ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் வெற்றி இயக்குநர் ராஜேஷையும் கவனிக்கத்தக்க வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.
இப்பட வெற்றி காரணமாக படத்தின் தயாரிப்பாளாரான உதயநிதி, தன்னை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ராஜேஷுக்கு அளித்தார்.
தற்போது 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராஜேஷ். முந்தைய பாகத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா உடன் இரண்டாம் பாகத்தில் தமன்னாவும் இணைகிறார்.
மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
0 comments:
Post a Comment