தோல்வியின் காரணத்தை உண்மையாக ஆராயும்போதே வெற்றிக்கு அடித்தளம் அமைக்கத் தொடங்கிவிட்டதாக அர்த்தம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏன் வருகிறது?

சிந்திக்காமல் ஒன்றைச் செய்வதாலும் தோல்வி வருகிறது. நன்கு சிந்தித்த ஒன்றைச் செய்யாமல் கைவிடுகிறபோது, ஒன்றை நன்கு சிந்திக்கவும் சிந்தித்ததை செயல்படுத்தவும் தேவையான தெளிவு வருகிறது.

ஒரு செயலின் விளைவு எதிர்மறையாக ஆகுமென்றால் அப்போதைக்கு அது தோல்வியின் கணக்கில் இருந்தாலும் அசைக்க முடியாத வெற்றிக்கு அடித்தளமாகவும் அதுவே அமைகிறது.

நெருக்கியடிக்கிற தோல்விகளின் நிர்ப்பந்தங்களால் தங்களையும் அறியாமல் தங்கள் பாதையை சீர்ப்படுத்திக்கொண்டு நிகரற்ற வெற்றியைக் குவித்த பலரையும் வரலாறு பெருமையுடன் பாராட்டி வருகிறது. எதிலாவது தோல்வி ஏற்பட்டாலோ, அல்லது தோல்வி வருமோ என்ற பயம் ஏற்பட்டாலோ பதட்டமில்லாமல் உங்கள் திட்டங்களை மறுபடி கவனமாகக் கண்காணியுங்கள். அதனை ஓர் எச்சரிக்கையாக மட்டும் எடுத்துக்கொண்டு இன்னும் தெளிவாய் இன்னும் துல்லியமாய் உங்கள் இலக்கை நெருங்குங்கள். ஏனெனில் தோல்வி என்பது அறிவிக்கப்பட்ட தீர்ப்பல்ல. ஓர் அபிப்ராயம்தான்.

தமிழ் படங்களின் மீது இயக்குநர்களுக்கு திடீர் பற்று!

அதென்னமோ தெரியவில்லை இப்போது தமிழ் பட டைரக்டர்களுக்கு தமிழ் பற்று பொங்கி வழிகிறது. சங்க இலக்கியத்திருந்தெல்லாம் சொற்களை கண்டுபிடித்து படத்துக்கு டைட்டிலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரணம் ஆயிரம், பொன்மாலை பொழுது, விண்ணைத்தாண்டி வருவாயா என கவுதம் மேனன்தான் அழகு தமிழில் பெயர் வைப்பார். இப்போது அவரையும் மீறி சங்கத் தமிழ் வரைக்கும் சென்று விட்டார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அஞ்சான் என்றால் எதற்கும் அஞ்சாதவன், பயப்படாதவன் என்ற பொருள்.

கே.வி.ஆனந்த் டைரக்ஷனில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனேகன் என்று டைட்டில் வைத்திருக்கிறார். அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன் என்று பொருள் அதாது ஆல் இன் ஆல் அழகுராஜா.

மகிழ்திருமேனி டைரக்டஷனில் ஆர்யா நடிக்கும் படத்திற்கு மீகாமன் என்பது டைட்டில். மீகாமன் என்றால் கப்பல் தலைவன் என்று பொருள். அதாவது கேப்டன், மாலுமி.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் டைரக்ஷனில் ஜீவா நடிக்கும் படத்திற்கு யான் என்ற டைட்டில். யான் என்றால் நான் என்று பொருள்.

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை டைரக்ட் செய்த பரதன் இப்போது காக்டெயில் மலையாளப்படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்துள்ளார். இதற்கு அழையா விருந்தினர், அல்லது திடீர் விருந்தினர் என்று பொருள்.

வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி ஒரு படம் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதற்கு குறோணி என்று டைட்டில் வைத்திருக்கிறார். குறோணி என்றால் அசுரன் என்று பொருளாம்.

இன்னும் நிறைய சங்கத்த தமிழ் பெயர்கள் வரப்போகிறது. வாழ்க டைரக்டர்களின் தமிழ்த் தொண்டு

மாத்தி யோசிக்க வைத்த நயன்தாரா..?

 பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடித்து வரும் படத்திற்கு 'இது நம்ம ஆளு' என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, சூரி நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. சிம்புவிற்கு ஜோடி யார் என்பது குறித்து பெரிய விவாதம நடைபெற்று வந்தது.

நயன்தாரா தான் நாயகி என்று ட்விட்டர் தளத்தில் இயக்குநர் பாண்டிராஜ் அறிவிக்க, அன்றிலிருந்தே படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு எகிறியது.

சிம்பு - நயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வந்தன. படப்பிடிப்பு தளத்தில் இருவருமே நண்பர்களாகவே வலம் வந்தார்கள். தங்களுக்குள் பிரச்சினை எதுவுமே நடக்காதது போல் இருவருமே நடந்து கொண்டதை படக்குழு ஆச்சர்யத்தோடு பார்த்தது.

கதைப்படி சிம்புவுக்கு லவ் ஃபெயிலியர். அவருக்கு வீட்டுல பார்த்த பொண்ணு தான் நயன்தாரா. நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணத்துக்காக அஞ்சு, ஆறு மாசம் காத்திருக்காங்க. அப்போ ரெண்டு பேருக்கும் இடையில் பூக்கும் காதல் தான் கதை. காதல் தரும் எதிர்பார்ப்புகள், அதன் பிறகான ஏமாற்றங்கள், அது உண்டாக்கும் பிரச்னைகள்... இது தான் படத்தோட அவுட்லைன்.

இப்படத்தில் நயன்தாராவை நாயகி ஆக்குவதற்கு முன்பு, 'கதவைத் திற காதல் வரட்டும்’ அல்லது 'லவ்வுனா லவ்வு அப்படி ஒரு லவ்வு’ என்று தலைப்பு வைக்கலாமா என்று ஆலோசித்து இருக்கிறார் பாண்டிராஜ். நயன்தாரா நாயகி ஆனவுடன் தற்போது 'இது நம்ம ஆளு' என்று பெயர் வைக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் நயன்தாராவைப் பார்க்கும் போது எல்லாம் 'இது நம்ம ஆளு சார்' என்று கூறிக்கொண்டே இருப்பாராம் சிம்பு. அது தான் தலைப்பிற்கு காரணமாம்.

ஹன்சிகா அப்படினு ஒருத்தங்க இருக்காங்களா.....? 

'சதுரங்க வேட்டை' சிறப்பு!

 ஒளிப்பதிவாளர் நட்ராஜ் நடிப்பில், வினோத் இயக்கி வரும் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் மனோபாலா.

'நாளை', 'சக்கர வியூகம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இந்தி திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் நட்ராஜ். தற்போது 'சதுரங்க வேட்டை' என்ற படத்தில் நடித்து வருகிறார். வினோத் இயக்கிவரும் இப்படத்தை தயாரிக்கிறார் நடிகர் மனோபாலா.

இயற்கையோட சமநிலை தவறும் போது நடக்கிற அழிவு மாதிரி, மனுஷனோட சமநிலை தவறும் போதும் அழிவு நடக்கும், இதுதான் இப்படத்தோட மையக் கரு.

இப்படம் குறித்து இயக்குநர் வினோத், "இங்க பணம் இருந்தால் ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம். எவனையாவது பிடிக்கலைன்னா அடிக்கலாம். பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம்னா, பணம் சம்பாதிக்க என்ன பண்ணால் என்னன்னு நினைக்கிற ஒருத்தனோட கதைதான் இந்த ‘சதுரங்க வேட்டை’.

நல்லவனா வாழ்ந்தால் செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போகலாம். கெட்டவனா வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்துல வாழலாம்னு சொல்ற ஹீரோவோட கதையை முழுக்க முழுக்க காமெடியா சொல்றோம்.

புதுமையான வசனங்கள் கலந்து , ஆறு எபிசோடுகளாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்.

மொத்தத்துல நம்ம சமூகத்து முன்னாடி வைக்கப்படற கண்ணாடி இந்த படம். சிரிக்கவும் வைப்போம், அதே சமயம் சிந்திக்கவும் வைப்போம். உங்களை நீங்களே ‘சதுரங்க வேட்டை’ல பார்க்கலாம்,” என்று கூறியிருக்கிறார். 

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்!

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.

ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

 “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து

ராமனின் விளைவு கைகொடுத்தது! மருத்துவத்தில் அரிய சாதனை!

மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம்.

ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளுக்கு மேற்கொள்ளும் சிகிச்சை முறையில் ராமனின் விளைவை பயன்படுத்தும் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர்.

ஹென்றி போர்டு மருத்துவமனையில் இன்னோவேஷன் அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இது 99.5 சதவீதம் துல்லியம் வாய்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனித மூளையில் நரம்பு செல்களை சுற்றி திசுக்கள் உள்ளன. இதனை சுற்றி கிளையோபிளாஸ்டோமா மல்டிபோர்ம் (ஜி.பி.எம்.) எனப்படும் புற்று கட்டிகள் அதன் மீது படர்கிறது. இக்கட்டிகளை நீக்கி சிகிச்சை மேற்கொள்வது மருத்துவர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

 இந்த கட்டிகள், சீரான முனைகள் கொண்டு இருக்கும். மூளை திசுவிற்கும் இக்கட்டிகளுக்கும் வேறுபாடு இருக்கும். இது ஆரோக்கியமான திசு மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்கு கடினம் என்பதால் அவற்றை நீக்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பது அரிதாக உள்ளது. அத்தகைய நோயாளிகளுக்கு கதிரியக்கம் மற்றும் கீமோதெரபி முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், இது சரியான பலனளிக்கவில்லை. எனவே, மிக துல்லியமாக, திறமையாக மற்றும் குறைந்த செலவில் மூளை திசுவில் இருந்து புற்று கட்டிகளை உருவாக்கும் திசுக்களை விரைவாக வேறுபடுத்தி அறுவை சிகிச்சை அறையில் அதனை கண்டறிவதற்காக ஹென்றி போர்டு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற ராமன் ஒளி விளைவு சோதனையை அடிப்படையாக கொண்டு சிகிச்சை மேற்கொள்ளும் முடிவில் உள்ளனர்.

குறிப்பிட்ட பரப்பில் ஒளிகளை சிதற செய்து அவற்றில் தேவையற்ற திசுக்களை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேம்பட்ட முறையில் இந்த ஆய்வு முடிவு உலக அளவில் மூளையில் உருவாகும் கட்டிகளை குணப்படுத்த முதல் முயற்சியாக இது அமையும். மேலும், தொடர்ந்து ராமன் விளைவு குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று ஆய்வின் தலைவரான ஸ்டீவன் என். கல்கானிஸ் தெரிவித்துள்ளார்.

சும்மா டிப்ஸ்....?


மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு.  ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?.

1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனின் டி என் ஏ வை ஒரு மெத்தை விரிப்புலருந்து எடுத்தாங்க. அந்தளவுக்கு துவைக்காத மெத்தை விரிப்புகளில் மோசமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லத்தான் இந்த உதாரணம். அதனால ஹோட்டலுக்கு போனா துவைக்காத மெத்தை விரிப்புகள் இருந்தா உடனே மாத்த சொல்லுங்க.

 2. டாய்லெட் இருக்கும் அறையின் தரை: நாம வெளி இடங்களுக்கு போகும் போது..நம்ம பையை பக்கத்துலையே வச்சுப்போம்..சில சமயம் டாய்லெட் போனா கூட அங்கயும் எடுத்துட்டு போயி டாய்லெட் பக்கத்துல தரையில் வச்சுப்போம். அதுமாதிரி செய்யாதிங்க...ஏன்னா? டாய்லெட்டை விட டாய்லெட் தரையில்தான் அதிக கிருமிகள் இருக்காம்.

3. ஏ டி எம் மெசின்: கிருமிகள் அதிகமா இருக்கதுல மூனாவது இடம் ஏ டி எம் மெசினின் தொடு திரையும் key போர்டுதான். இந்த  key போர்டுல பூசப் பட்டிருக்கும் வேதிப் பொருள் ஒரு ஸ்லொவ் பாய்சனாம். மெசினை பயன்படுத்திய உடன் விரலை கண்ணு காது வாயில வச்சுடாம உடனே கழுவும் வேலைய பாருங்க.

4. ஆபீஸ் டெலிபோன்: பல பேர் பயன்படுத்தும் ஆபீஸ் டெலிபோனில் 25000 வரையான எண்ணிக்கையில் கிருமிகள் இருக்கிறதா அமெரிக்கா பல்கலை கழகம் நடத்திய ஆய்வு சொல்லுது.

5. ஹோட்டல் மெனு கார்ட்ஸ்: இந்த மெனு கார்ட்சை அப்போபோ ஆன்டி பாக்டீரியா திரவம் வச்சு தொடைக்கணும்...ஆனால் யாரும் செய்யவதில்லை. அதை தொட்டுட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டா கிருமிகள் நேரா வயித்துக்குத்தான்.

6. ஹோட்டல் டேபிள் வேர்ஸ்: சாப்பாட்டு மேசையில்  உப்பு, சக்கரை,ஊறுகா வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் ஏகப்பட்ட கிருமிகள் இருக்காம்.

7. ட்ராலிகள்: பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் அல்லது ஏர்போர்டில் ட்ராலிகள் வச்சுருப்பாங்க...அந்த ட்ராளிகலிலும் கிருமிகள் அதிகம்.சில பேர் குழந்தைகளை அதுல உக்கார வச்சு தள்ளிகிட்டு போவாங்க அதுமாதிரி செய்யாதிங்க.

8. கார்: காரில் உள்ள ஸ்டியரிங் வீலில் கிருமிகள் அதிகம். சில பேர் சாப்பிட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவாங்க. பின்ன ஸ்டியரிங் வீலில் இருக்கும் கிருமிகள் அப்படியே வயித்துக்குத்தான் ஸ்ட்ரெயிட்டா...

9. சமையல் அறை: சமைக்கற இடம், பாத்திரம் கழுவும் பேசணில் அதிகமா கிருமிகள் இருக்குமுன்னு எல்லாருக்கும் தெரியும். சுத்தமா வச்சுக்கணும் என்பதும் தெரியும்தானே..

10.ஜிம்: பல பேர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களில் கிருமிகள் இருப்பது இயற்கைதானே.

11. பூங்கா: பறவைகள் எச்சம் இருக்கும்... பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்...ஊஞ்சல், சறுக்கு மரம், சாய்ந்தாடும் பலகைகளில் கிருமிகள் எப்போதும் இருக்கும்.

இதுல சொன்ன நிறைய இடங்களுக்கு நாம போயித்தான் ஆகணும். நாம போகும் அந்த இடங்களையும் அந்த இடத்தில் உள்ள பொருள்களையும் நாம கழுவிக்கிட்டே இருக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன் படுத்திய பின்னரும் நம்ம கைய கழுவிக்கலாம்தானே....        

விஜய் இரட்டை வேடம் பலனளிக்குமா...?

‘துப்பாக்கி’ ஹிட்டுக்குப் பிறகு விஜய் – முருகதாஸ் மீண்டும் இணைகிறார்கள்.

சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில்’எதிர்நீச்சல்’ சதீஷ் காமெடியனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்கு ‘வாள்’ என்று டைட்டில் வைத்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது இல்லையாம்.

‘அதிரடி’, ‘வாள்’ என்று படத்துக்கு டைட்டில் வைக்கவில்லை. கூடிய விரைவில் அறிவிக்கிறோம் என்று படக்குகுழுவினர் சொல்கிறார்கள்.

இந்தப் படத்தில்  விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

ஆக்ஷன் ஹீரோ, காமெடி ஹீரோ என இரு வேடங்களிலும் பட்டையக் கிளப்பப் போகிறாராம்.

‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என்பதற்காக பன்ச் வசனங்கள் அதிகம் இடம்பெறுகிறதாம்.

தல கொடுத்த ஷாக்...!

தல போல வருமா! தல போல வருமா! என்ற வரும் பாடலை போலவே கோடம்பாக்கத்தில் தலயை பத்தி தான் இன்று பேச்சு.
தலயை வைத்து பில்லா, ஆரம்பம் படத்தை எடுத்த விஷ்ணுவர்தன் இப்போது தலயின் மிக நெருங்கிய நண்பர்.

ஆரம்பம் படம் மிக பெரிய வெற்றி விஸ்வரூபத்தை எடுத்தாலும் விஷ்ணுவர்தனுக்கு சொல்லும் படியாக வாய்ப்புக்கள் வரவில்லை என்பது உண்மை.

சரி நமக்கு தான் ஆர்யா இருக்கானே என்று அவருக்கு கதை பண்ணி கொண்டு இருக்க, சமிபத்தில் தல விஷ்ணுவர்தன்யை கூப்பிட்டு மறுபடியும் நம்ம ஒன்னு சேரலாம் விஷ்ணு  என்று சொல்லி ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்து ஒரு ஷாக் ட்ரீட்மென்ட்டை கொடுத்தார்.

என்ன தல சொல்றிங்க என்று அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் வெளியே வரவில்லையாம் விஷ்ணுவர்தன்

ரஜினி ரகசிய பயணம் சென்றுள்ளார்!

 கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.

நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த‌ தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.

பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர‌து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.

இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன‌து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.

ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.

படித்த பள்ளியை வலம் வந்தார்

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.

நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த‌ பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.

வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.

இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.

இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய‌வில்லை.

அதிகாலையிலேயே ரசிகர்கள்!

வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.

மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி

ஒரு கட்டத்தில் ரசிகர்க‌ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.

ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப‌தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர். 

போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு..!




ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

டிங் ஷெங்க் இயக்கி உள்ள இந்தப் படம் சீனா மற்றும் ஹாங்காங்க்கில் வெளியாகி அதிக வசூலை அள்ளி உள்ளது. ஒரு கும்பல் 33 பேரை கடத்தி பணய கைதிகளாக வைத்திருக்கின்றனர்.

அதில் ஒருவர் ஜாக்கி சானின் மகள். பணய கைதிகளில் ஒருவராக, அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து எல்லோரையும் ஜாக்கிசான் எப்படி மீட்கிறார் என்பது பரபரக்கும் திரைக்கதை.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், ஆங்கிலத்தில் பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை சுரபி பிலிம்ஸ் மோகன் வெளியிடுகிறார்

ஹீரோவாக மாறிய டெக்னீஷியன்கள் ..!



டெக்னீஷியன்களே ஹீரோக்களாக நடிக்கும் படம் கள்ளப்படம். இதுபற்றி இயக்குனர் ஜெ.வடிவேல் கூறியதாவது: 

புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு கோலிவுட்டில் வாய்ப்பு கிடைப்பது அரிது. அந்த வாய்ப்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக கருதப்படும் கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலைகள் தற்போது நலிவடைந்து வருகிறது.

முன்பெல்லாம் ஊர் திருவிழா என்றால் கூத்து நடக்கும். இப்போது பாட்டுக்கச்சேரி, குத்தாட்ட நிகழ்ச்சி தான் நடக்கிறது. பாரம்பரிய கலைக்கு முக்கியத்துவம்தரும் வகையில் இப்படத்தின் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது டாக்குமென்ட்ரி படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சத்துடன் த்ரில்லராக கதை கரு அமைந்துள்ளது.

சினிமாவில் முன்னேற புதியவர்கள் எப்படி போராட வேண்டி இருக்கிறது என்ற பின்னணியில் இக்கதை அமைந்திருக்கிறது. இப்படத்தின் இயக்குனரான நான், ஒளிப்பதிவாளரான ஸ்ரீராம் சந்தோஷ், இசை அமைப்பாளரான கே, எடிட்டராக பணியாற்றும் காகின் ஆகிய நான்குபேரும் அந்தந்த கதாபாத்திரங்களாக படத்தில் வேடமேற்றிருக்கிறோம்.

ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கிறார். திருவண்ணாமலை, சேலம் ஆகிய ஊர்களிலிருந்து நிஜகூத்து கலைஞர்களை வரவழைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன. இயக்குனர் மிஷ்கின் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சுட்டகதை பட ஹீரோ யின் லக்ஷ்மி ப்ரியா, நரேன், சிங்கம் புலி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடம் ஏற்றிருக்கின்றனர்.

Thursday, 30 January 2014

‘அஞ்சான்’ ஆகஸ்ட் 15-ந்தில் வருகிறான்!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. அடுத்தகட்டமாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்த்திரை காணாத பல இடங்களிலும் படமாக்க உள்ளனர். தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் முழு படத்தின் படப்பிடிப்பை நடத்தத் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா குத்துப்பாடல் ஒன்றுக்கு சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார். இப்படத்திற்காக ரெட் டிராகன் என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக ரெட் டிராகன் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘கோலி சோடா’ - 2–ம் பாகம் தயார்!

‘கோலி சோடா’ சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

கோலி சோடா படத்தில் நடித்த நடிகர் குழுவினர் நேற்று இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

நடிகர்கள் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோருடன் நடிகைகள் சாந்தினி, சீதா மற்றும் பட டைரக்டர் விஜய்மில்டன், சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஆகியோரும் ரசிகர்களை சந்தித்தனர்.

நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.

டைரக்டர் விஜய்மில்டன் பேசும் போது, ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்–க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக அபிராமி தியேட்டருக்கு வந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தியேட்டர் மேலாளர் பாலு தலைமையில் இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.மகாதேவன் மற்றும் திரையரங்க ஊழியர்கள் வரவேற்றனர்.

இதேபோல் ஸ்ரீனிவாசா தியேட்டர் சிவக்குமார், விஜயன், மற்றும் ஆனூர் தியேட்டர் ராமசாமி ஆகியோரும் வரவேற்றனர். 

பார்வதி ஓமனக்குட்டன்! இந்தி பீட்சா நாயகி!

உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரும் எதிர்பார்ப்போடு பில்லா-2வில் நடித்தார். பில்லா-2 பிளாப் ஆகவே பார்வதியின் கனவு கலைந்தது. இப்போது பேஷன் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என்று உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஹிட்டடித்த பீட்சாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எதையும் தேடிப்போவதில்லை. கிடைக்கிற வாய்ப்புகளை முழு மனநிறைவோடு செய்கிறேன். இப்போது உலகம் முழுவதும் பேஷன் ஷோக்களுக்கு போய் வருகிறேன். ரசிகர்களை நேரடியாக சந்தோஷப்படுத்தி பார்க்கிற அனுபவம் அது. உலக நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வாய்ப்புகள் அமையாதது வருத்தம்தான். ஆனாலும் பில்லா-2 எனக்கு ரொம்ப பிடித்த படம். ஸ்ரீகாந்த் நடிக்கும் நம்பியார் படத்தில் நானும் ஆர்யாவும் இணைந்து கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறோம். அடுத்து பீட்சா இந்தி ரீமேக்கில் நடிக்கிறேன். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன் என்கிறார் பார்வதி.

இது நம்ம ஆளு - சிம்பு - நயன்தாராவின் புதிய படம்!

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி படத்தின் டைரக்டர் பாண்டிராஜ் கூறியிருப்பதாவது: இந்தப் படத்திற்கு முதலில் கதவை திற காதல் வரட்டும், லவ்வுன்னா லவ்வு அப்படியொரு லவ்வு இந்த இரண்டு தலைப்பில் ஒன்றைத்தான் வைக்க முடிவு பண்ணியிருந்தேன். ஆனால் படத்துல நயன்தாரா நடிக்கிறதுன்னு முடிவானதும் இதைவிட பெட்டரா ஒரு தலைப்பு வைக்கணும்னு தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதான் அதுக்கான ஐடியா கிளிக் ஆச்சுது. சிம்பு ஒவ்வொருமுறையும் நயன்தராவை பார்க்குறப்போ "இது நம்ம ஆளு சார்"னு ஃபீல் பண்ணுற மாதிரி படத்துல நிறைய காட்சிகள் இருக்கு. அதையே படத்துக்கு டைட்டிலா வச்சிட்டா என்ன என்று யோசித்தேன். அதுதான் டைட்டில் இது நம்ம ஆளு.

சிம்புவுக்கு ஒரு லவ் பெயிலியராயிடும். கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. அவருக்கு நயன்தாராவை நிச்சயம் பண்ணிடுறாங்க. கல்யாணத்துக்கு 6 மாசம் இருக்கிற நிலையில இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிஞ்சுக்கிட்டு லவ் பண்றாங்க கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன பிரச்னைகள் வருதுங்கறதுதான் படத்தோட கதை.

சிம்புவும் சரி, நயன்தாராவும் சரி எந்த பிளாஷ்பேக்குக்கும் போகாமல் அவுங்கவுங்க கேரக்டரை அழகா நடிச்சிடுறாங்க. சூட்டிங் ஸ்பாட்டுல நல்ல பிரண்ட்லியா பழகிக்கிறாங்க. சில காட்சிகள் அவுங்களோட பழைய நினைவுகளை கிளர்ற மாதிரி இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே சின்சியராக நடிச்சுடுறாங்க. சில காட்சிகள்ல எப்படி நடிக்கிறதுன்னு கேட்பாங்க. அதான் நிறைய பண்ணியிருக்கீங்களே அதையே பண்ணிடுங்கன்னு சொல்வேன். சிரிச்சிக்கிட்ட நடிச்சு கொடுத்துடுவாங்க என்கிறார் பாண்டிராஜ்.

ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு! டி.டே இந்திப் படம் தமிழில் வெளியாகாது..?

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கு ஸ்ருதி ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியில் நான் நடித்த டி.டே படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன். இதற்கு என் அனுமதியை பெறவில்லை. என்னிடம் தகவலும் சொல்லவில்லை. இது ஒப்பந்தததை மீறுவதாகும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை இப்போது செய்து வருகிறேன். அதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் கமலஹாசன் மகள், குடும்பபாங்கான நடிகை என்ற நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கிறது. இந்தப் படம் வந்தால் அந்த இமேஜ் மாறும் என்பதால் படம் தமிழில் வெளிவருவதை ஸ்ருதி விரும்பவில்லை என்கிறார்கள்.

Wednesday, 29 January 2014

ஹீரோக்களிடையே போட்டி - 'ஜில்லா உனக்கா? எனக்கா?

 'ஜில்லா' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் இடையே போட்டி நிலவி வருகிறது.

விஜய் - மோகன்லால் என இரண்டு பெரிய ஹீரோக்கள் நடிப்பில் வெளியான படம் 'ஜில்லா'. விஜய்யின் போலீஸ் வேடம், மோகன்லாலின் தாதா நடிப்பு என மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வெளியான உடன், ரீமேக் உரிமைக்கு போட்டி நிலவியது.

ஆனால், படத்தினைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தெலுங்கிலும் படங்களைத் தயாரிப்பதால் ரீமேக்கையும் நாங்களே தயாரிக்க இருக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

சூப்பர் குட் நிறுவனமே தயாரிக்கவிருப்பதால் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் போன்ற முன்னணி நாயகர்கள் தான் நடிப்பார்கள் என்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து விசாரித்த போது, "படத்தில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறார்கள். ஆனால் யார் நடிக்க போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் ஓரிரு மாதத்தில் முடிவாகிவிடும்.

ராம்சரண், சீரஞ்சிவி இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்ற செய்தியிலும் உண்மையில்லை. விஜய் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் போட்டியிடும் நிலையில், மோகன்லால் வேடத்தில் நடிப்பதற்கும் சரியான நடிகர் ஒருவர் வேண்டும்." என்று கூறினார்கள். 

'ஐ' இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள் - ஷங்கர்!

 'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். 

’சிந்துபாத்’ - சிம்புவுக்கா? விக்ரமுக்கா? குழப்பத்தில் செல்வராகவன்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இரண்டாம் உலகம்’ எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை என்றாலும், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார்.

இவர் அடுத்து இயக்கும் படத்தை ’ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன்– சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.

விக்ரமை வைத்து இயக்குவதற்காக செல்வராகவன் ’சிந்துபாத்’ என்ற கதையை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தார்.

அந்த கதையை தான் இப்போது சிம்புவை வைத்து இயக்க இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

இது என் கதை இது என் அடையாளம் - விஜய்மில்டன்!

ஒரு படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தான் வரங்களோ தெரியவில்லை. இது என் கதை என் கதை என்று சொல்லி சில குரூப் கோடம்பாக்கத்தில் கும்மி அடிக்க தொடங்கியுள்ளனர்

இந்த காலத்தில் சினிமாவை வெறும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் மட்டுமே என்ற நோக்கில் பெரிய பெரிய ஹீரோக்கள் பின்னாடி அலையும் சில பல தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய்மில்டன் தனக்கும் தன் உயிராய் நேசிக்கும் சினிமாக்கும் இந்திய அளவில் ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக பாடுபட்டு எடுத்த கோலி சோடா படத்தை இது என்னுடைய கதை என்று சொல்லி சில விஷமிகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்து உள்ளனர் .அது மட்டும் இல்லாமல் கடந்து சில நாட்களாக பேஸ்புக்கில் இதை பற்றி ஒரு பட்டிமன்றமே நடந்து உள்ளது .

இதை கேள்விப்பட்ட விஜய் மில்டன் தன்னுடைய மறுப்பையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து விஜய் மில்டன் கூறுகையில், எதிர்தரப்பு சொல்வது உண்மை என்றால் என்னை பற்றி கோர்ட்டிலோ அல்லது இயக்குனர் சங்கத்திலோ புகார் கூறி இருக்கலாம். அதை விட்டு பொய்யான செய்தியை இணையதளம் முலம் பரப்பி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறாகள். ஏதுவாக இருந்தாலும் சரி நான் சந்திக்க தயார்,

படம் நன்றாக ஓடுகிறது என்று தெரிந்தவுடன் எங்க இருந்த தன வரங்களோ தெரியவில்லை.

இந்த கதையோடு நான் கடந்த இரண்டு வருடகாலம் பயணித்து உள்ளேன். பல துயரங்களுக்கு இடையே இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்து இருக்கிறேன். நான் ஒன்றை மட்டுமே கூறி கொள்கிறேன் தயவு செய்து விஷமிகள் சொல்லும் விஷயத்தை நம்பாதிர்கள்.

மாதக்கணக்கில் தாடி வளர்க்கிறார் கே.பாலசந்தர்! - உத்தமவில்லனுக்கு!

விஸ்வரூபம்-2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளில் தீவிரமடைந்திருக்கும் கமல், அடுத்தபடியாக, ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தனது நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதாவது நிஜத்தில் அவருக்கு ஸ்ருதிஹாசன், அக்ஷரா என்ற இரண்டு மகள்கள் இருப்பது போன்று, இந்த படத்தில் அவருக்கு நான்கு டீன்ஏஜ் மகள்களாம். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போகிறாராம் கமல்.

அதோடு, இதேபடத்தில் தனது குருவான கே.பாலசந்தரும் நடிப்பதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கமல். சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று சுற்றிக்கொண்டிருந்த கமலை, ஹீரோவாகும்படி அறிவுறுத்தியவரே பாலசந்தர்தான். சினிமாவில் இயக்குனராக நினைத்தால் ஆட்டோவில்தான் செல்ல முடியும். ஹீரோவானால் காரில் செல்ல முடியும். காரா? ஆட்டோவா? ரெண்டில் எது வேண்டுமென்று நீயே முடிவெடுத்துக்கொள் என்று கமலிடம், அவர் சொன்ன பிறகுதான், தீர யோசித்த கமல், தனது இயக்குனர் கனவை ஓரங்கட்டி வைத்து விட்டு, கதாநாயகனாக ஒரே மனநிலையுடன் களமிறங்கியிருக்கிறார்.

ஆனால், அப்போது தன்னை வைத்து பாலசந்தர் இயக்கும் படங்களில் அவரை நடிக்குமாறு கேட்டுக்கொள்வாராம் கமல். ஆனால், திரைக்குப்பின்னால் இருந்து உங்களையெல்லாம் இயக்கும் வேலையே எனக்கு போதும் என்று மறுத்து விடுவாராம் கே.பாலசந்தர்.

அப்படிப்பட்டவரை இப்போது தான் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் நடிக்க வைக்கிறார் கமல். அதோடு, இந்த படத்திற்காக இப்போதைய நடிகர்கள் முன்கூட்டியே தங்களது கெட்டப்பை சேஞ்ச் பண்ணுவது போல், பாலசந்தரும் மாதக்கணக்கில் தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் வளர்த்திருக்கும் தாடியைப்பார்த்தால், பெரியார், திருவள்ளுவர் போன்றிருப்பதாக சொல்கிறார்கள். ஆக, ஏதோ ஒரு பெருமை வாய்ந்த கதாபாத்திரத்தில் கே.பி நடிக்கப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது.

மலையாளம் செல்ல தயாராகும் ஸ்ருதி ஹாசன்!

 நடிகர் பஹத் பாஸிலுடன் ஜோடி சேரவிருக்கிறாராம் ஸ்ருதி ஹாசன்.

‘அன்னயும் ரசூலும்’ வெற்றிப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குனர் ராஜீவ் ரவியும், ஹீரோ பஹத் பாஸிலும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். ஆனால் இந்த முறை ராஜீவ் ரவி படத்தின் கதையை மட்டும் எழுதுவதோடு நிறுத்திக்கொள்கிறார். படத்தை நவின் வாசுதேவ் இயக்குகிறார். ஒளிப்பதிவாளரான இவர் ‘டாட்டூ’ என்ற குறும்படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் அழுத்தமாக காலூன்றியுள்ள ஸ்ருதிக்கு, கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கும் ஆசையும் இருக்கிறதாம்.

அதனால் இந்தப்படத்திற்கு ஸ்ருதியிடம் இருந்து கிரீன் சிக்னல் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் இயக்குனர்.

விஜயசேதுபதியின் இலட்சியம் - சிறப்புப் பேட்டி!

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ச்சியாக 4 பம்பர் ஹிட் கொடுத்து டோட்ல் கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பவர் விஜய்சேதுபதி. வில்லன்களுடன் மோதல் இல்லை, நடிகைகளுடன் கட்டிப்புடி சண்டையில்லை, தேவையில்லாத பில்டப் இல்லை.ஆனால் நானும் ஹீரோதான் என்று சொல்லும் விஜயசேதுபதி, ஒரு வித்தியாசமான சேதுபதிதான்.

* தொடர் வெற்றிக்கு பின்னால் விஜயசேதுபதியின் நிலை என்ன?

கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தபோது, ஒரு சிறிய கேரக்டர் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நான் ஹீரோ ஆவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் என்னையும் ஹீரோவாக்கினார் சீனுராமசாமி சார். தேசிய விருது பெற்ற ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமானது பெருமையாக இருந்தது. அதன்பிறகு நான் கமிட்டான படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அதன்பிறகு பீட்சா. இந்த படங்களில் நடித்தபோது பெரிய எதிர்பார்ப்பில்லை. ஆனால் வித்தியாசமான கதைக்களம். அதனால் நமக்கு நல்லதொரு அடையாளம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. ஆனால், படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றபோது இது நிஜமா என்று என்னை நானே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அதன்பிறகு நடித்த படங்களெல்லாமே அடுத்தடுத்து பெற்ற வெற்றி என்னை சொல்லமுடியாத சந்தோசத்தில் தள்ளி விட்டது. அதையடுத்து, இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பயம்தான் எனது இப்போதைய நிலை. அதனால் ஒவ்வொரு படியிலும் கவனமாக பார்த்து ஏறத் தொடங்கியிருக்கிறேன்.

* கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பதேன்?

என்னைப்பொறுத்தவரை இப்போது மட்டுமல்ல எப்போதுமே கதைதான் நாயகன். அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள்தான் நடிகர்-நடிகைகள். மேலும், கப்பல் போன்ற கதையில் ஒரு பயணி போன்று நடிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் நாயகன் என்று சொல்லிக்கொண்டு கப்பல் மாலுமியாக நான் ஆசைப்படவில்லை. இது என் பாணி. அதற்காக மற்றவர்களை நான் குறை சொல்லவில்லை. அது அவர்கள் பாணி. ஆக, மொத்தம் எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். அதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

* பெரும்பாலும் உங்கள் படங்களில முன்னணி கதாநாயகிகள் இடம்பெறுவதில்லையே ஏன்?

நான் செலக்ட் பண்ணும் கதைகள் அந்த மாதிரி. அந்த கதைகளின் கதாபாத்திரமும் பெரிய அளவிலான பிரமாண்ட நடிகைகளை கேட்பதில்லை. எப்படி நான் கதையின் நாயகனாக நடிக்கிறேனோ அதே மாதிரி கதையின் நாயகிகளைத்தான் கேட்கிறது. அதனால் பெரிய நடிகை வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. இது என் முடிவல்ல. என்னை இயக்கிய இயக்குனர்களின் முடிவு. மற்றபடி கதாநாயகி விசயத்திளெல்லாம் நான் தலையிடுவதில்லை. காரணம் அது என் வேலையில்லை. டைரக்டர்கள் சொல்வதைக்கேட்டு நடிப்பதோடு என்னை எல்லையை வைத்திருக்கிறேன்.

* காதல் கதைகளில்கூட நீங்கள் கதாநாயகிகளுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடுவது இல்லையே?

பீட்சா படத்தில் ரம்யா நம்பீசனுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கமாக நடித்தேன். அதன்பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்தான் முதன்முதலாக ஒரு பாடலில் நடனமாடினேன். அதில் காதலும் உண்டு. என்றாலும், எங்களுக்குள் எதிரும் புதிருமான காட்சிகளாகத்தான் இருந்தது. அதனால்தான் ரொமான்ஸ் பண்ணக்கூடிய காட்சிகள் அதில் இடம்பெறவில்லை. மற்றபடி அந்த மாதிரியான கதைகள் கிடைக்கும்போது கண்டிப்பாக நானும் கட்டிப்பிடித்து டூயட் பாடுவேன்.

* புறம்போக்கு படத்தில் ஆக்சன் ரோலில நடிப்பதாக கூறப்படுகிறதே?

எஸ்.பி.ஜனநாதன் படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்து சந்தோசமாக உள்ளது. அதோடு ஆர்யாவுடன் அந்த படத்தில் நடிக்கிறேன். அவரை விட நான் ஜூனியராக இருந்தபோதும் எனக்கும், ஆர்யாவுக்கு இணையான வேடத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஆனால், இதில் எனக்கு ஆக்சன் வேடம் என்று சொல்ல முடியாது. ஒரு மாறுபட்ட கேரக்டர். நான் நடித்து வெளியான படங்களில் எப்படி யதார்த்தமாக நடித்திருந்தேனோ அதேபோல் இந்த படத்திலும் ஒரு யதார்த்தமான வேடத்தில் நடிக்கிறேன். ஆர்யா எனக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

* ஷோலோ ஹீரோவாக நடித்து விட்டு, திடீரென்று மல்டி ஹீரோ கதைகளில் அதிகமாக நடிப்பதேன்?

புறம்போக்கு படத்தில் ஆர்யா, இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணு மற்றும் கிருஷ்ணாவுடன் ஒரு படம் என 3 படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறேன். ஆனால் இதற்கு முன்பு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி படங்களிலும் இரண்டு ஹீரோ கதைகளில்தான் நடித்திருக்கிறேன். அந்த படங்களில் என்னுடன் நடித்திருப்பவர்கள் பிரபலமில்லாத ஹீரோக்கள் என்பதால் அவர்கள் வெளியில் தெரியவில்லை.
மேலும், நான் திட்டமிட்டு என் ரூட்டை மாற்றவில்லை. எல்லாமே எதிர்பாராதவிதமாக அமைந்ததுதான். என்னிடம் வரும் கதைகளில் நல்லதாக ஓ.கே செய்கிறபோது அதில் எந்த நடிகர்கள் இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எனது கேரக்டர் பிடிக்கிறபட்சத்தில் ஓ.கே செய்து விடுகிறேன்.

* இப்போதுதானே வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.இந்த நேரத்தில் தயாரிப்பில் இறங்கியதேன்?

சினிமாவில் நாமாக திட்டமிட்டால் நடக்காது. நேரம் வரும்போது எப்படி யார் ரூபத்தில் வருமென்று தெரியாது. நமக்கு கிடைப்பது கிடைத்தே தீரும். இது என் அனுபவம். அந்தவகையில் நான் தயாரிப்பாளராக வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒருவர் வெளியில் இருந்து பணம் தருவதாக சொல்லி என்னை முதல்காப்பி அடிப்படையில் சங்குதேவன் படத்தை தயாரிக்க சொன்னார். அதனால் தயாரிப்பும் சினிமாவில் ஒரு முக்கிய அங்கம்தானே என்று இறங்கினேன். ஆனால் பணம் தந்து கொண்டிருந்தவர் திடீரென்று நிறுத்தி விடவே அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. இதைகூட ஒரு அனுபவமாகத்தான் எடுத்துக்கொள்கிறேன்.

* முன்னணி டைரக்டர் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றாலும் அவருக்காக நடிப்பீர்களா?

கதை விசயத்தில் நான் யாரையும் முகத்தைப்பார்த்து கேட்பதில்லை. காதுகளை தீட்டிக்கொண்டு கதைகளை கேட்கிறேன். அது பிடித்திருந்தால் ஓ.கே சொல்வேன். இல்லையேல் அப்புறம் பார்க்கலாம் என்று டீசன்டாக சொல்லி அனுப்பி விடுவேன். இப்படி நான் சொல்வதால் சிலருக்கு என் மீது கோபம் கூட இருக்கலாம். ஆனால் கதை எனக்கு பிடிக்காதபோது நான் என்ன செய்ய முடியும்.

* யாரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்கிறீர்கள்?

நடிப்பு விசயத்தில் நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு என்ன தோணுகிறதோ அதை செய்கிறேன். அதை எப்படி வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர்களுடன் ஆலோசிக்கிறேன். முக்கியமாக யதார்த்தம் மீறாமல் நடிக்க விரும்புகிறேன். மேலும், விஜயசேதுபதி எதையாவது புதிதாக செய்திருப்பார் என்று தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேலும், விஜயசேதுபதி படம் இப்படித்தான் இருக்கும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு படத்துக்குப்படம் மாறுபட்டு நிற்க ஆசைப்படுகிறேன். அதனால் இமேஜ் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல், சினிமாவில் இருக்கிற காலம் வரை ஒரு மாறுபட்ட கதையின் நாயகனாக வலம்வரவேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பொன்விழா காணும் காவியங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

1964ம் ஆண்டு வெளிவந்த படங்கள் இந்த ஆண்டு பொன்விழாவை கொண்டாடுகின்றன. அவற்றில் பல காவியங்கள் அடங்கும். யாரும் விழா எடுத்து பொன் விழாவைக் கொண்டாடப்போவதில்லை. நாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொள்வோம்.

எம்.ஜி.ஆர்

1964ம் ஆண்டு எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஆண்டாகவே இருந்தது. இந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த 7 படங்கள் வெளிவந்தது. தெய்வத்தாய், என்கடமை, படகோட்டி, பணக்கார குடும்பம், தாயின் மடியில், தொழிலாளி, வேட்டைக்காரன். இதில் 5 படங்களில் சரோஜாதேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி மேட் பார் ஈச் அதர் ஜோடியாக வலம் வந்த ஆண்டாக அமைந்தது. ஒரு படத்தில் சாவித்திரியும் ஒரு படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்திருந்தனர். இதில் தாயின் மடியில் தவிர மற்ற படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை.

சிவாஜி

சிவாஜி, கை கொடுத்த தெய்வம், நவராத்திரி, பச்சை விளக்கு, புதிய பறவை, ஆண்டவன் கட்டளை ஆகிய 5 படங்களில் நடித்திருந்தார். சாவித்ரி 3 படங்களிலும், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்துவந்த சரோஜாதேவி புதிய பறவையிலும், தேவிகா ஒரு படத்திலும் ஜோடியாக நடித்தனர். புதிய பறவை சஸ்பென்ஸ் த்ரில்லர் வரிசையிலும், நவராத்திரி 9 வேடங்களில் நடித்த முதல் படம் என்ற வகையிலும் காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாகின.

ஜெமினி-எஸ்.எஸ்.ஆர்

இவர்கள் இருவரையும் தவிர ஜெமினி கணேசன் வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, பாசமும் நேசமும், ஆயிரம் ரூபாய் என 4 படங்களிலும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அல்லி, பூம்புகார், உல்லாச பயணம், வழி பிறந்தது என 4 படங்களில் நடித்தார். பூம்புகர் காலத்தை வென்ற காவியமாக இப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இதுதவிர டி.எம்.சவுந்தர்ராஜன் நடித்த அருணகிரி நாதர், வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய திகில் படமான பொம்மை, ஸ்ரீதரின் காதல் காவியமான காதலிக்க நேரமில்லை, நாகேஷ் நடித்த வெள்ளிவிழா படமான சர்வர் சுந்தரம், ஆகிய முக்கியமான படங்களும் இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி

1964ம் ஆண்டும் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசை ராஜாங்கம்தான் இருந்தது. வீரக்கனல், வாழ்க்கை வாழ்வதற்கே, சர்வர் சுந்தரம், புதிய பறவை, பணக்கார குடும்பம், பாசமும் நேசமும், ஆண்டவன் கட்டளை, தெய்வத்தாய், கை கொடுத்த தெய்வம், காதலிக்க நேரமில்லை, கருப்பு பணம், கலைகோவில், பச்சை விளக்கு, படகோட்டி, படங்களுக்கு இசை அமைத்திருந்தனர். கே.வி.மகாதேவன் 9 படங்களுக்கு இசை அமைத்திருந்தார்.

பொன்விழாவை கொண்டாடும் அனைத்து படங்களுக்கும் நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

விஜய் ஜோடியாக தீபிகாபடுகோனே..!





விஜய் ஜில்லா படத்துக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இருவரும் துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.


 இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்துக்கு பின் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது.


சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற ஹிட் படத்தை டைரக்டு செய்தவர். கதை விஜய்க்கு பிடித்ததால் அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.


ஏ.ஆர்.முருகதாஸ் படம் முடிந்ததும் இதன் படப்பிடிப்பை துவக்குகின்றனர். இந்த படத்துக்கு கதாநாயகியாக தீபிகா படுகோனேயை தேர்வு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.


தீபிகா படுகோனே கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் இந்தியில் தயாரான சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் நடித்து இருக்கிறார்.


 அடுத்து விஜய் ஜோடியாகிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சன் + காமடி கலந்த விஜயின் புதுபடம்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் வாள் படத்தில் இரண்டு வேடங்களில விஜய் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. துப்பாக்கியை மிஞ்சும் ஆக்ஷன் கதை என்றாலும், விஜய்யின் வழக்கமான காமெடி காட்சிகளும் இப்படத்தில் குறைவில்லாத வகையில் ஸ்கிரிப்ட் உருவாகியிருக்கி இருக்கிறாராம் முருகதாஸ்.

அதனால் ஒருவர் ஆக்சன், இன்னொருவர் காமெடி என இரண்டுவிதமான கெட்டப்புகளில் விஜய் நடிப்பார் என்கிறார்கள். அதோடு, இப்படத்தில் இரண்டு கேரக்டர்களுக்கும் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, ஆக்சன் ரோலில் நடிக்கும் விஜய் தனது உடம்பை கட்டுமஸ்தாக மாற்றப்போகிறாராம்.

மேலும், தலைவா, ஜில்லா படங்களில் எதிர்பார்த்தபடி பஞ்ச் டயலாக்குகள் கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்த முடியவில்லை என்றொரு மனக்குறையில் இருக்கும் விஜய், வாள் படத்தை ரசிகர்களுக்கு நூறு சதவிகிதம் திருப்தியாக கொடுக்க திட்டமிட்டுள்ளதால், ஆக்சன், ஜனரஞ்சகம் என அமர்க்களப்படுத்த தயாராகிவிட்டார்.

Tuesday, 28 January 2014

சிம்ரன் வைத்த செல்ல பெயர்...?

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் வாணி கபூருக்கு நக்கலாக பெயர் சூட்டினார் சிம்ரன். பாலிவுட், மல்லுவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு படை எடுக்கும் ஹீரோயின்கள் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் வாணி கபூர்.

ஆஹா கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.  இந்தியில் வெளியான பேண்ட் பாஜா பாரத் என்ற படத்தின் ரீமேக் இந்த படம். கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். அதித்ய சோப்ரா தயாரிக்கிறார். தரண்குமார் இசை அமைக்கிறார். நானி ஹீரோ. இதுபற்றி வாணி கபூர் கூறியதாவது: தமிழில் பாலிவுட் ஹீரோயின்கள் நல்ல இடத்தை பிடித்திருக்கிறார்கள். அந்த பட்டியலில் நானும் இடம்பெறுவேன் என்று நம்புகிறேன்.

இப்படத்தின் ஆடியோ ரிலீஸில் முதன்முறையாக கலந்துகொண்டது மறக்க முடியாத அனுபவம் ஆகிவிட்டது. விழாவில் சிம்ரன் கலந்துகொண்டார். என்னை அவர்தான் அறிமுகப்படுத்தி பேசினார். குஷ்புவுக்கு இட்லி, சிம்ரனுக்கு இடையழகினு பட்டப்பெயர் இருப்பதுபோல் எனக்கும் பட்டப்பெயர் வைக்கும்படி அவரிடம் கேட்டார்கள். இந்த அர்த்தத்தை வேறுமாதிரி புரிந்துகொண்ட நான் எனக்கு மிளகா பஜ்ஜி பிடிக்கும் என்றேன். உடனே அருகில் இருந்த சிம்ரன் எனக்கு அறிவுரை சொன்னார். மிளகா பஜ்ஜி காரம்.

தமிழ்நாட்டில் முதலில் அறிமுகமாவதால் இனிப்பான பெயர் வைத்தால் நன்றாக இருக்கும். எனவே உனக்கு ஜிலேபி என்று பட்டப்பெயர் வைக்கலாம் என்றார். இரண்டுமே எனக்கு பிடித்தது. தமிழை ஓரளவு புரிந்துகொள்ளும் நான் விரைவிலேயே தமிழ் கற்றுக்கொண்டு சொந்த குரலில் டப்பிங் பேசுவேன். இவ்வாறு வாணி கபூர் கூறினார். 

தங்கைக்கு திருமணம்! சிம்புவின் ரூட் கிளியர்!

இயக்குனர் டி.ராஜேந்தர், உஷாவுக்கு சிம்பு, குறளரசன் என 2 மகன்கள், இலக்கியா என்ற மகளும் உள்ளனர். தந்தைபோல் சிம்பு நடித்து வருகிறார். குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். இலக்கியா எம்.பி.ஏ. படித்து வந்தார்.

 சிம்புவிடம் அவ்வப்போது அவரது திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டபோது, தங்கை இலக்கியா வுக்கு திருமணம் முடிந்த பிறகே திருமணம் செய்வேன் என்று கூறிவந்தார். இந்நிலையில் இலக்கி யாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்ற பி.டெக் பட்டதாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 10ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடக்கிறது. அன்று மாலை அதே இடத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி.ராஜேந்தர் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். 

‘கோலி சோடா’ பலத்த வரவேற்புக்கு மத்தியில்...

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கோலி சோடா’ படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடிக்க, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோலி சோடா’. 24ம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

விமர்சகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இன்று முதல் 40 திரையரங்குகள் அதிகப்படுத்த இருக்கிறார்கள். இதனால் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படம் குறித்து கேட்ட போது, “கண்டிப்பாக விநியோகஸ்தர்களுக்கு 2014ம் ஆண்டின் முதல் லாபம் சம்பாதித்து கொடுக்கப் போகும் படமாக ‘கோலி சோடா’ அமைய இருக்கிறது. ஏனென்றால் படத்தின் பட்ஜெட் கம்மி என்பதால் படத்தினை குறைந்த விலைக்கு வாங்கினோம். மக்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் கண்டிப்பாக மிகப்பெரிய லாபமிருக்கும்” என்றார்கள்.

இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் மில்டன், சுசீந்திரன் இயக்கி வரும் ‘வீரதீர சூரன்’ படத்திற்கும், பாலாஜி சக்திவேல் இயக்கவிருக்கும் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

பார்த்திபனும் விஜய் சேதுபதியும் இணையும் முதல் படம்!

பார்த்திபன் இயக்கி வரும் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தில் விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

தான் இயக்கும் படங்களில் நாயகனாக நடித்து வந்த பார்த்திபன், இயக்குநர் பொறுப்பு மட்டும் போதும் என்று இயக்கி வரும் படம் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’. முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் கெளரவ தோற்றத்திற்கு விஜய் சேதுபதியை நடிக்க வைக்க அணுகியிருக்கிறார் பார்த்திபன். உடனே நடிக்க ஒப்புக்கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் தளத்தில் “’கதை திரைக்கதை வசனம் இயக்க’த்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநாளே தளத்திற்கு வந்து நின்றார்.. Sorry, உட்கார்ந்தார் விஜய் சேதுபதி.அதுவும் காரில் வந்தால் நேரம் ஆகிவிடும் என பைக்கில் வந்தார்.


கார் கண்ணாடியின் வைப்பரில் சிக்காத இடத்தில் ஒட்டிக் கொள்ளும் பசும் பூவாய் ஒட்டிக் கொண்டது அவரது நட்பூ,” என்று கூறியுள்ளார்.

‘ரம்மி’ படத்ததின் முழு தகவல் - இயக்குநருடன்!

கோலிவுட்டில் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்துவரும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வேகமாகத் தயாராகி வருகிறது ‘ரம்மி’.

“இந்த படத்துக்கு பெரிய கிப்ட் அப்படின்னா கமல் சார் இந்த படத்தோட இசையை வெளியிட்டது தான். படத்தோட டிரெய்லர், பாடல்களை எல்லாம் பாத்துட்டு ஒரு எதார்த்த சினிமா பாத்த ஃபீல் இருக்குனு பாராட்டினார். ரம்மி விளையாடியிருக்கேன். டிக் அடிக்கிறது மக்கள்கிட்ட தான் இருக்கு” என்று உற்சாகமாகப் பேசுகிறார் படத்தின் இயக்குநர் பாலகிருஷ்ணன். படத்தைப் பற்றி என்ன கேட்டாலும் சற்றும் யோசிக்காமல் ரம்மி விளையாட்டில் சீட்டுகளை அழகாக கோர்ப்பது போன்று வார்த்தைகளை கோர்க்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து..

‘ரம்மி’ படத்தை ஆரம்பித்த விதத்தைச் சொல்லுங்க?

நான் படிச்ச கல்லூரி புல்லாங்குறிச்சி கிராமத்துல இருந்தது. படிக்கிறப்போ நடந்த நிகழ்வுகள், ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாத்தையும் திரைக்கதையா மாத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கேன். கல்லூரியை முடிச்ச பிறகு இயக்குநர் லிங்குசாமிகிட்ட ‘ஆனந்தம்’ படத்தில் இருந்து ‘பையா’ படம் வரை தயாரிப்பு மேற்பார்வையாளராக வேலை செஞ்சேன். ஒரு நடிகனா ‘பட்டாளம்’ படத்துல நடிக்க ஆரம்பிச்சேன். ‘மெளன குரு’, ‘நான் மகான் அல்ல’, ‘தூங்கா நகரம்’ அப்படின்னு 10 படங்கள்ல நடிச்சிருக்கேன். இந்தக் கதையை இயக்கலாம்னு ‘பட்டாளம்’ படம் பண்ணினப்போ முடிவு பண்ணி, படத்தோட வசனகர்த்தா பழனிச்சாமிகிட்ட கதையை சொன்னேன். அவர் நல்லா இருக்குன்னு சொன்னதோட இந்த கதையோட என் பயணம் ஆரம்பிச்சுது. இந்த கதை மூலமா நாம இயக்குநர் ஆகலாம்னு முடிவு பண்ணினேன்.

விஜய் சேதுபதி இந்த படத்தோட திரைக்கதை ஒரு மேஜிக்னு சொல்லியிருக்காரே. அப்படி என்ன மேஜிக் காட்டியிருக்கீங்க?

படத்தலைப்புக்கு காரணமே படத்தோட திரைக்கதை தான். ரம்மி விளையாட்டு ரொம்ப சுவாரசியமா இருக்கும். விளையாட உட்காந்தோம்ன்னா எந்திரிக்க மனசே வராது. அதே மாதிரி தான் காதலும். ரம்மிங்கிறது ஆடி ஜெயிக்கணும். காதல்ங்கிறது போராடி ஜெயிக்கணும், ரம்மி விளையாட்டை பாத்தீங்கன்னா ரொம்ப ஜாலியா ஆரம்பிக்கும், நீ இந்த கார்டு போடு, ஏன் அந்த கார்ட்டை போட்ட அப்படினு போகும். அந்த சூடு பறக்குற விளையாட்டு தான் இந்த படத்தோட தலைப்பு.

அடுத்து என்ன வரப்போகுது, அடுத்து யார் எங்கே வரப்போறா அப்படிங்குற நிலைமை படத்துல வரும். அதான் இந்த தலைப்பு வைச்சேன். படத்தோட கதையில திடீர்னு ஜோக்கர் கூட சீரியஸாகும். அதே மாதிரி இந்த படத்துல ஒரு மெசேஜ் சொல்லியிருக்கோம். லவ் சம்பந்தப்பட்ட அந்த மெசேஜ் கண்டிப்பா பெரியளவில் பேசப்படும்.

விஜய் சேதுபதி, இனிக்கோ பிரபாகர், ஐஸ்வர்யா, காயத்ரி இப்படி பாத்திரங்கள் தேர்வு எல்லாம் வித்தியாசமா இருக்கே?

விஜய் சேதுபதி இந்த படத்துக்கு கிடைச்சது பெரிய கிப்ட். இமான், யுகபாரதி இரண்டு பேருமே விஜய் சேதுபதிகிட்ட இந்த மாதிரி ஒரு கதையிருக்கு, கேட்டு பாருங்கன்னு சொன்னாங்க. கதையை கேட்ட உடனே நான் பண்றேன்னு சொல்லிட்டார். ஷுட்டிங் ஸ்பாட்ல இருந்து டப்பிங் வரைக்கும் கூடவே இருந்தார். அவரை நான் அப்பெல்லாம் விஜய் சேதுபதியா பாக்கல. அவரோட கதாபாத்திரமான ஜோசப்பாதான் பார்த்தேன். இனிகோ பிரபாகர் படத்துல சக்தின்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கார். அவரும் பிரமாதமா பண்ணியிருக்கார்.

ஹீரோயின் கேரக்டருக்கு நீச்சல் தெரியணும், அதே நேரத்துல கண்ணு நல்லா பெருசா இருக்கணும்னு தேடினேன். அந்த கேரக்டருக்கு நிறைய பேரைத் தேடினேன். நான் தேடின காம்பினேஷன் ஐஸ்வர்யாவுக்கு இருந்துச்சு. நிச்சயம் இந்த படம் அவங்களுக்கு நல்ல பேர் வாங்கி குடுக்கும். மார்டன் கேரக்டரா பண்ணிட்டு இருந்த காயத்ரியை இதுல கொஞ்சம் நேட்டிவிட்டியோட நடிக்க வைச்சிருக்கேன். எதையும் மிகைப்படுத்தாம அந்த களத்துல என்ன நடக்கும் அப்படினு கமல் சார் சொன்ன மாதிரி ரொம்ப எதார்த்தமா பதிவு பண்ணியிருக்கேன்.

தயாரிப்பு பணி, நடிகன் எல்லாத்தையும் தாண்டி இயக்குநர் ஆவதற்கு என்ன காரணம்?

நான் இயக்குநரா வர்றதுக்கு, இயக்குநர் லிங்குசாமிகிட்ட பணியாற்றியது தான் காரணம். அவர்கிட்ட அவ்வளவு விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் நாம எத நோக்கி போறமோ, அது கண்டிப்பா நம்மள நோக்கி வரும். புதுக்கோட்டைக்கு பஸ் ஏறினோம்ன்னா, பஸ் புதுக்கோட்டை நோக்கி போயிட்டு இருக்கும், புதுக்கோட்டை நம்மள நோக்கி வந்துட்டு இருக்கும். நம்மளோட பாதையில் உறுதியாக இருக்கோமாங்கிறது தான் முக்கியம். இயக்குநர் ஆகணும்னு முடிவு பண்ணி, அதுக்கு என்னை முழுமையாக அர்ப்பணிச்சேன். இதோ என்னோட படம் தயாராகி வெளியாகப் போகுது.

இப்போ இயக்குநர். தொடர்ந்து நடிகரா, இயக்குநரா?

என்னை நம்பி வரும் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் இயக்குற படங்களில் நடிக்க மாட்டேன். மற்றவங்க இயக்கி, நடிக்கிறாங்க. ஆனா, என்னை பொறுத்தவரை இயக்குநர் பொறுப்பு அப்படிங்குறது 100% கவனமா இருக்க வேண்டிய இடம். அதே மாதிரிதான் நடிகன் அப்படிங்குற பொறுப்பும். 1% குறைஞ்சா கூட ஸ்கிரீன்ல தெரிஞ்சுரும். நடிகன், இயக்குநர் அப்படினு ரெண்டு வேலையையும் பண்றது கஷ்டம்.

மந்திரமொழி

வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

நாவின் அமைப்பைப்போல் நம் சொல்லும் இரக்கத்தில் மலர்ந்த இன்சொல்லாக இருக்க வேண்டும். நிலைபெறும் நீங்கில் என் உயிரும் நீங்கும் – வள்ளலார். எல்லா உறுப்புகளையும் இரண்டாகப் படைத்த இறைவன், நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்ததில் காரணம் “வரப்புயர” என்று சுருங்கப் பேசி வாழ்வதற்காகத்தான். இரட்டை நாக்கு உடையவர்களை உலகம் நம்புவதில்லை. பொய் சொல்ல முயன்றால் சுற்றியுள்ள பற்கள் நாக்கைக் கடிக்கும். பொய் பேசியபின் பிறர் அறியாமல் நாக்கைக் கடித்துக்கொள்கிறோமல்லவா? அதிகம் பேசாதவனை உலகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை உலகம் மதிக்கிறது. பேசாத ஞானியை உலகம் தொழுகிறது.

மௌனத்தின் வெளிப்பாடுகள் பல. கல்யாணப் பெண்ணின் மௌனம் சம்மதமாகிறது. கரை கடந்த இன்பத்தில் மனிதன் மௌனிக்கிறான். துன்பத்தின் உச்சியில் மௌனமே பேசுகிறது. மௌனம் இறைவன் மொழி, அது தட்சினாமூர்த்தி த்துவம். “பிள்ளை மதி செஞ்சடையான், பேசாப்பெருமையினான்” என்று, தாயுமானவர் தன் மௌன குருவைப் பாடுவார். “நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது என்று வள்ளலார் பாடுவார்.

“சும்மா இரு சொல்லற என்றதுமே அம்மா பொருள் என அறிந்திலமே” என்று, முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ம்திரமொழி மௌனம் தான். கல் ஆலின் கடை அமர்ந்து மௌனித்து உடல்மொழியால் (Body Language) சின் முத்திரை த்த்துவத்தை போதித்த தட்சினாமூர்த்தியை “வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்” என்று திருவிளையாடற் புராணம் வர்ணிக்கும். அமைதி வேறு. மௌனம் வேறு. போருக்கு பின் அமைதி வரும். அமைதி மேலோட்டமானது. மோனம் உள்ளிருந்து வருவது. மௌனம் என்பது வார்த்தைகளற்ற நிலையல்ல. எண்ணங்கள் அற்ற நிலை. மௌனத்தை நம் முன்னோர்கள் “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தால் உணர்த்தினார்கள்.

ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள். “நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி, நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!” வள்ளலார்.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

உடம்பு அசையாமல் யோகநிலையில் கட்டைபோல் தன்னை வைத்திருப்பது காஷ்ட மௌனம். அதாவது இம்மௌனத்தில் உடல் பேசாது (No body language). இரண்டாவது வாக் மௌனம். வாய்மூடி மௌனமாக இருத்தல். இதைத்தான் பொதுவாக மௌன விரதம் உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான் என்கிறோம். இந்த மௌனத்தை மேற்கொள்ளும் சிலர் கையில் நோட்புக் வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாக எழுதி அறுப்பார்கள். மௌனத்திலிருந்து பெறும் அகத்தாய்வையும் அனுமதியையும் இவர்கள் இழக்கிறார்கள். அடுத்து மனோ மௌனம். இதுவே தலைசிறந்த மௌனம். இதில் மனம் அலைபாயாத விச்ராந்தியாக இருக்கும். சலனமற மனமே மோனத்தன் நிறைநிலை. இந்த மௌனத்தில் மனிதன் தன்னை உள்நோக்குகிறான். கடவுளோடு பேசுகிறான்.

மௌன தவம் செய்பவன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்கிறான். அவனது புறக்கதவுகள் மூடி அக்கதவுகள் திறக்கின்றன. அவன் பேசாதபொழுது அவனுள்ளிருக்கும் இறைவன் பேசுகிறான். தனது நிறை, குறைகளை அவன் ஆராய்கிறான். அவனது பேராசை நிறை மனமாகிறது. சினம் பொறைமாயக மாறுகிறது. கடும்பற்று ஈகையாகிறது. முறையற்ற பால்கவர்ச்சி கற்பாக மாறுகிறது. வஞ்சம் மன்னிப்பாகிறது. அவன் அனைத்தையும் சமன் செய்து சீர்தூக்குகிறான். அவனது தன் முனைப்பு, அகந்தை அகன்று தான் பரம்பொருளின் அம்சம் என உணர்கிறான். முடிவு வாழ்க்கை கல்வியில் தேர்ச்சி.

“தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே! ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே” வள்ளலாரின் பாடல் அவன் காதில் ஒலிக்கிறது. தான் இறைவனின் அம்சம் என்று உணர்ந்த மறுகணமே (யத்பாவம் த்த் பவதி) அவன் இறைவனது பேராற்றலையும், பேரறிவையும் பெறுகிறான். சாதனைகள் கைகூடுகிறது. அவன் மனம் நிறைகிறது.

மௌன நோன்பு இருவகைப்படும். ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரை பேசாமல் இருப்பது. இது மனதையும், உள்ளாற்றலையும் சிதறாமல் பாதுகாக்கும். காரியம் வெற்றியுறும். இரண்டாவது ஆன்ம தூய்மைக்காக குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவற்றில் விலகி நின்று நோன்பு எடுப்பது. இந்நோன்புதான் அகத்தாய்வுக்கு உதவும். அறிவின் இயக்கத்தில் சீரமைக்க உதவும் குண்டலினி யோகம், துரியாதீத தவம் போன்றவை மௌன தவமாகாது. அவை குறுகிய கால உளப்பயிற்சியாகும்.

ஜான்கேஜ் என்பவர் “மௌனம்” என்ற புத்தகத்தில் எழுதுகிறார், எந்த சப்தமும் வராத ஒரு அறையை ஆக்ஸஃபோர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கினார்கள். கேஜ் அதில் நுழைந்ததும் இரண்டு சப்தங்களைக் கேட்டார். ஒன்று இருதயம் இயங்குகிற சப்தம். அதாவது இரத்த ஓட்டத்தின் சப்தம். (Cardiac Echo) மற்றொன்று மனம் வேலை செய்கிற சப்தம். கேஜ் ஆச்சரியமாகச் சொன்னார். “இதுவரை நான் இந்த சப்தங்களைக் கேட்டதேயில்லை.”

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

“மௌனம்”

Friday, 24 January 2014

சிசிஎல் நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 25-ந் தேதி தொடங்குகிறது!

நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25ம் தேதி மும்பையில் துவங்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள். மும்பையில் 25ம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் எனும் தமிழ் நடிகர்கள் அணிக்கும் மும்பை ஹீரோஸ் எனும் இந்தி நடிகர்கள் அணிக்கும் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு வீரமராத்தி அணியும் போஜ்புரி அணியும் மோதுகிறது.

26ம் தேதி கேரள நடிகர்கள் அணியும், தெலுங்கு நடிகர்கள் அணியும் மாலை 3 மணிக்கு பெங்களூரில் மோதுகின்றனர். 7 மணிக்கு கன்னட நடிகர்கள் அணிக்கும், பெங்கால் டைகர்ஸ் அணிக்கும் போட்டி நடக்கிறது. பிப்ரவரி 1ம்தேதி துபாயில் இந்தி, தெலுங்கு, மலையாள நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 2ம் தேதி சென்னையில் போஜ்புரி, இந்தி, சென்னை, கன்னட நடிகர்கள் அணிகள் மோதுகின்றன. 22ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கிறது. 23ம்தேதி இறுதி போட்டி நடக்கிறது.

தமிழ் நடிகர்கள் அணியில் விஷால், விக்ராந்த், ஜீவா, விஷ்ணு, சிவா, சாந்தனு, பிரித்வி, ஆர்யா, ஸ்ரீகாந்த், ஷாம், பரத், ஜித்தன் ராமேஷ், ரமணா, உதய் போஸ், வெங்கட் சஞ்சய், நிதின் சத்யா, பிரேம்குமார், ஷரண், சுந்தர்ராமு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Thursday, 23 January 2014

பாலாவும் இளையராஜாவும் கூட்டணி....!


பரதேதி வெற்றிக்குப் பிறகு பாலா, தான் இயக்கவிருக்கும் அடுத்தப் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் கரகாட்டத்தின் பின்னணியில் உருவாக உள்ளது.

பரதேசியில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை அற்புதமாக இருந்தது. எனவே, சசிகுமார் படத்திற்கும் இசையமைக்க முதலில் ஜி.வி.பிரகாஷ்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம்.ஆனால் ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியை கொடுக்கவில்லையாம்.

அதனால ஜி.வி.யை கழற்றிவிட்டு பாலா, மீண்டும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவிடமே சென்றுவிட்டாராம். இதற்கு முன்பு இளையராஜா, சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய மூன்று பாலா படங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இருவரும் இணையும் நான்காவது படம்.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க பிரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வித்தியாசமான காதல் கதையை இந்த படத்தில் மேலும் இரு முக்கிய நடிகர்களும் நடிக்க உள்ளனராம். மற்ற விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, சமீபகாலமாக படங்களுக்கு சரியானபடி இசையமைப்பதில்லையாம் ஜி.வி.பிரகாஷ்.

ஆத்துக்கரை அம்மன்!


கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது.

விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந்தக் கோயிலின் ஆடித்திருவிழாவிற்கு சென்று நீர்மோர் வார்த்து பக்தர்களுக்கு கொடுத்து வருகிறார் கலியமூர்த்தி. இருபது வயதிருக்கும் போது ஆரம்பித்தது. போனவருடம் வரை எந்தத் தடங்களும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது. இந்த வருடம் அது முடியாமல் போய்விடுமோ என்று பயந்து கிடந்தார். கையில் காசும் இல்லை. உடம்புக்கும் முடியவில்லை என்பதை நினைத்தபோது கண்கள் கலங்கி கசிந்தது. ஆடித்திருவிழா காட்சிகள் அவருக்குள் திரையிட்டன. நீர்மோர் என்றால் சாதாரணமாக இருக்காது. அதற்காக மூன்று நாள் முழுமையாக மெனக்கெடுவார்.

திருவிழாவிற்கு முதல் நாளே பக்கத்திலிருக்கிற அத்திப்புலியூர் கிராமத்திற்கு அதிகாலையிலேயே சென்று விடுவார். அங்கிருக்கின்ற பண்ணையில் கறக்கின்ற பாலை தண்ணீர் கலக்காமல் வாங்கி விடுவார். ஐம்பது லிட்டர் பாலை பெரிய கேனில் அடைத்து தளும்ப தளும்ப கொண்டு வருவார். பிறகு மதியம் அந்தப் பாலைக் காய்ச்சி கொஞ்சம் தயிர் கலந்து பிறை ஊத்தி மூடி வைத்து விடுவார்.  மறுநாள் இரண்டு பெரிய சில்வர் கேன்களில் தயிர் ரெடியாகிவிடும். அன்று மாலையே பஸ் பிடித்து கோயிலுக்கு கிளம்பி விடுவார். ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற ஆத்தங்கரை நாச்சியம்மன் கோயிலில் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் விழா ஏற்பாடுகள் தொடங்கிவிடும்.

பொங்கல் வைப்பவர்கள், முடியெடுத்து நேர்த்திக்கடன் செய்பவர்கள், கிடா வெட்டுபவர்கள், சேவல் அறுப்பவர்கள், அலகு குத்தி ஆடுபவர்கள், தேர் இழுப்பவர்கள், தீச்சட்டி தூக்குபவர்கள், காவடி ஆடுபவர்கள், மண்சோறு திண்பவர்கள், மாவிளக்குப் போடுபவர்கள், காது குத்துபவர்கள், கடலை இறைப்பவர்கள் என்று கோயில் களைகட்டும். சின்னக் கோயில் தான் தீர்த்தா நதியின் தென்கரையில் கிழக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் மாரியம்மன் தான் ஆத்தங்கரை நாச்சியார். ஒரு பெரிய மொட்டைத் திடலில் தான் விழா நடக்கும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி விட்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு அவரவர் ஊருக்குப் புறப்பட்டு விடுவார்கள்.

ஒரு புதிய பாத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டித் தயிரை முகந்து ஊற்றி கொஞ்சமாக தண்ணீர் விட்டு கலப்பார் கலியமூர்த்தி. கொண்டு வந்திருக்கும் எலுமிச்சை பழங்களை தேவையான அளவுக்கு பிழிந்து ஊற்றுவார். ஒரு ஸ்பூன் எடுத்துக் குடித்து டேஸ்ட் பார்ப்பார். டேஸ்ட் பார்க்கும்போதே புளிப்புக்காக கண்களை இடுக்கிக்கொண்டு நல்ல புளிப்பு... சூப்பரா இருக்கு... இந்தாங்க... முதல் டம்ளர்... குடிங்க... என்று பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுப்பார்.
பச்சை மிளகாய் காரத்திற்கும், கறிவேப்பிலை - கொத்துமல்லி வாசத்திற்கும், நீர் மோர் வாசம் கோயில் முழுக்க மணக்கும். ஒருவருக்கே எத்தனை டம்ளர் வேண்டுமானாலும் கொடுப்பார். சிலபேர் தண்ணீர் பாட்டில்களில் கூட வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள்.

கொளுத்துகிற வெயிலுக்கு இதமாய் நீர்மோர் குடித்துவிட்டு ''ரொம்ப... நல்லாருக்குய்யா'' வருசா வருசம் இந்த ஆத்தங்கரை ஆத்தா புண்ணியத்துல நீர் மோர் வார்த்துக் கொடுத்து நீண்ட நாள் வாழணும்யா... என்று சிலர் வாழ்த்திவிட்டு போகும்போது நீர் மோர் குடிக்காமலேயே வயிறு குளிர்ந்து விடும் கலியமூர்த்திக்கு. தன்னுடைய இரண்டு மகன்களும் கூட இருந்த போது நீர்மோர் கொடுக்க 'கூட மாட' வருவார்கள். அது பெரிய ஒத்தாசையாக இருக்கும். இப்போது இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி வேலை ஜோலி என்று வெளியூர் போய்விட்ட பிறகு மனைவியோடு சில வருடங்கள் திருவிழாவிற்கு சென்று நீர் மோர் கொடுத்து வந்தார்.

''சின்ன மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதால், குழந்தையை கவனித்துக் கொள்ள மனைவியும் நெய்வேலி போய்விட்டாள். மனைவி கூட இல்லாததுதான் கை முறிந்தது போல இருந்தது கலியமூர்த்திக்கு. ''மனைவி இருந்திருந்தால் காய்ச்சலுக்கு இந்நேரம் கசாயம் வச்சி கொடுத்திருப்பா... வெளிய போய் காசுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிருக்கலாம்... இந்தக் காய்ச்சல் காணாம போற மாதிரி ஏதாவது ஒரு மாயம் பண்ணு... மாரியாத்தா... நீர் மோர் ஊத்தறது நின்று போயிடக்கூடாது... ஆத்தா'' என்று நினைத்தபோதே வாசலில் யாரோ நாலைந்து பேர் வந்து நின்றார்கள்.

இங்க யாருய்யா... கலியமூர்த்தி... நான்தான் கலியமூர்த்தி... நீங்கள்லாம் யாரு....? - காய்ச்சலில் நடுங்கிக் கொண்டே கேட்டார். ஐயா காலைலேந்து இந்த ஊர்ல இலவச மருத்துவ முகாம் நடக்குது. கண் பார்வைக் கோளாறு... கைவலி... கால்வலின்னு... ஊரே நம்ம ஆலமரத்து திடல்ல... கூடியிருக்கு... உங்களுக்கு ரொம்ப முடியலன்னு உங்க பக்கத்து வீட்ல இருக்கிற சரவணன் சொன்னார். அதான் உங்களை விட்லயே பார்த்து சிகிச்சை கொடுத்துடலாம்னு வந்திருக்கோம்.
நூறு டிகிரி ஜுரம் இருக்குய்யா... உங்களுக்கு. சூடுதண்ணில இந்த மாத்திரையை போட்டுக்கோங்க... மூணு வேளைக்குத் தர்றோம். ஒரு வாரத்துக்கு பச்சைத்தண்ணி குடிக்காதீங்க...

மாத்திரை விழுங்கிய கொஞ்சம் நேரத்தில் உடம்பு முழுக்க வியர்த்துக் கொட்டியது. விருட்டென்று எழுந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டார். தலைவலி உடம்பு பாரம் எல்லாம் இறங்கி கொஞ்சம் புதிய காற்றை சுவாசிப்பதுபோல் இருந்தது. காய்ச்சல் போய்டுச்சி ஆத்தா.... காசு மட்டும் தான் வேணும் ஆத்தா, பசங்களும் இன்னும் காசு அனுப்பல... ''நூறு நாள் வேலை'' பார்த்த காசும் இன்னும் அக்கவுண்ட்ல ஏறல... கடைசி வீட்டுக்காரரிடம் போய் கைமாத்து கேட்டுப்பாக்கலாம்... கண்களைத் திறக்க முடியாமல் சுவரில் சாய்ந்தபடியே கவலையோடு யோசித்துக் கொண்டிருந்தார் கலியமூர்த்தி.

யாரோ வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திவிட்டு வருவதுபோல் தெரிந்தது. கலியமூர்த்தி தாத்தா என்னை ஞாபகம் இருக்கா...? நான்தான்யா... ஒத்த வீட்டு முருகேசன். ''முருகேசா... எப்படிப்பா... இருக்க...? நீ இப்படி ஒரு காரியம் செஞ்சிட்டு ஊரவிட்டு ஓடிப்போய்டுவன்னு நினைக்கலப்பா...'' முருகேசன் இந்த ஊரில் சீட்டுக் கம்பெனி நடத்திக் கொண்டிருந்தான். நிறைய பேர் அவனிடம் மாதச்சீட்டு சேர்ந்திருந்தார்கள். கலியமூர்த்தியும் அவர் சக்திக்கு ஏற்ற மாதிரி நூறு ரூபாய் சீட்டு சேர்ந்திருந்தார். எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு ஓடிப்போவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. பத்தாயிரம், இருபதாயிரம் என்று பலபேர் இவனிடம் பணம் கட்டி ஏமாந்து போயிருந்தார்கள்.

கலியமூர்த்தியும் மூவாயிரம் ரூபாய் கட்டியிருந்தார். பல வருசங்களுக்கு முன் ஓடிப்போனவன் இப்போது ஏதோ பதவிக்காக வந்து நிற்கிறான். ''தாத்தா கோச்சுக்காதீங்க தாத்தா... அப்ப இருந்த சூழ்நிலை... பிரச்னை... ஊரைவிட்டு போறதை தவிர வேற வழியில்லாம போய்டுச்சி... தாத்தா... ஆனா... நிச்சயமா உங்களையெல்லாம் ஏமாத்தனும்னு நினைக்கல தாத்தா... ''இன்னைக்கு எல்லாரோட காசையும் கொண்டு வந்திருக்கேன் தாத்தா. முதல்ல உங்களைப் பார்த்துதான் திருப்பிக் கொடுக்கணும்னு வந்திருக்கேன் தாத்தா. உடம்பு சரியில்லாம இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். இந்தக் காசை வெச்சுக்கங்க தாத்தா. உடம்பை பாத்துக்கங்க...''

ஆடித்திருவிழாவிற்கு அம்மன் கோயிலுக்கு போறீங்களா... தாத்தா...? நல்லபடியா போய் மோர் ஊத்திட்டு வாங்க... நான் இன்னைக்கு ராத்திரியே மெட்ராஸ் கிளம்பணும் தாத்தா. நிறைய பேரை பார்த்து பணத்தை திருப்பிக் கொடுக்கணும். இன்னொரு நாள் வர்றப்ப... சாவகாசமா உட்கார்ந்து பேசறேன் தாத்தா...
கலியமூர்த்தி கையில் பணத்தை திணித்து விட்டு வேகமாக போய்விட்டார் முருகேசன். எல்லாம் நல்லபடியாக நடந்தாலும், இந்த முறை சோதனைமேல் சோதனையாக ஏதோ ஒரு தடை வந்துகொண்டுதான் இருந்தது. இரண்டு கேன்கள் நிறைய தயிரைத் தூக்கிக்கொண்டு பஸ் ஸ்டாண்ட் வந்தபோது... பஸ் ஸ்டாண்டில் ஒரு பஸ்கூட இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. பஸ் கிடைக்காமல் பயணிகள் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கும் வெவரம் தெரியாதா...? இன்னைக்கு காலைலேந்து அரசாங்க பஸ் டிரைவர் எல்லாம் ஸ்ட்ரைக் பண்றாங்களாம். ரோட்ல ஒரு வண்டியும் ஓடாதாம். ஏதோ அப்பப்ப... ஒரு தனியார் பஸ் தலை காட்டுது... அதுலயும் தாங்க முடியாத கூட்டம். இதுல எப்படி நீங்க இந்த தயிர் கேனை தூக்கிட்டு... அம்பது கிலோ மீட்டர் போய்ச்சேர்றது...? பஸ்சுக்காக காத்திருந்த இன்னொரு பெரியவர் கலியமூர்த்தியிடம் சலிப்புடன் சொல்லிக்கொண்டிருந்தார். ''நைட்டுக்குள்ளே போய் சேர்ந்தாதான் காலைல மோர் ஊத்த முடியும்யா... இப்படி பஸ் காரங்க காலை வாரிவிட்டாங்களே... நான் என்னய்யா... பண்றது, கண்ணீர் முட்டிக்கொண்டே வந்துவிட்டது கலியமூர்த்திக்கு.

நான் ஒண்டியாள்ன்னா... உருண்டு கூட போய்டுவேன்யா... தயிர்க்கேனையும், எடுத்துக்கிட்டு போகணும்யா... ஏழு ஊரு சனங்க தாகம் தணிக்கனும்யா... ஆத்தாளுக்கு இந்தத் தயிர் போய் சேரவில்லைனா என் உயிரே போய்டும்யா... இவ்வளவு தூரம் வந்துட்டேன். இப்படி சோதனை நடக்குதேய்யா... புலம்பித் தள்ளினார் கலியமூர்த்தி. ''ஐயா... அங்க பாருங்க... நீங்க போக வேண்டிய தனியார் பஸ்காரன் வர்றான். போங்க போங்க ஏற்கனவே கூட்டம் ரொம்பி வழியுது... பரவால்ல முட்டி மோதி ஏறுங்க... இதை விட்டீங்கன்னா அந்த ஊருக்கு போக வேற பஸ் இல்லை... ''ஏய் பெரிசு இவ்ளோ பெரிய கேன் வச்சுகிட்டு ஏற முடியாது... தள்ளு... தள்ளு...'' கண்டக்டர் அதட்டினார்.

''தம்பி... சாமி காரியம் தம்பி... ஊரு போய் சேரணும்யா... கொஞ்சம் பெரிய மனசு வை தம்பி.''
''அப்புறம் உன் சாமர்த்தியம் பெருசு...
முடிஞ்சா ஏறிக்கோ...'' பேசிக் கொண்டிருப்பதற்குள் பஸ் புறப்பட்டு விட்டது.
- ஏமாந்து போய் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார் கலியமூர்த்தி.
- ''ஐயா... நீங்க... ஈ கரைக்கா... போறீங்க...?''
- பக்கத்தில் வந்து ஒரு கார் நிற்க... காரில் இருந்தபடியே கேட்டார் டிரைவர்.
- ஆமா... ஆமா... தம்பி...

''நாங்க இங்க... சவாரி வந்தோம்யா... சவாரி இறக்கி விட்டாச்சு... சும்மாதான் திரும்பிப்போறோம்... வாங்கய்யா... நம்ம கார்ல போலாம்...'' ''கார்ல போற அளவுக்கு காசு இல்ல தம்பி...'' நீங்க ஒண்ணும் கார் வாடகை தர வேணாம்ங்கய்யா. பஸ்சுக்கு கொடுக்கற காசு குடுங்க போதும். ''ஏதோ... டீ.... டிபன்... செலவுக்கு தேறினா போதும்.'' இந்த லக்கேஜை வேற ஏத்திக்கணும் தம்பி... ஏத்திக்கலாம்யா... பின்னாடி டிக்கியில் தூக்கிப் போடுங்க... காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு கழுத்து வியர்வையை துண்டால் துடைத்தபடி முன்னால் பார்த்தார். கார் கண்ணாடியில் அழகாக எழுதப்பட்டிருந்தது. ''ஆத்தங்கரை நாச்சியம்மன் துணை.''