Sunday 2 March 2014

எம்.ஜி.ஆர் வைத்தியம் பற்றி தங்களிடம் பேசவேண்டும்..!


இந்த நேரத்தில் இவர்கள் குடியிருக்கும் வீட்டுக்காரரும், அவரது மனைவி மக்களும் தாங்கள் இதுவரைக்கும் எம்.ஜி.ஆரை பார்க்கவில்லை என்று சொல்லி பார்க்க வருகின்றார்கள். வீட்டு முதலாளி பெயர் ஆறுமுக நாடார். இவர் வயதானவர். அந்த ஊரிலேயே நல்லவர் என்று பெயர் உள்ளவர். இவருக்கு பல கள்ளுக்கடைகள் இருந்தன. சொந்தத்தில் தோப்புகளும் இருந்தன.

இவர் ஒரு நாட்டு வைத்தியர். இவர் எம். ஜி. ஆரை பார்த்துகொண்டே இருந்தவர் உடனே அவரே, அழைத்து கைபிடித்து நாடியை பார்த்தார். உடனே சத்தியதாயை பார்த்து உங்க மகன் ராமச்சந்திரனுக்கு வியாதி ஏதும் இல்லை. உஷ்ணம் அதிகமாக இருக்கிறது. அதனாலே குடல்புண், குடல் பூச்சி ஏற்பட்டு உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். இதை குணப்படுத்தி விடலாம்.

நீங்கள் கவலைப்படாதீர்கள் இதற்கு மருந்துகொடுத்து சரி செய்யலாம் என்று சொல்லி விட்டு பிறகு சத்தியபாமா அம்மாவை தனியாக அழைத்து அம்மா நாளை முதல் வைத்தியம் ஆரம்பிக்க வேண்டும். எப்படியாவது கம்பெனி முதலாளியிடம் சொல்லி ஒரு மாதம் லீவு வாங்கனும், இது எல்லாம் ரெடி செய்துகொண்டு என்னிடம் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

இந்த விஷயத்தை சத்தியதாய் எம். ஜி. ஆரிடம் சொன்னார். எம். ஜி. ஆர். அதைக் கேட்டு நான் நல்லாத்தான் இருக்கேன். என்னை எதற்காக தொந்தரவு செய்கின்aர்கள் என்று சொல்லி வருத்தப்படுகிறார். எனக்கு ஒரு மாதம் லீவு எல்லாம் கிடைக்காது வேண்டாம். விட்டுறும்மா என்று சொல்லி இவர்கள் இருவரும் கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள். சத்திய பாமா கம்பெனிக்கு சென்று நாராயணனை சந்தித்து அவர்களிடம் தன் மகன் எம். ஜி. ஆர். உடல் நிலையைப் பற்றி கூறினார்.

எல்லாவற்றையும் கேட்ட நாராயணன் நீங்கள் இருங்க முதலாளியை பார்த்து பேசலாம் என்று நாராயணன் கூறினார். அதன்படி கம்பெனி முதலாளியிடம் சென்று ராமச்சந்திரன், சக்கரபாணி தாயார் வந்து இருக்கிறார்.

ராமச்சந்திரனின் உடல் நிலையை பற்றி தங்களிடம் பேசவேண்டுமாம் என்று அதன்படி கம்பெனி முதலாளியிடம் சத்திய பாமாவை அழைத்துச் சென்று பேச வைத்தார். முதலாளியை பார்த்த சத்திய பாமா பயபக்தியோடு வணக்கத்துடன் தன்னுடைய இளைய மகனை பற்றி சுருக்கமாக, விவரமாக சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டு கம்பெனி முதலாளி சற்று யோசித்தார். பிறகு, சத்திய பாமாவை பார்த்து, அம்மா நீங்கள் சொல்கிறபடி ராமச்சந்திரனுக்கு உள்ள வேகமான செயலுக்கும், விவேகமான அறிவுக்கும் அழகுக்கும் அவனுக்கு தகுந்த உடம்பு இல்லையே என்பதை இப்போது தான் நான் யோசிக்கிறேன். நீங்கள் சொல்லுகிறபடி இந்த ஒரு மாதத்தில் ராமச்சந்திரனுடைய உடல் ஆரோக்கியத்தை சரியாககொண்டு வரலாம் என்றால், உடனே ராமச்சந்திரனிடம் சொல்லி உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். பெற்ற தாய் நான் எப்படியும் என் பிள்ளைகள் நல்லா இருக்கனும் என்று நினைத்து தான் செயல்களில் ஈடுபடுகிறேன்.

இதற்கு கடவுளுடைய கிருபையும் உங்களை போன்ற பெரிய மனிதர்களுடைய ஆசிர்வாதமும் உதவியும் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உடனே கம்பெனி முதலாளி உள்ளே சென்று சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் அழைத்து வர சொல்லுகிறார். அழைத்து வரச் சொன்னதும், முதலாளி ஏன் அழைக்கின்றார் நாம் என்ன தவறு செய்தோம் என்று யோசித்துக்கொண்டு இருவரும் முதலாளியிடம் வருகின்றார்கள். அந்த இடத்தில் தன்னுடைய தாயை இருவரும் பார்க்கின்றார்கள். பார்த்து அம்மா எதற்கு கம்பெனிக்கு வந்து இருக்கிறார்கள்?

முதலாளியை பார்த்துக்கொண்டு அந்த நேரத்தில் பையன்கள் தாயாரை பார்க்காமல் கை கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். முதலாளி பிறகு இருவரையும் பார்த்து கொண்டு ராமசந்திரா உனக்கு உடல் மிகவும் மெலிந்து உள்ளது. இன்னும் கொஞ்சம் உடல் பெருத்தால் நல்லா இருக்கும். உன் அழகுக்கும் உன் திறமைக்கும் உன் புத்தி கூர்மைக்கும் உடல் பெருத்து இருப்பது நல்லது.

அதனாலே நீ இப்போ உங்க அம்மா கூடபோய் இருந்து ஒரு மாதத்திற்கு நீ உன் உடல் நிலையை சரிபார்த்துக்கொண்டு வா, அதோடு காலையில் உன் வழிபடி எப்போதும் எடுக்கும் என் உடல் பயிற்சியை செய்யத் தவறிவிடாதே இடையிலே உனக்கு முடிந்தவரையில் கம்பெனிக்கு வந்து போகலாம் என்பதை கூறி தாயார் அவர்கள் வசம் அனுப்பி வைத்தார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த சக்கரபாணி அவருக்கு மனதில் தம்பி எப்படியாவது நல்ல குணமாகி வரவேண்டும் என்று ஆண்டவனை நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டு வெளியே சென்று தாயாருடன் வழி அனுப்பி வைத்தார்.

போகின்ற வழியிலே தன் தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் நான் ஒரு மாதம் வீட்டில் வந்து என்னுடைய உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது தேவையா, நம் குடும்பம் இருக்கும் நிலவரம் என்ன வீட்டுக்குப் போய் சென்ற பிறகு மறுநாள் காலையில் அந்த வீட்டிற்கு சொந்தக்காரர் ஆன ஆறுமுகம் நாடார் சத்திய பாமா வீட்டிற்கு வந்து ராமச்சந்திரனை அழைத்து நாடி பார்க்கின்றார்.

நாடி பார்த்த பிறகு எதுவும் சொல்லாமல் நாளை காலையில் 7 மணிக்கு அம்மா நான் உங்களிடம் சொன்னபடி அந்த மருந்தை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி முடிந்தவரை 1/2 லீட்டருக்கு குறையாமல் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பிறகு கண்டிப்பாக ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. நடக்கலாம், ஓடலாம், பசி எடுத்தால் நல்ல உணவுகளை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். 

0 comments:

Post a Comment