சூப்பர் ஸ்டாருக்கு முன்பாகவே உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த பெருமைக்குச் சொந்தக்காரரான பிரசாந்த் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோலிவுட்டிற்குத் திரும்பியுள்ளார்.
தனது சொந்தப் பட நிறுவனமான ஸ்டார் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான அருண் ராஜ் இயக்கத்தில் சாஹசம் திரைப்படத்தில் நடித்துவருகிறார் பிரசாந்த்.
பொதுவாக ஒரு திரைப்படம் உருவாகி, அப்படம் வெளியாகும் வரையிலும் அப்படத்தின் கதை வெளியில் கசிந்துவிடாமல் இருக்க படக்குழு மிகவும்
கவனத்துடன் இருக்கும்.
ஆனால் பிரசாந்த் நடித்துவரும் சாஹசம் திரைப்படத்தின் கதை வெளியாகியிருப்பதாக இணையத்தில் செய்திகள்
உலவிவருகின்றன.
படித்த இளைஞன் ஒருவன் வேலை தேடி அலைவதும், வேலை தேடும் இடங்களில் அவன் அவமானப்படுத்தப்படுவதாகவும், அதன் பின்னர் அந்த இளைஞனே சொந்தமாகத் தொழில் துவங்கி, அவனை அவமானப்படுத்தியவர்களை இவனது நிறுவனத்திலேயே வேலைக்காரர்களாக மாற்றுவதாகவும் விரிகிறதாம் இப்படத்தின் கதை.
இது இப்படத்தின் உண்மைக் கதையா அல்லது வதந்திகளா என்பது விரைவில் தெரியவரும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடித்துவரும் இப்படத்தின் ஹீரோயினுக்கான தேடல் நடைபெற்றுவருவதாகவும், முன்னணி நடிகை ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment