Sunday, 2 March 2014

இன்றைய நடிகைகள் வருத்தபடவேண்டிய விஷயம்...!


மீனாவுக்கு 2009–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு 2011–ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு நைனிகா என பெயர் வைத்தனர். குழந்தை தற்போது வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ‘திரிஷ்யம்’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுகிறது. தற்போது மம்முட்டியுடன் நடிக்கவும் புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மீண்டும் நடிப்பது குறித்து மீனா அளித்த பேட்டி வருமாறு:–

நான் நான்கு வயதில் இருந்து சினிமாவில் நடிக்கிறேன். என் வாழ்க்கை படப்பிடிப்புகளில் மட்டுமே இருந்தது. குழந்தை பெற்று தாயான பிறகும் அதில்தான் இருக்கிறேன். சினிமாவை விட்டு வேறு எதையும் பார்க்க முடியவில்லை. என் வெற்றிகளுக்கு பெற்றோரும், ரசிகர்களும் என்னை படங்களில் நடித்தவர்களும் காரணமாக உள்ளனர்.

சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி என பெரிய நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். என்னை ஒரே டேக்கில் நடிக்கும் நடிகை என அழைப்பது உண்டு. ஒரு டேக் மேல் வாங்கினால் வருத்தப்படுவேன். தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த வேடமும், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டரும் முதலில் எனக்குதான் வந்தன. நான் மறுத்துவிட்டேன்.

நான் யதார்த்தமாக இருப்பேன். பலர் என்னை தவறாக வழிநடத்தியுள்ளனர். அதுபற்றி வருத்தம் இல்லை. இன்னும் சினிமாவில் நான் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளேன். இந்த தாய்மை சந்தோஷத்தை நான் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

சமீபத்தில் மோகன்லாலுடன் நடித்த ‘திரிஷ்யம்’ மலையாள படம் ஹிட்டானது. ரசிகர்கள் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். ‘சூதுகவ்வும்’, ‘பீட்சா’ படங்களில் முன்னணி நடிகர்கள் நடிக்காவிட்டாலும் நல்ல கதை என்பதற்காக அப்படங்கள் ஓடின.

இப்போதைய நடிகைகள் திறமைசாலிகளாக உள்ளனர். நன்றாக நடிக்கிறார்கள். ஆனாலும் பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி போன்றவர்கள் நடித்த வேடங்கள் இன்றைய நடிகைகளுக்கு வருத்தமான விஷயம். நான் சில வலுவான கேரக்டர்களில் நடித்துள்ளேன். தமிழ்படங்களில் சில காலமாக நடிக்கவில்லை. நல்ல வேடம் அமைந்தால் நடிப்பேன். 

0 comments:

Post a Comment