Tuesday, 25 March 2014

தலைவா! மறக்க முடியாத 10 நாட்கள் - விஜய் பேச்சு!


தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சைவம்’. நாசர் மற்றும் பேபி சாரா(நிலா) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.


இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் ”சைவம் திரைப்படத்தில் சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சைவம் திரைப்படத்தில் எனது மிகப்பெரிய குறிக்கோள், ரசிகர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு நிலாவை மறந்துவிட்டு தமிழ் என்ற பெயரை தான் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். சாரா தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


காரைக்குடியில் நடக்கும் ஊர்த்திருவிழாவிற்குச் செல்கிறது தமிழின் குடும்பம். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்படவேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்துவிட்டு தலைவா எடுத்தேன்.


தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ளமுடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம் தான்” என்று கூறினார்.


சைவம் என்று டைட்டில் வைத்துவிட்டு போஸ்டரில் சேவலின் படத்தை வைத்திருப்பதும், நாசர், சாரா என ‘தெய்வத்திருமகள்’ கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையாவா…!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் ‘ரஜினி முருகன்‘. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.


சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே‘ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா சிறப்பாக நடந்தது.



அனிருத் இசையமைத்திருக்கும் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் ‘எதிர்நீச்சல்’ பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் ‘டாணா‘ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.



‘டாணா’ படம் முடிந்த உடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம்.



இதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, 21 March 2014

மணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும்!


மணமகள், "மேக்கப்’ இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, முகம் பளபளப்பாகவும், மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும், முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.


மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட தடிமனான முடி இருக்கும். அவர்களுடைய முக வடிவத்துக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்திட வேண்டும். சிலருக்கோ முடி குறைவாக இருக்கும். அவர்களுக்கு தகுந்தபடி முன் பகுதியை சரி செய்யும் விதமாக, ஹேர்ஸ்டைல் செய்வது மிக முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.


குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும்,


நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும்.


முகம் நீளமாக இருந்தால், காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை, சுருள் செய்து தொங்கவிடலாம். இது, முகத்தை அகலமாக காட்டும். அகலமான முகம் உடையவர்களுக்கு, முகத்தின் முன் பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும். இதில், முகத்தின் முன்பகுதி அமைப்புக்கு ஏற்ப, மொத்த முடியையும், பின் நோக்கி இருப்பது போல், பின்பக்கமாக சீவுவதோ அல்லது நடு வகிடு எடுத்து, இரண்டு புறமும் பின்புறமாக சீவி, முகத்தின் வடிவத்துக்கேற்றாற் போல் உயர்த்தி காட்டலாம்.


நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து, மறு பக்கத்துக்கு பின்புறமாக தலை சீவ வேண்டும். இதில், நெற்றிச்சுட்டி வைக்க முடியாது. இந்த மாதிரி முன்புறம் சரி செய்யும் போது, முன் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் சுட்டி கிடைக்கிறது. அவற்றை வைத்தும் பொருத்திக் கொள்ளலாம்.


மாலை, ரிசப்ஷன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு, பின்னலை பின்னி விட வேண்டும். அக்காலத்தில், மணப் பெண்ணிற்கு, பூக்கள் மூலம் ஜடை செய்வர். ஆனால், இப்போதோ, பின்னலின் மேல் ஜரிகை, முத்து, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவைகளை கொண்டு அலங்கரிக்கலாம்.

Thursday, 20 March 2014

நயன்தாராவுடன் இணையும் தமன்னா..அக்கா?


ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் வெற்றி இயக்குநர் ராஜேஷையும் கவனிக்கத்தக்க வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.


இப்பட வெற்றி காரணமாக படத்தின் தயாரிப்பாளாரான உதயநிதி, தன்னை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ராஜேஷுக்கு அளித்தார்.


தற்போது 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராஜேஷ். முந்தைய பாகத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா உடன் இரண்டாம் பாகத்தில் தமன்னாவும் இணைகிறார்.


மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..!


பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகளில் ஒருவர் த்ரிஷா. “என்றென்றும் புன்னகை’ மூலம் இளைஞர்களின் மனதை மறுபடியும் ஒரு முறை கொள்ளையடித்த திரிஷாவுடன் ஒரு சந்திப்பு.

பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஹீரோயின். எப்படி உணர்கிறீர்கள்?

நேற்று நடிக்க வந்தவள் போலவே உணர்கிறேன். “மெüனம் பேசியதே’யில் நாயகியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பதினோரு வருடங்கள் முடித்து பன்னிரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நேற்றுதான் “மெüனம் பேசியதே’யில் நடித்தது போலிருக்கிறது. பதினோரு வருடங்கள் சீக்கிரமாகக் கடந்துவிட்டதை நம்பமுடியவில்லை. எந்த ஒரு படம் நடிக்கும் போதும் முதல் படம் போலவே உணர்ந்து நடிப்பது எனது ஸ்பெஷல் என நினைக்கிறேன். பெரிதாக சாதித்த உணர்வு, வீண் பெருமிதம் எல்லாம் இல்லை. ஆனால், சந்தோஷமாக உணர்கிறேன். நடிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஒரு சிறு இடைவெளி விழுந்து விட்டதே… தமிழ் சினிமாவை வேண்டுமென்றே நீங்கள் தவிர்ப்பதாக சில வதந்திகள் உங்களைச் சுற்றி இருப்பது தெரியுமா?

தமிழ் சினிமாவை நான் நேசிக்கிறேன். இந்த இடைவெளி எதேச்சையாக விழுந்த ஒன்று. “சமர்’ “என்றென்றும் புன்னகை’ இடையேயான ஒரு வருடம் பெரிய இடைவெளி போல என் ரசிகர்களை உணரவைத்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தமிழ் சினிமாவைத் தவிர்ப்பதாகவோ, தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள். ரசிகர்கள் என்னை நம்பத்தயாராக உள்ளனர். ஆனால், மீடியா என்னை நம்பத் தயாராக இல்லை.

இளம் ஹீரோக்களுடனும், வயதான ஹீரோக்களுடனும் பெருமளவில் நடித்துள்ளீர்கள். இவர்களிடையே ஏதாவது வித்தியாசத்தை உணர்கின்றீர்களா?

வித்தியாசம் பெரிதாக இல்லை. ஆனால், ஒற்றுமை என்னவென்றால் அனைவருமே கடின உழைப்பாளிகள். செய்யும் தொழிலுக்கு நேர்மையானவர்கள். ஒரே ஒரு வேறுபாடு, வயதான நடிகர்களுக்கு அனுபவம் அதிகம். அவர்களுக்கு சினிமா சார்ந்த புரிதல் அதிகம். அதற்காக இளைய நடிகர்கள் வயதான நடிகர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல. நான் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக உள்ளேன். வயதிற்கும் நடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இவர்களின் வளர்ச்சியை ஒரு அனுபவ நடிகையாக எப்படிப்பார்க்கிறீர்கள்?

ரொம்ப பிரமிப்பா இருக்கு. இவர்களின் அனைத்துப் படங்களையும் பார்த்தேன். அற்புதமா பண்றாங்க. அவர்களின் கதைத்தேர்வு, நடிப்பு என அனைத்துமே அற்புதம். ஒரு நடிகனின் பலமே தனக்கு தகுந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், தனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என அறிந்து கொள்வதிலும் தான் உள்ளது. விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இந்த விஷயத்தில் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.

சினிமா வாழ்க்கையில் உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா?

சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தியுள்ளேன். சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பதாக உத்தேசம்?

நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில பரீட்சார்த்தமான படங்கள் செய்ய விரும்புகிறேன். மசாலாப்படங்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு செய்தாகிவிட்டது. நடிப்பிற்குத் தீனி போடக் கூடிய சிறந்த படங்களை எதிர்பார்த்திருக்கிறேன். எது எப்படியோ நடித்துக்கொண்டிருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இப்போதுள்ள நடிகைகளில் உங்களுக்குப் பிடித்தவர்?

எல்லோருமே அற்புதமான பெண்கள். இப்போதுள்ள இளம் நடிகைகள் யாருக்குமே வெட்டிபந்தாவோ, வீண் பேச்சுக்களோ இல்லை. தமது கிரீடங்களை கழற்றி வைத்துவிட்டு மிக இயல்பாக இருக்கிறார்கள். நாங்கள் எப்போதாவது தான் சந்திப்போம். சந்திக்கும் வேளைகளில் ஜாலியாக இருப்போம். தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன் ஆகியோர் என் நெருங்கிய தோழிகள். என்னால் எல்லோருடனும் பழக முடியும் என்பதால் அனைவருமே என்னை நேசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களை நேசிக்கிறேன். எந்த ஈகோவும் இல்லாமல் சகோதரிகள் போலப் பழகுவோம். சந்திக்கும் வேளைகளில் சினிமா பற்றி பேச மாட்டோம். ஜாலியாகவும் கேலியாகவும் கல்லூரி மாணவிகள் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வதுபோலத்தான் பேசுவோம்.

உங்களைச் சுற்றியுள்ள இந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுத்தான் ஆக வேண்டும். கல்யாணம் எப்போது?

கல்யாண நேரம் வரும் போது கண்டிப்பாக நடக்கும்

சிவகார்த்திகேயன் – ஆண்ட்ரியா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான நடிகராக வளர்ந்துவிட்டார்.


ஒரு முன்னணி நடிகருக்கு உண்டான மரியாதை இப்போது சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர்கள் கொடுத்து வருகின்றனர்.


இவர் நடித்த மான் கராத்தே ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘தாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் அவர்களின் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனே நடிக்கிறார்.


இந்த படத்திற்கு ரஜினி முருகன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 இந்த படத்திலும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


இந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 என்றும் கூறப்படுகிறது.


ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.


முந்தைய படம் போல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

ஹன்சிகா படம் பணால்..!


ஹன்சிகா நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் ட்ராப்பான இரண்டாவது படம் இது.


சிம்பு, ஜெய், தீக்சா சேத்துடன் ஹன்சிகா நடித்த படம் வேட்டை மன்னன். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்த இந்தப் படம் படப்பிடிப்பு சில வாரங்கள் நடந்த பின் கைவிடப்பட்டது. மீண்டும் வேட்டை மன்னனை தூசு தட்டும் எண்ணம் யாருக்கும் இல்லை.


தற்போது தெலுங்கிலும் ஹன்சிகா நடிப்பதாக இருந்த ஒரு படம் கைவிடப்பட்டுள்ளது.


தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் துர்கா படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமானார். படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி.


படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரம் இயக்குனருக்கும், நாக சைதன்யாவுக்கும் முட்டிக் கொண்டது. இயக்குனரை மாற்றினால்தான் படத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்தார் நாக சைதன்யா.


தயாரிப்பாளருக்கு ஸ்ரீனிசார ரெட்டியின் கதையும் முக்கியம் ஹீரோ நாக சைதன்யாவின் கால்ஷீட்டும் முக்கியம்.


இந்த இருவரும் சமாதானத்துக்கு உடன்பட மறுக்க படத்தையே ட்ராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். ஹன்சிகாவுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

அமீர் ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா...!

யோகி படத்துக்குப் பிறகு அமீர் ஹீரோவாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார்.


இயக்குனர்களின் நடிப்பாசை அவர்களை எப்படி பாதாளத்துக்கு இழுக்கும் என்பதற்கு உதாரணம் அமீர்.


பருத்திவீரன் போன்ற ஒரு படத்தை தந்துவிட்டு ஹீரோ ஆசையில் ட்ராக் மாறியவர் அடுத்து தந்தது ஆதிபகவன் என்ற படுசுமார் படத்தை.


இன்னொரு படத்தை உடனே இயக்கும் தெம்பு அமீருக்கு இல்லை போலிருக்கிறது. மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.


இந்தமுறை அமீரை இயக்குகிறவர் சரணிடம் உதவி இயக்குனராக இருந்த கார்த்திக்.


அமீர் ஜோடியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஸ்கிரிப்ட் தயாராக இருந்தாலும் படப்பிடிப்புக்கு ஜுனுக்கு பிறகே கிளம்புகிறார்கள்.


ஏப்ரல் அல்லது மேயில் பெப்சிக்கு தேர்தல் நடைபெறுகிறது.


இப்போது பெப்சி தலைவராக அமீர் உள்ளார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது. அ


தனால் பெப்சி தேர்தல் முடிந்த பிறகு படப்பிடிப்புக்கு கிளம்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ராஜா ராணி சக்சஸ்மீட் - எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!


சில படங்கள் ஏன் எதற்கு ஓடுகின்றன என்ற ரகசியத்தை கண்டுபிடிப்பது கடினம். சென்ற வருடம் வெளியாகி கண்டபடி ஓடி வசூல் செய்தது அட்லீ இயக்கிய ராஜா ராணி. படம் தமிழில் பம்பர்ஹிட்.


அதனை தெலுங்கில் டப் செய்து சென்ற வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.


முதல் மூன்று தினங்களில் நான்கு கோடியை வசூலித்து ஆந்திர நடிகர்களுக்கு ஜெர்க் தந்துள்ளது படம்.


 டப்பிங் படம் என்ற அளவில் இது அபாரமான வசூல்.



முதல்நாளே படத்தின் வெற்றியை அறிந்த தயாரிப்பாளர் முருகதாஸ், ஆர்யா, அட்லீ, ஜீ.வி.பிரகாஷ் அனைவரும் நேற்று ஹைதராபாத் பறந்தனர்.


சூட்டோடு சூடாக சக்சஸ்மீட்டும் நடத்தினர்.


சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட படங்களில் இதுதான் டாப் கிராஸர். வரும் வெள்ளிக்கிழமை வீரம் வீரு டொக்கடே என்ற பெயரிலும், இவன் வேற மாதிரி சிட்டிசன் என்ற பெயரிலும் ஆந்திராவில் வெளியாகின்றன.

முக்கியப் புள்ளிகளுக்கு பினாமியாக மாறிய இயக்குநர் லிங்குசாமி...?

ஒரே நேரத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்து வருகிறார் இயக்குநர் லிங்குசாமி.


அதோடு, பாலாஜி சக்திவேல், விஜய் மில்டன் உட்பட அரை டஜன் இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஆளுக்கொரு ஆபீஸ் போட்டுக்கொடுத்து ஸ்டோரி டிஸ்கஷனில் உட்கார வைத்திருக்கிறார்.



இதை எல்லாம் பார்த்துவிட்டு லிங்குசாமிக்கு ஏதுய்யா இவ்வளவு பணம்? என்ற கேள்வி படத்துறையில் பரவலாக அடிபடுகிறது. அதற்கான பதிலாக இன்னொரு தகவலையும் சொல்கிறார்கள்.


லிங்குசாமி படம் எடுப்பது அவரது சொந்தப்பணம் இல்லை, அவரது பெயரில் திரையுலகில் புழங்கும் மொத்தப் பணமும் அழகிரியின் மகன் துரைதயாநிதியின் பணம். சுமார் 200 கோடியை லிங்குசாமியிடம் கொடுத்திருக்கிறார் துரை தயாநிதி என்கிறார்கள் கிசுகிசுப்பாக.


 இன்னொரு தரப்போ, இத்தகவலை அடியோடு மறுப்பதோடு லிங்குசாமியின் பணப்புழக்கத்துக்கான காரணமாக மதுரை அன்புவை சுட்டிக் காட்டுகிறார்கள்.


ஏறக்குறைய 50 கோடிக்கு மேல் மதுரை அன்புவிடம் கடன் வாங்கியுள்ளாராம் லிங்குசாமி. மாதத்தின் முதல் தேதி அன்று வாங்கிய கடனுக்கான வட்டியை கரெக்டாகக் கொடுத்துவிடுகிறாராம்.


அந்த நம்பிக்கையின் பேரில்தான் லிங்குசாமி எந்த நேரத்தில், எத்தனை கோடிகள் கேட்டாலும் அடுத்த அரை மணி நேரத்தில் ரெடி பண்ணி கொடுத்துவிடுகிறாராம் மதுரை அன்பு.

சினிமாவில் நாணயமாக நடந்து கொள்வது மிகப்பெரிய விஷயம்தான்..!

அசினு ரொம்ப நல்லவங்க..! கேரள அரசு விருது கொடுத்தாங்க..!


கேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மூலம் இந்திக்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாகி விட்டார்.


அங்குள்ள பிரபல ஹீரோக்களே அசினுக்கு பிரத்யேக சிபாரிசு செய்து வந்ததால், இப்போது வரை நீடித்துக்கொண்டிருக்கிறார்.


அவ்வப்போது மார்க்கெட் சரிந்தபோதும், யாராவது நடிகர்கள் புகுந்து அசினுக்கு கைகொடுத்ததால் இப்போதும் தாக்கு பிடித்துக்கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே தமிழ், தெலுங்கு, இநதியில் தான் இயக்கும் படத்தின் நாயகியாகவும் அசினை புக் பண்ணியிருக்கிறார் மணிரத்னம்.


இப்படி பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் அசின், சினிமாவில் தான் சம்பாதிக்கிற பணத்தின் ஒரு கணிசமான தொகையை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார். குறிப்பாக, அனாதை பிள்ளைகளை அவர் படிக்க வைத்து வருகிறார்.


 அவர்களது படிப்பு முடிகிற வரை மொத்த செலவையும் தானே ஏற்று வருகிறார். அதனால் அசினின் இந்த சமூக சேவையை உற்சாகப்படுத்தும் விதமாக சமீபத்தில் கேரளா அரசு, அசினை கெளரவித்துள்ளது.


இதையடுத்து, இன்னும் நிறைய சமூக சேவையை செய்ய தூண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அசின்.

நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் அலையும் அமிதாப் பச்சன்! என்ன கொடுமை சார்....!


பாலிவுட்டில் மிகவும் பிஸியான நடிகர் என கூறப்படும் நடிகர் அமிதாப் பச்சன்.


ஆனால் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், இந்த வயதில் எனக்கு அதிக வாய்ப்பு வருவதில்லை; நிறைய வாய்ப்புகள் தன்னை விட்டு போய்விட்டதாக கூறி உள்ளார்.


பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இமெயில் மூலம் அமிதாப் பேட்டி அளித்துள்ளார்.


 அதில், திரையுலகில் உங்களுக்கு வயதாகி விட்டால், உங்களுக்கு அதிக வாய்ப்புக்கள் கிடைக்காது.


 அவ்வாறு வாய்ப்பு கிடைக்காத போது உங்களைத் தேடி எது வருகிறதோ அதனை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.


எப்போதும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில் வயதானவர்கள் நடிக்க வேண்டி உள்ளது.


அதனால் அவர்கள் தங்கள் வயதை ஒத்த நடிகர்களையே கதைக்கு தேர்வு செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

தலைவலி அதிகம் வரமல் தவிர்ப்பது எப்படி?

தலைவலி! இதனால் அவதிப்படாதவர்களே இல்லை என்றே சொல்லலாம். சிலருக்கு எப்போதாவது ஏற்படுவதுண்டு. ஆனால் சிலருக்கு அதுவே அன்றாட இம்சையாக இருக்கும்.

இதில், அதிகமாக சிக்கி அல்லல்படுபவர்கள். உலகின் பணக்கார நாடான அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்தான்.

*இதுபற்றி அமெரிக்காவில் உள்ள தேசிய தலைவலி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அமெரிக்காவில் தினமும் தலைவலியால் 4.5 கோடிப் பேர் அவதிப்படுகிறார்கள். இதில் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 2 கோடியே 80 லட்சம் பேர்.

*தலைவலிக்கு பொதுவான காரணம் பதற்றம்தான். பிரச்னைகளை வெளியில் சொல்லாமல் மனதிலேயே வைத்திருப்பவர்களுக்கு தலைவலியால் பாதிப்பு ஏற்படும். இப்படிப்பட்டவர்களுக்கு தலையின் இரண்டு பக்கமும் கழுத்தின் அடிப்பகுதியிலும் வலி இருக்கும்.

*இதைவிட ஒற்றை தலைவலியின் பாதிப்பு மிகவும் அதிகம். இவர்களுக்கு குமட்டல், வாந்தி மற்றும் தலை சுற்றல் போன்றவை அதிகம் இருக்கும், வலியும் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை அல்லது அளவுக்கு அதிகமான தூக்கம், ஏமாற்றம், பசி, உணவுக் கோளாறுகளால் இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

எளிய முறையில் கையாண்டால் :

1. பொதுவாக இப்படிப்பட்ட தலைவலியால் தவிப்பவர்கள், சில எளிய முறைகளை கையாண்டால் இதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

2. தலைவலி ஏற்படுவதற்கு முன் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். தலைவலியின்போது அதிகமாக தண்ணீர் குடிக்க தோன்றுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

3. ஏனெனில் உடலில் நீர்சத்து குறைவு ஏற்பட்டாலும் தலைவலி வருவதுண்டு. சில உடற்பயிற்சி செய்வது நல்லது. இரவு நன்கு தூங்க வேண்டும்.

4. அதிக தூக்கமும் ஆபத்தைத் தரும். தலைவலி வரும்போது இருட்டு அறைக்குள் தனியாக அமர்ந்து இருக்கலாம்.

5. இப்படி ஏதாவது ஒரு முறையை கையாண்டால் ஒற்றை தலைவலியை தவிர்க்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்!

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…


தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.


தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.


சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.


முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?


கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.


நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.


கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.


ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.


சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.


பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.


ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும். 

வாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்!

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்கள்? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்ற…த்தை விரட்டி அடித்துவிடலாம்.

ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை.. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.

வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?

வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர்(ulcer) நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள். இது வாய்துர்நாற்றம் ஏற்பட முக்கிய காரணங்கள்.

மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.

மருத்துவ ரீதியான காரணங்கள்:

தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் infection ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும் இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள். அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவுமண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க வழிகள் பத்து:

1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப்பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்ப்டுத்திக்கொள்ளலாம்.

3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவதுபோல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர் நாற்றம் நீங்கும்.

5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.

8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.

9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை

வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம்.
சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க்கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.

கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது.(Mouth odor is caused by germs) அதேபோல ஒவ்வொரு முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும். ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.

இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.

குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துற்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக்கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும். இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி.. !

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஜீத் நடிக்க ஷாலினி எதிர்ப்பு.!


அஜீத்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன ஏ.ஆர்.முருகதாஸ் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அஜீத்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு முருகதாஸ் ‘தல’ என்று பெயர் கூட வைத்துவிட்டாராம்.



அஜீத் தற்போது கவுதம் மேனனின் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்தவுடன் அவருடைய கால்ஷீட்டுக்காக கே.வி.ஆனந்த், விஷ்ணுவர்தன், ஆகியோர்கள் ஏற்கனவே காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொண்டார் ஏ.ஆர் முருகதாஸ்.



தீனா படத்தில்தான் முதன்முதலாக அஜீத்தை ‘தல’ என்று கூப்பிட வைத்தது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் கஜினி படத்தில் இணைந்தனர். ஆனால் ஒருவாரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தில் இருந்து அஜீத் திடீரென விலகினார். அதன்பின்னர் சூர்யா நடிப்பில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.



தற்போது ஒருஆக்ஷன் கதையின் திரைக்கதை முழுவதையும் முடித்து கையில் வைத்துள்ள முருகதாஸ் இந்த படத்தில் அஜீத் நடித்தால் மிகவ்ம் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவரை நேரில் சந்தித்து கதையையும் கூறிவிட்டார். ஆனால் அஜீத்திடம் இருந்து இன்னும் முடிவு கிடைக்கவில்லை.



கவுதம் மேனனின் படத்தை முடித்துவிட்டு ஆபரேஷன் செய்யவேண்டும் என ஷாலினி வற்புறுத்தி வருவதால், மனைவியின் பேச்சுக்குத்தான் அவர் முதலிடம் கொடுப்பார் என கூறப்படுகிறது. மனைவி ஷாலினிகாக ஆபரேஷனுக்கு நேரம் ஒதுக்கிவிட்டு முருகதாஸ் படத்தை அஜீத் மறுத்துவிடுவார் என்றுதான் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.

கோச்சடையான் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. வி.ஐ.பி வெளியிட்ட ஆதாரபூர்வ அதிர்ச்சி தகவல்.!


கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதியை ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்த்தனர் என்பது போல செய்திகள் தெரிவித்தன.


 இந்நிலையில் கோச்சடையான் படம் வெளிவரும் தேதி குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் கோலிவுட்டின் மிகப்பிரபலமான ஒரு வி.ஐ.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் கோச்சடையான் படம் வெளிவர வாய்ப்பே இல்லை என்பதுதான்.


கோச்சடையான் படத்தை முதலில் தயாரிப்பதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் EROS என்ற நிறுவனம்தான். ஆனால் அதன்பின்னர் EROS நிறுவனத்துடன் ரஜினியின் சார்பில் மீடியா ஒன் என்ற நிறுவனம் கோச்சடையானின் உரிமையை வாங்கியது.



 ரிலீஸுக்கு முன்பாக ரூ.50 கோடியை ரஜினியின் மீடியா ஒன் EROS நிறுவனத்திற்கு திருப்பிக்கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் ரஜினி தற்போதைய நிலையில் ரூ.50 கோடியை திருப்பித்தரும் சூழ்நிலையில் இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். அனிமேஷன் செலவுகள் அளவுக்கு அதிகமாக ஆகிவிட்டபடியால் தற்போது பணச்சிக்கலில் இருக்கின்றாராம் ரஜினிகாந்த்.



எனவே தியேட்டர் அதிபர்களிடம் இருந்து கோச்சடையான் படத்துக்காக அட்வான்ஸ் வாங்கி, அந்த பணத்தில் இருந்து ரூ.50 கோடியை திருப்பித்தந்துவிடலாம் என ரஜினி நினைத்தார். ஆனால் வழக்கமான ரஜினி படமாக கோச்சடையான் இல்லை என்றும், இது ஒரு பொம்மை படம் என்றும் பரவலாக செய்தி பரவி வருவதால் இந்த படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க தியேட்டர் அதிபர்கள் தயங்கி வருகின்றனர்.



 மேலும் இந்த படத்துக்கு பெரிய தொகை எதையும் அட்வான்ஸாக கொடுக்க முடியாது என்றும், படத்தின் வசூலை பொறுத்துதான் பணம் கொடுக்க முடியும் என்றும் தியேட்டர் அதிபர்கள் வெளிப்படையாக தெரிவித்து வருவதால் தற்போது EROS நிறுவனத்திற்கு எப்படி பணம் கொடுப்பது என தெரியாமல் ரஜினி பெருங்கவலையில் இருக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - ‌விள‌க்க‌ம்


ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது.


ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது.


ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம்.


தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது.


இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தே‌நீ‌ர் போ‌‌ன்று அரு‌ந்து‌ம் போது‌ம் எல்லா நோய்களும் நீங்கிவிடும்.


 அதனால், ஆவாரம் பூவை தேநீர் போன்று போட்டுக் குடித்தால் சாவே வராது என்று சொல்கிறார்கள்.


 அதானால்தான், ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்ற பழமொழி வந்தது.

ஆரம்பிக்கும் முன்பே விலைபோன ஆர்யா படம் !



ஆர்யா தனி ஹீரோவா நடித்து கடைசியாக வெற்றி பெற்ற படம் பாஸ் என்கிற பாஸ்கரன். அதிலும் சந்தானத்தின் பங்கு சரிபாதி. ஆர்யாவுக்கான வியாபார எல்லை சிவ கார்த்திகேயன் அளவுக்கும் இல்லை. அப்படியிருக்க ஆர்யாவின் படம் ஒன்றை ஆரம்பிக்கும் முன்பே விலை பேசியுள்ளதாம் ஒரு நிறுவனம்.



புறம்போக்கு, மீகாமன் படங்களில் நடித்துவரும் ஆர்யா விரைவில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல், ஆரம்பம் என்று விஷ்ணுவர்தனின் அதிக படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஆர்யா. விஷ்ணுவின் புதிய படத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவும் நடிக்கின்றனர்.


படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நடிகர்கள் தேர்வு நடைபெறவில்லை. தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவாகவில்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில் விஷ்ணுவர்தனின் புதிய படநிறுவனமான விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதே அறியாத நிலையில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை வாங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனம் யுடிவியாக இருக்கும் என்பது கோடம்பாக்க பேச்சு.


புறம்போக்கு படத்தை அப்படத்தின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைந்து யுடிவி தயாரித்து வருகிறது. அதேபோல் அஞ்சான் படத்தை அப்படத்தின் இயக்குனர் லிங்குசாமியுடனும், நான் சிகப்பு மனிதனை விஷாலுடனும் இணைந்து யுடிவி தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சக்களத்தி சண்டை போட்ட சினேகா-ஓவியா. அதிர்ச்சியில் பிரசன்னா !


ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கும் பிரசன்னாவிற்கும், உடன் வேலை செய்யும் ஓவியாவிற்கும் காதல். இருவரின் ஒருவர் திடீரென வேலை மாற்றலாகி வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் வேலையை விட காதல் பெரிது என எண்ணி ஒரு அதிரடி முடிவை எடுக்கிறார் பிரசன்னா.


அதனால் ஏற்படும் விளைவுகளை காமெடியுடன் கூறியுள்ள கூறியிருக்கிறாராம் “புலிவால்” படத்தின் இயக்குனர் மாரிமுத்து.


இந்த படத்தில் காதலர்களாக நடித்த பிரசன்னாவிற்கும் ஓவியாவிற்கு நிஜமாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாக படக்குழுவினர் கிசுகிசுத்தனர்.


ஷாட் முடிந்ததும் இருவரும் கேரவனில் மணிக்கணக்கில் கடலை போடுகிறார்களாம். இந்த செய்தி சினேகாவில் காதில் விழுந்தவுடன் கொதித்து எழுந்துவிட்டாராம்.


பிரசன்னாவை உலுக்கி எடுத்ததோடு அல்லாமல் நேராக ஓவியா தங்கியிருக்கும் வீட்டிற்கே சென்று அசிங்கப்படுத்திவிட்டாராம்.


அந்த தெரு முழுக்க இதே பேச்சுதான். பின்னர் சினேகாவின் குடும்ப நண்பர் ஒருவர் வந்து சினேகாவை சமாதானப்படுத்தி அழைத்து சென்றிருக்கிறார்.


அந்த தெருவில் உள்ளவர்கள் இந்த சக்களத்தி சண்டையை பார்த்து வெறுத்து போய்விட்டார்களாம்.


பார்க்கத்தான் டீஸண்டாக இருக்கிறார்கள். ஆனால் சண்டை என்று வரும்போது இவர்கள் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் சேரியைவிட மிக கேவலமாக இருந்ததாக புலம்பி வருகின்றனர் அந்த ஏரியாவாசிகள்.

ஊருக்கெல்லாம் 'தலைவர்'னா ரஜினி: ஆனால் தனுஷுக்கோ...



தலைவா படம் ரிலீஸானதில் இருந்து ரசிகர்கள் விஜய்யை தலைவா என்று அழைக்கிறார்கள்.



 அதே சமயம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தான் தலைவர் என்று அன்போடு அழைக்கிறார்கள்.



ஆங்கில பத்திரிக்கைகளும் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிடுகின்றன.



இப்படி ஊருக்கெல்லாம் 'தலைவர்' ரஜினியாக இருக்க அவரது மருமகன் தனுஷுக்கோ தலைவர் என்றால் அது கவுண்டமணியாம்.



கவுண்டமணியின் பிறந்தநாளையொட்டி தனுஷ் ட்விட்டரில் நேற்று தெரிவித்துள்ளதாவது,


எனது ஆல் டைம் பிடித்த நடிகர், என் தலைவர், தி ஒன் அன்ட் ஒன்லி கவுண்டமணி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

அப்ப ஆர்யா இப்ப விஜய்….


கோலிவுட்டில் அன்றும் சரி, இன்றும் சரி ஈவ்னிங் பார்ட்டில் என்றாலே அதில் இருக்கும் கிக்கே தனி தான்.


 இந்த பார்ட்டி கோஷ்ட்டியில் சமீபகாலமாக ஒரு பெரிய நடிகரின் தலை அடிக்கடி தென்படுகிறதாம்… ஆம் அந்த பெரிய நடிகர் வேற யாரும் இல்ல இளைய தளபதி விஜய் தான்.


நீங்க நினைக்கிற மாதிரி அந்த விஷயத்துக்கு இல்லீங்க, அவருடைய சகாக்களுடனும், இளம் தலைமுறை நடிகர்களுடன் ஜாலியாக பேசி பழக தான் இந்த திடீர் விசிட் என்கிறார்கள்…


இதேபோல் ஆர்யாவும் இந்த மாதிரி பார்ட்டிகளில் சுற்றிக் கொண்டிருந்தார்.


தற்போது பார்ட்டியே வேண்டாம்பா என்று கூறிவருகிறாராம், இந்த திடீர் திருந்தலுக்கு என்ன காரணம் என்று விசாரித்தால் “அங்கெ போனா குடிக்க கூப்பிட்றானுங்க” என்கிறாராம்…


காரணம் இதுமட்டுமல்ல வீட்டில் இவருக்கு பெண் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம் தான்.


விஜய்யின் இந்த வருகையால் ஆனந்தத்திலும், குதூகலத்திலும் இன்னும் ரெண்டு ரவுண்ட் எக்ஸ்ட்ராவே போகிறதாம் எல்லோருக்கும் விஜயை தவிர…

அவர மாதிரி என்னையும் வீட்லையே உட்கார வைச்சிருவாரோ…?


தேர்தல் நேரம் வந்தாலே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படித்தான் போன சட்டமன்றத் தேர்தலில் காமெடி நடிகர் வடிவேலுவை அரசியலில் இறக்கி விட்டு அவரது திரையுலக வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள்.


இதனால் கடந்த மூன்று வருடங்களாக தமிழ்சினிமா அவரை ஓரங்கட்டி விட்டது.


இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடிவேலு இடத்தில் இருக்கும் சந்தானத்தை வைத்து ஒரு முழு நீள னகாமெடிப்படம் எடுக்க ஆசைப்பட்டாராம் உதயநிதி ஸ்டாலின்.


முதலில் அவசரப்பட்டு ஒப்பு கொண்ட சந்தானம் பிறகு எங்கே தேர்தல் சமயத்தில் ஒரு கட்சிக்கு ஆதரவாக இதை பெரிய பிரச்சனையாக்கி விடுவார்களோ?


என்ற பயத்தில் பின் வாங்கி விட்டார். முதலில் என்ன ஜி உங்ககிட்ட எல்லாம் பேமண்ட் பேச முடியுமா? குடுக்குறதைக் குடுங்க என்று சொன்ன சந்தானம் இப்போது இந்த தொகையை கொடுங்க என்று கழற்றி விடும் எண்ணத்தில் ஒரு பெரிய தொகையை கேட்கிறாராம்.


ஆதலால் சந்தானத்தை வைத்து படம் பண்ணும் யோசனையை பின்னுக்குத் தள்ளி விட்டாராம் உதயநிதி.

Wednesday, 19 March 2014

பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நான் நடிப்பதா..? பொங்கியெழுந்த நடிகை!


அவருக்கு தபு நினைவுக்கு வரவே அவரை அணுகினார். ஆனால் அவரோ பிரியங்காவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்துவிட்டார்.


அந்த கதாபாத்திரம் தனக்கு பொருத்தமாக இருக்காது என்று கூறி அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டார்.


 பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த தபு இந்நிலையில் தபு குயீன் இயக்குனர் விகாஷ் பெஹ்ல் ஷாஹித் கபூரை வைத்து எடுக்கவிருக்கும் படத்தில் அவரது காதலியாக நடிக்கிறார்.


ஷாஹித் கபூர் பிரியங்காவின் முன்னாள் காதலர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


42 வயதாகும் தபுவை தன்னைவிட 11 வயதே குறைவான பிரியங்காவுக்கு அம்மாவாக அதுவும் வயதானவராக நடிக்க கேட்டால் எப்படி ஏற்றுக்கொள்வார்.


சிவகார்த்திகேயனுக்கு விட்டுக்கொடுத்த ஜெயம்ரவி, ஜீவா!

எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி என்ற படத்திலேயே குத்துச்சண்டை வீரராக நடித்தவர் ஜெயம்ரவி. அதையடுத்து இப்போது பூலோகம் படத்தில் வடசென்னையைச்சேர்ந்த குத்துச்சண்டை வீரராக நடித்துக்கொண்டிருக்கிறார்.



 இப்படத்திற்காக கடும் சிரத்தை எடுத்து உடல்கட்டை மாற்றி ஹாலிவுட் வில்லனுடனும் மோதியிருக்கிறார் ஜெயம்ரவி.



இதேபோல், யான் படத்தில் ஜீவாவும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடிக்கிறாராம். இவர்களைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனும் குத்துச்சண்டை வீரராகத்தான் நடித்துள்ளாராம்.



ஆக, ஒரே நேரத்தில் மூன்று படங்கள் குத்துச்சண்டையை மையமாகக்கொண்டு கதையில் உருவாகியிருக்கிறது.



அதனால் இந்த படங்களில் யார் நடித்த படம் முந்திக்கொண்டு வருகிறதோ? என்பதை பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க இப்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள மான்கராத்தே தான் முதலில் வருகிறது.



ஆக, ஜெயம்ரவி, ஜீவா இருவரும் பின்வாங்கி நின்றபோதும், தங்கள் படங்களின் சாயலில் இல்லாமல் வேறு மாதிரியான கோணத்தில் கதை இருந்தால் தங்களை எந்த வகையிலும் அது பாதிக்காது என்று சொல்லிக்கொண்டு மான்கராத்தேயின் வரவை எதிர்நோக்கியுள்ளனர்.

அமீர்கானுக்கு தேர்தல் கமிஷன் அளித்த கவுரவம்!

2014 லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய சின்னங்கள் என்ற பட்டியலில் பாலிவுட் நடிகர் அமீர்கானையும் தேர்தல் கமிஷன் இணைத்துள்ளது.


தேர்தல் கமிஷன் தனது வாக்காளர் விழிப்புணர்வு பணியில் அமிர்கானையும் இணைத்துக் கொள்ள உள்ளது. இதற்காக, சிறப்பு குறும்படம் ஒன்றையும் அமீர்கான் தயாரித்து, நடித்து வருகிறார்.


பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலானவர்களை ஓட்டளிக்க செய்வதற்காக தேசிய சின்னங்கள் என்ற கவுரத்தை தேர்தல் கமிஷன் அளித்து வருகிறது.


இதுவரை இந்த கவுரவம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, குத்துச் சண்டை வீராங்கணை மேரி கோம், பாட்மிட்டன் வீராங்கணை சானியா மிர்சா, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோருக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.


இவர்கள் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு, எவ்வாறு ஒட்டளிப்பது என்பது குறித்தும் மக்களுக்கு புரிய வைக்கும் விளம்பரங்களில், தேர்தல் கமிஷனுக்காக நடித்துக் கொண்டுகின்றனர்.

பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதேவி!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்னர் சில காலம் காணாமல் போன அவரை, தனது முதல் படமான 16 வயதினிலே படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க தேடிப்பிடித்துக் கொண்டு வந்தார் பாரதிராஜா. ஆக, அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ரீதேவி.


தென்னிந்திய சினிமாவில் புகழ் கொடி நாட்டியவர், பின்னர் பாலிவுட்டிற்கும் சென்று கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அதையடுத்து, தன்னை இந்திக்கு அழைத்து சென்ற தயாரிப்பாளர் போனி கபூரையே திருமணம் செய்து கொண்டு சிவகாசி ஸ்ரீதேவி மும்பைவாசியாகி விட்டார். இப்போது அவருக்கு அர்ஜூன், ஜானவி, குஷி என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


இந்நிலையில், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் மூலம் சினிமாவில் மறுபிரவேசம் செய்தார் ஸ்ரீதேவி. அப்படத்தில் சவாலான வேடம் என்பதால் சிறப்பாக நடித்து மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தார்.


ஆனால் அடுத்து உடனடியாக படம் கிடைக்காதநிலையில், தமிழில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கயிருக்கும், த்ரிஷா இல்லேனா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கயிருக்கிறார்.


இப்படத்தில் தன்னை கதாநாயகியாக்கிய இயக்குனர் பாரதிராஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்கிறார். கதைப்படி கதாநாயகனின் பெற்றோராக நடிக்கும் இவர்களுக்கும் கதையில் பெரும்பங்கு உள்ளதாம்.


ஆக,. பாண்டியநாடு படத்திற்கு பிறகு பாரதிராஜாவும், இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவியும் மீண்டும் இப்படத்தில் நடிக்கயிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாராய்க்கு கெட்அவுட்! அசினுக்கு கட்அவுட்!!

மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பதிலாக அசின் நடிப்பதாக திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடல் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படம் தெலுங்கில் உருவாக உள்ளது. இதில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார்.


இப்படம் மூலம் ஐஸ்வர்யாராய் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் மீண்டும் ஐஸ்வர்யா நடிப்பதற்கு மாமியார் ஜெயா பச்சன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதையும் மீறி மணிரத்னம் படத்தில் நடிக்க ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்திருந்தார்.


இதனால் குடும்பத்தில் பிரச்னை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து ஐஸ்வர்யா நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி அவர் மணிரத்னத்திடம் ஆலோசனை செய்தார். கடைசிவரை கால்ஷீட்டுக்காக காத்திருக்க தயாராக இருப்பதாக கூறினார்.


மணிரத்னம். இதற்கிடையில் ஷூட்டிங் தொடங்கப்பட்டால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்று ஆலோசனை செய்தார் மணிரத்னம்.


ஐஸ்வர்யாவுக்கு பதிலாக அந்த வேடத்தில் அசினை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக மணிரத்னம் இன்னும் அறிவிக்கவில்லை. 

குமுதா ஹேப்பியோ ஹேப்பி!

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிப்பில் உருவாகிவரும் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தில் ”இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் நாயகியான நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார்.


தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி இணையும் புதிய படம் இடம் பொருள் ஏவல்.


கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் நாயகியாக நடித்த மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.


ஆனால் முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு அவருக்கு சரியாக நடிக்க வரவில்லை என்ற காரணம் காட்டி படத்திலிருந்து நீக்கப்பட்டார்.


இதனால் மனிஷாவிற்குப் பதிலாக விஜய் சேதுபதியின் ஜோடியாக நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் தற்பொழுது கொடைக்கானலில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதி - நந்திதா ஜோடி மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருந்தது நினைவுகூறத்தக்கது.


சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துவருகிறார்.

நடிப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார் அமீர்கான்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த படங்களில் நடித்ததன் மூலம் இந்திய சினிமாவை உலகறியச் செய்தவருமான அமீர்கான் நடிப்பிலிருந்து ஒருவருடம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


நேற்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அமீர்கான் இவ்வருடம் முழுவதும் தான் புதிய படங்கள் எதுவும் நடிக்கப்போவதில்லை என்றும், சமூக சேவையை மையப்படுத்தி தான் தொகுத்துவரும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை மென்மேலும் பிரபலமாக்க இந்த முடிவினை எடுத்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.


அமீர்கான் தொகுத்துவழங்கும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி இந்தியாவெங்கிலும் பிரபலமாக விளங்கிவருகிறது. இந்நிகழ்ச்சியின் பிரபலத்தால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பவுள்ளனர்.


சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி சமூக அவலங்கள் குறித்த உரையாடல் நிகழ்ச்சியாகும். குறிப்பாக பெண் சிசுக்கொலை, குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது, வரதட்சணைக் கொடுமை போன்ற கொடுமைகளைப் பற்றிய உண்மைகளைத் தோலுரித்துக் காட்டும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பானது.


கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் துவங்கிய இதன் முதல் சீசன் ஆகஸ்டில் நிறைவடைந்தது. இதன் இரண்டாவது சீசன் இம்மாதம் 2 ஆம் தேதி துவங்கி மூன்று எபிசோடுகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

30 கார்களை நொறுக்கித் தள்ளிய அஞ்சான் படக்குழு!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா இணைந்து நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யூ.டி.வி.மோசன்பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துவரும் இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிவருகிறது.


ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மேலும் அதிகரிக்கச் செய்யும் விதமாக, சுமார் 500 கார்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்சி சமீபமாகப் படம்பிடிக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 30 கார்கள் நொறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மாபெரும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இப்படம் உருவாக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மும்பையில் படமாக்கப்பட்ட ஒரு காட்சியில் சுமார் 80 லட்சம் செலவில் ஒரு மாபெரும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


அஞ்சான் படம் குறித்து எழுந்துவரும் எதிர்பார்ப்புக்களை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் தகவல்கள் பரவிவருகின்றன. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம், சுதந்திரத் திருநாளன்று வெளியாகவுள்ளது.

பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கிய சிவகார்த்திகேயன்!

எந்த ஒரு படம் என்றாலும் அதற்கான இசைவெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் சத்யம் திரையரங்கில் நடைபெறுவது வழக்கமான ஒன்று .சமீபத்தில் பிரம்மாண்டமாக கோச்சடையான் இசைவெளியீடும் அங்கு தான் நடைபெற்றது

.
இதில் தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் மட்டுமல்லாமல் பாலிவுட் ஸ்டார்ஸ் ஷாரூக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் கலந்துகொண்டபோது கூட எந்த ஒரு சச்சரவும் இல்லை .



ஆனால் நேற்று முன்தினம் சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே படத்திற்கு அவ்வளவு கூட்டம் சற்று பவர் ஸ்டார் நிகழ்ச்சி தான் ஏதோ அங்கு நடைபெறுகிறதோ என எண்ணும் அளவிற்கு கூட்டம்.



பின்பு தான் தெரிந்தது சிவகார்த்திகேயன், பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு இறங்கியிருக்கிறார் என்பதுதான்.



சொந்த ஊரான திருச்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக கல்லூரி மாணவர்களை இவ்விழாவில் சீன் போடுவதற்காக வண்டி வைத்து இறக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.



கூட்டம் கூட்டமாக தன் சொந்த ஊர் காரர்களையே இறக்கிவிட்டு பாதுகாப்பிற்கு 10 குண்டர்களுடன் வந்து இறங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.


எல்லாம் ஒரு விளம்பரம் தான்!!!!!!!!!!!!!

குக்கூ எனது கனவு படம் - மனம் திறக்கிறார் .. இயக்குனர் ராஜுமுருகன்

‘வழக்கு எண்18/9’ படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்துள்ள நாயகி மாளவிகா முதன் முதலில் தமிழில் நடித்து வருகிறார்.


ராஜு முருகன் இயக்கிய குக்கூ  படத்தில் அட்டகத்தி தினேஷ்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மாளவிகா.


இந்த படத்தை பற்றி மாளவிகா கூறுகையில், நான் இந்த படத்தில் நடித்ததில் மிகவும் சந்தோஷப்படுவதாகவும், முதலில் ராஜு சார் கதையை கூறும் போது நான் அந்த அளவுக்கு திறமையானவல் இல்லை என்று நினைத்தேன்.


பின் இப்படத்தில் நடிப்பது ஒரு சவாலாக கருதி இக் கதாபாத்திரத்திற்காக பார்வையற்றோர் இல்லத்திற்கு சென்றேன், அவர்களிடம் இருந்து என் நடிப்பிற்கான சிலவற்றை நான் கற்றுக்கொண்டேன் என கூறினார் மாளவிகா.


தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றுள்ளார்.


இப் படம் வருகிற வெளிக்கிழமை (மார்ச் 21) தமிழ் நாடு முழவதும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்படத்தக்கது.

புதிய படத்தின் பெயர் "த்ரிஷா- நயன்தாரா" ! தலைப்புக்கு எதிர்ப்பு வருமா?

த்ரிஷா, நயன்தாரா பெயரில் படம் உருவாகிறது. இதற்கு எதிர்ப்பு வருமா என்று கேட்டதற்கு ஹீரோ பதில் அளித்தார். நதியா, குஷ்பு என ஹீரோயின்கள் பெயரில் பாடல்கள் வந்திருக்கிறது.


சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கும் படத்திற்காக த்ரிஷாவும் வேணாம், நயன்தாராவும் வேணாம் ஹன்சிகாவே போதும் என்று சிம்பு பாடல் எழுதி பாடினார்.


இந்நிலையில் த்ரிஷா, நயன்தாரா தலைப்பில் புதிய படம் உருவாகிறது. மேஜர் ரவியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆதிக் இயக்குகிறார்.


ஏற்கனவே பென்சில் படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் இதில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.நடிகைகள் பெயரில் தலைப்பு வைத்தால் எதிர்ப்பு வருமே? என்று பிரகாஷிடம் கேட்டபோது,இப்படத்திற்கு த்ரிஷா அல்லது நயன்தாரா என இருவரில் ஒரு பெயரை வைக்க எண்ணி உள்ளோம்.


இவர்களில் ஒருவரிடம் அனுமதி கேட்டுவிட்டேன். இன்னொருவரிடம் அனுமதி கேட்க உள்ளேன்.


இருவரில் ஒருவரை கவுரவ வேடத்தில் நடிக்கவும் கேட்க உள்ளேன். இப்படத்துக்கு இசை அமைக்கும் பொறுப்பையும் நான் ஏற்கிறேன் என்றார். 

'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'

நேற்று முழுக்க சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பிஆர்ஓக்களிடையே கேட்கப்பட்ட கேள்விதான் இது.


கேட்டவர்கள்... தமிழக போலீசின் உளவுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்.


சிலர் தங்களுக்குத் தெரிந்ததை சொல்லி வைத்தார்கள். சிலர் அவர் முதலியார்தான் என்றார்கள். இன்னும் சிலர் இல்லையில்லை வேளாளர்தான், நல்லா தெரியும் என்றார்கள்.


'டைரக்டர் சுந்தர் சி முதலியாரா... வேளாளரா? உங்களுக்குத் தெரியுமாண்ணே?'


ஆனால் யாருமே எதற்காக இந்தக் கேள்வி என திருப்பிக் கேட்கவில்லை. அந்தக் கேள்வியை தங்கள் நண்பர்கள் குழுவுக்குள் கேட்டுக் கொண்டார்கள்.


எதுவுக்கு இயக்குநர் சுந்தர் சி சாதி பத்தி கேட்கிறார்கள் போலீசார்? திமுகவுல சீட் கிடைக்காத கோபத்துல குஷ்பு அதிமுக பக்கம் போகப் போறாங்களா... அல்லது சுந்தர் சி வேற ஏதாவது கட்சிக்காக பிரச்சாரம் பண்ணப் போறாரா?


-இப்படியெல்லாம் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்த ஒரு போலீஸ் அதிகாரியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, 'எங்களுக்கும் என்ன காரணம்னு தெரியாதுங்க. மேலிடத்துல விசாரிச்சு ரிப்போர் தரச் சொன்னாங்க.. பத்திரிகைகாரங்களுக்கு நல்லா அவரைப் பத்தி தெரியுமேன்னு விசாரிச்சோம், அவ்வளவுதான்,' என்றார்.

இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!


ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இளையராஜா எனும் வயதை வென்ற 'இளைஞரி'ன் வேகத்தைப் பார்க்கும்போது.

எண்பதுகளில் நாம் பார்த்த அதே வேகத்தோடு இந்த 2014லிலும் இசையைத் தந்து கொண்டிருக்கிறார் மனிதர். அதுவும் ஐந்து மொழிகளில்...


இந்த ஆண்டு மட்டும் அவரது இசையில் வரவிருக்கும் படங்களின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா... 20!


இளையராஜாவின் இசையில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் 20 புதிய படங்கள்!!


ஒரு ஊர்ல, நாடி துடிக்குதடி போன்றவை கடந்த ஆண்டு வந்திருக்க வேண்டியவை. அவற்றையும் சேர்த்தால் 22 படங்கள்.


பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் விரைவில் வரவிருக்கும் 'உன் சமையல் அறையில்' படத்துக்கு தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இசையமைக்கிறார் ராஜா. பாடல்களை மூன்று படங்களுக்கும் ஒரே மாதிரி போடாமல், மூன்றுக்கும் தனித் தனியாகவே இசையமைத்துத் தந்திருக்கிறார் இளையராஜா என்கிறார் பிரகாஷ் ராஜ்.


தெலுங்கில் பாபா சத்ய சாய் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டு மெகா படங்கள் ராஜாவின் இசையில் வரவிருக்கின்றன. மேலும் இரு படங்களுக்கு இசையமைக்க சம்மதித்துள்ளார், இவை 2015 கணக்கு!


எம்சும் பெண்குட்டியும், மார்த்தாண்ட வர்மா, காதா, சாம்ராஜ்யம் 2 போன்றவை ராஜாவின் இசையில் வரும் மலையாளப் படங்கள். சத்யன் அந்திக்காட்டின் அடுத்த படத்துக்கும் ராஜாதான் இசை.


கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் படம் தவிர, மைத்ரி மற்றும் இன்னொரு பெயரிடப்படாத படத்துக்கும் ராஜா இசையமைக்கிறார்.


தமிழில் ராஜராஜ சோழனின் போர்வாள், வேலு பிரபாகரனின் கலைஞனின் காதல், ஸ்ரீ ராமாநுஜர், மேகா, திறக்கப்படாத கதவு, மூங்கில் காடு, பாலா இயக்கும் படம், பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கும் படம், மகேந்திரனின் புதிய படம் போன்றவை ராஜாவின் இசையில் உருவாகி வருகின்றன.


இந்தியில் பால்கியின் புதிய படத்துக்கும் ராஜாதான் இசை என்பது நினைவிருக்கலாம்.

ஆரம்பிச்சிட்டாங்கப்பா... அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்திகேயனாம்!

எம்ஜிஆர் - சிவாஜி காலத்தில் நடிக்க வந்து, எண்பதுகளில் சூப்பர் ஸ்டார் என அறிவிக்கப்பட்டவர் ரஜினி. அன்றுமுதல் இன்றுவரை அந்த நாற்காலியில் அவர் ஒருவர்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்.


இன்னொன்று சூப்பர் ஸ்டார் என்பது ரஜினிக்கு மட்டுமேயான ஒரு அடைமொழியாகவும் மாறிவிட்டது.


ஆனால் இடையில் பல நடிகர்கள் இரண்டு மூன்று வெற்றிப் படங்கள் கொடுத்ததும் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தான் என்ற பேச்சு கிளம்பிவிடும். இதை பல நேரங்களில் சம்பந்தப்பட்ட நடிகர்களே கிளப்பிவிடுவதுண்டு.


எண்பதுகளின் ஆரம்பத்தில் கார்த்திக் - பிரபு, இறுதியில் ராமராஜன், ராஜ்கிரண், அடுத்து விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு, சூர்யா - விக்ரம் இப்படி பலரும் இந்த சூப்பர் ஸ்டார் அடைமொழிக்குள் திணிக்க முயன்று கடைசியில்.. ம்ஹூம்.. சூப்பர் ஸ்டார் என்ற நிலை காலத்தை தாண்டியது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள்.


இந்த நிலையில் தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக் கொண்டு (சினிமாவில் அப்படி சொல்லிக் கொள்ளாமல் இருந்தால்தான் ஆச்சர்யம்!) நடிக்க வந்த சிவகார்த்திகேயன், வரிசையாக மூன்று ஹிட்கள் கொடுத்ததும், இப்போது தன்னைத் தானே சூப்பர் ஸ்டார் என நினைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளார்.


மான்கராத்தே ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த அத்தனைப் பேருமே இதனை உணர்ந்ததோடு, வெளிப்படையாக இது ரொம்ப ஓவராச்சே என்று கமெண்டும் அடித்துவிட்டுச் சென்றனர்.


இந்த விழாவில் பேசிய அனைவருமே சிவ கார்த்திகேயனை அடுத்த சூப்பர் ஸ்டார் என்றனர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரோ, ரஜினியையும் சிவகார்த்திகேயனையும் ஒப்பிட்டுப் பேசி, அடுத்த சூப்பர் ஸ்டார் சிவகார்த்தி என்றார்.


இந்த பேச்சுகளால் மந்திரித்துவிட்டதுபோலாகிவிட்ட சிவகார்த்திகேயன், தனது பேச்சில் இதற்கெல்லாம் மறுப்போ, சங்கடப்பட்ட உணர்வையோ காட்டிக் கொள்ளவே இல்லை. மாறாக ரொம்ப மகிழ்ச்சியாக இவற்றை ஏற்றுக் கொண்டார்.

ஆஞ்சநேயா படத்தின்போது அஜீத் கேட்டாரே, 'ஏன் நான் சூப்பர் ஸ்டார் பதவிக்கு ஆசைப்படக் கூடாதா?' என்று. அந்தத் தொனியில்தான் அவர் பேச்சு அமைந்தது!

ரஹ்மானை ஏன் ஓரங்கட்டினார்கள்...? ஹாரிஸ் ஜெயராஜ் முழு விளக்கம்!


கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கௌதம் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசை ரஹ்மான். இதையடுத்து அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதற்கும் ரஹ்மானே இசை என்று முதலில் கூறப்பட்டது.


ஆனால் நேரமின்மை காரணமாக ரஹ்மான் இசையமைக்கவில்லை எனவும் கௌதம் தனது முன்னாள் நண்பர் ஹாரிஸை இந்தப் படத்தில் பயன்படுத்த உள்ளார் எனவும் உறுதிச் செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.


கௌதமின் முதல் படம் மின்னலேயில் அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். அதன் பிறகு கௌதம் படம் என்றால் இசை ஹாரிஸ் என்பது எழுதப்படாத விதியானது. இந்நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்காக ரஹ்மானிடம் சென்றார் கௌதம்.


இந்தத் தகவலை அவர் ஹாரிஸிடம் கூறவில்லை. மூன்றாவது நபர் மூலமாகவே ஹாரிஸ் இந்தத் தகவலை அறிந்து கொண்டார். அப்போது இருவருக்குள்ளும் விழுந்த விரிசல் இன்னும் சரியாகாமல் உள்ளது.


பலமுறை கௌதம் பிரிவுக்கு நான்தான் காரணம், மீண்டும் ஹாரிஸுடன் இணைய விரும்புகிறேன் என கூறியும் பிரிந்தவர்கள் கூடுவதற்கான எந்த வழியும் உருவாகவில்லை. இந்நிலையில் நமக்குக் கிடைத்திருக்கும் செய்தி நேர்மறையானது. கௌதம் அஜீத்தை வைத்து இயக்கும் படத்துக்கு இசையமைக்க ஹாரிஸ் இசைந்துள்ளாராம்.


விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.

கார்த்தியின் "காளி" கல்லாகட்டுமா..? புது தகவல்!


சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜா என்று ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த கார்த்தி நிதானமாக அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். இந்த மூன்றுப் படங்களுக்குப் பிறகு வெளிவந்த பிரியாணியும் சுமாராகவே போனது.


மூன்று தோல்விகளுக்குப் பின் கார்த்தி ஒப்பந்தமானது அட்டகத்தி படத்தை இயக்கிய ரஞ்சித்தின் காளி படம்.


காளி என்று பெயர் வைத்த படங்கள் அனைத்தும் எதிர்பாராத விபத்துகளை சந்தித்துள்ளதால் காளி என்ற பெயரை மாற்ற முடிவு செய்தனர். ஆனால் இதுவரை பெயர் இறுதி செய்யப்படவில்லை.


விறுவிறுப்பாக தொடங்கிய படப்பிடிப்பு அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு சிறிது தடைபட்டது. படத்தின் ஸ்கிரிப்டை மீண்டும் செதுக்கி சீராக்கினர். இப்போது படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


சமீபத்தில் படத்தின் கிளைமாக்ஸை பெரம்பூரில் படமாக்கினர். இரவு நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டது.


இந்தப் படத்தில் வடசென்னையைச் சேர்ந்த காளி என்ற இளைஞனாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கேதரின் தெரேசா. சந்தோஷ் நாராயணன் இசை.


ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் படத்தை தயாரித்து வருகிறது.

தாணு கையில் "என்னமோ ஏதோ" அதிசயம்!


நேர்எதிர் படத்தை வெளியிட்ட வி கிரியேஷன்ஸ் தாணு கௌதம் கார்த்திக் நடித்திருக்கும் என்னமோ ஏதோ படத்தின் விநியோக உரிமையை வாங்கியுள்ளார்.


தெலுங்கில் ஹிட்டான அலா மொதலயிந்தி படத்தின் தமிழ் தழுவல்தான் என்னமோ ஏதோ.


தெலுங்கில் நானி நடித்த வேடத்தை கௌதம் கார்த்திக்கும், நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் ராகுல் ப்‌ரீத் சிங்கும், சினேகா உல்லால் நடித்த வேடத்தில் நிகிஷா படேலும் நடித்துள்ளனர்.


தெலுங்கில் படத்தை இயக்கியவர் நந்தினி ரெட்டி.


என்னமோ ஏதோவை ரவிபிரசாத் புரொடக்சன்ஸ் தயாரிக்க ரவிதியாகராஜன் இயக்கியுள்ளார். கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக்கின் இரண்டாவது படம் இது.


சமீபத்தில் இந்தப் படம் சென்சாருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் யு சான்றிதழ் அளித்தனர்.


இந்தப் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை தாணுவின் வி கிரியேஷன்ஸ் வாங்கியுள்ளது.

விஜய்யின் பவர்புல் வில்லன் நீல் நிதின் முகேஷ்...?


விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நீல் நிதின் முகேஷ் நடிப்பார் என கூறப்படுகிறது.


இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முதலகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்த போது வங்கமொழி நடிகர் டோட்டா ராய் சௌத்ரி அதில் கலந்து கொண்டார். அவர்தான் படத்தின் வில்லன் என்று கூறப்பட்டது.


ஆனால் அந்தச் செய்தியை முருகதாஸ் மறுத்தார். கொல்கத்தா சம்பந்தப்பட்ட காட்சிக்கு ஒரு வங்க நடிகர் தேவைப்பட்டார். அதற்காகவே டோட்டா ராய் சௌத்ரியை பயன்படுத்தினோம். அவர் படத்தின் முக்கிய வில்லன் கிடையாது. பவர்ஃபுல்லான வில்லனை தேடி வருகிறோம் என்று கூறினார். அதையடுத்து விஜய்யின் வில்லன் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்தது.


இந்நிலையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷின் பெயர் அடிபடுகிறது. சமீபத்தில் நீல் நிதின் முகேஷ் சென்னை வந்து முருகதாஸை சந்தித்துவிட்டு சென்றார். அதன் பிறகு விஜய்பட வில்லன் நீல் நிதின் என்று உறுதிபட கூறுகின்றனர்.


இந்தப் படத்தில் விஜய் ஜோ‌டியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமுத்திரகனி இயக்கத்தில் - ´´கிட்ணா´´ எக்ஸ்க்ளுசிவ் தகவல்கள்!

சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.


 அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய சமுத்திரகனி, நிமிர்ந்து நில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


நிமிர்ந்து நில் படத்தை பார்த்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், ஐ.பி.எஸ். அதிகாரி வால்டர் தேவாரம் போன்றோர்கள் பாராட்டினார்கள். இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.


இந்த சந்தோஷத்துடனேயே எனது அடுத்தப்பட வேலையை ஆரம்பித்துவிட்டேன்.


எனது அடுத்தப்படத்தின் தலைப்பு ´´கிட்ணா´´. கிருஷ்ணா என்பதன் சுருக்கம் தான் கிட்ணா. இப்படத்தின் கதை 1970-களில் ஆரம்பித்து 2002-ல் முடிவது போன்று படமாக்கப்பட உள்ளது.


இப்படத்தில் நானே ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளேன்.


என்னுடன் அமலாபால் நடிக்கிறார்.


முதன்முறையாக அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.


அமலாபால் 1 வயது முதல் 45 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறார். நான் 35 வயது முதல் 65 வயது வரையிலான கேரக்டர்களில் நடிக்க இருக்கிறேன்.


படம் முழுக்க காடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. காடும் காடு சார்ந்த இடமும் தான் எனது படத்தின் கதைக்களம். நிச்சயம் இப்படம் அமலாபாலுக்கு நல்லதொரு பெயரை தரும் என்றார். 

Tuesday, 18 March 2014

தல – தளபதி ஷாக்! எல்லாம் போச்சி...?

நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், 2014ஆம் வருடம் தமிழ் சினிமாவிற்கு நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை.


பல பெரிய ஸ்டார்கள் கடந்த இரண்டு மாதங்களில் ரிலீஸ் ஆகியிருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்று, தயாரிப்பாளருக்கும், விநியோகிஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்த படங்கள் என்று பார்த்தால் இரண்டே இரண்டு படங்கள்தான் என்று அதிர்ச்சியுடன் கூறியுள்ளார். அந்த இரண்டு படங்களில் ஒன்று கோலி சோடா, மற்றொன்று தெகிடி.


ஆனால் ஊடகங்களில் விஜய் நடித்த ஜில்லாவும், அஜீத் நடித்த வீரம் படமும் பெரும் வெற்றி பெற்றதாக விளம்பரப்படுத்தின. இந்த வெற்றி உண்மையான வெற்றி அல்ல என்றும், அவருடைய பேச்சில் இருந்து தெரிய வருகிறது.


பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் பெற்ற வெற்றியை கூட தல – தளபதி படங்கள் பெறவில்லை என்பதுதான் உண்மை. மேலும் கோலிசோடா அதிகளவான தியேட்டர்களில் 50 நாட்கள் நல்ல வசூலுடன் ஓடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல தெகிடி படமும் முதல் வார கலெக்ஷனைவிட, இரண்டாவது வார கலெக்ஷன் அதிகமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

ஹன்சிகா பேசியதை நீங்க கேட்டீங்களா! இது மான் கராத்தே கூத்து!

சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்த மான் கராத்தே படத்தின் பாடல் வெளியீடு நேற்று சென்னை சத்யம் சினிமா திரையரங்கில் நடந்தது.


அந்த விழாவில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ், தேவா, ஷங்கர், பிரபு சாலமன், சூரி, கேயார், லதா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் ஹன்சிகா தமிழில் பேசி ஆடியன்ஸ் அனைவரையும் அசத்தினார். எல்லோருக்கும் வணக்கம் என்று தமிழில் தொடங்கிய ஹன்சிகா, இயக்குனரை பற்றி கூறும்போது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை போல இயக்குனர் சிறியவராக இருந்தாலும் பெரிய ஆள் என்று தெரிவித்தார்.


சிவகார்த்திகேயனை எஸ்.கே என்றுதான் தான் கூப்பிடுவதாகவும், அவருடன் நடித்ததில் மிகுந்த சந்தோஷம் என்றும் தெரிவித்தார்.


இறுதியில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் புகழ் சும்மா கிழி கிழின்னு இந்த படம் வந்துருக்கு என்று ஹன்சிகா சொல்லியபோது ஆடியன்ஸ் மத்தியில் பலத்த கரகோஷம் ஏற்பட்டது.

இவருதேன் அடுத்த சூப்பர் ஸ்டாராம்..?

ஒரு நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டுகிறார்கள் என்றால் அதனை ஒரு மேடை நாகரிகம் என்பார்கள். அது கொஞ்சம் அளவு கடந்து போனால், ஜால்ரா என்பார்கள். அதுவே உதாரணத்துடன் சொன்னால் உண்மை என்பார்கள்.

இன்றைக்கு நடந்த ‘மான் கராத்தே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கேயார், மற்றும் செயலாளர் டி.சிவா இருவருமே சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சிவாவே போதுமே சார் என்று சைகையால் கெஞ்சும் அளவுக்கு இவர்களது பேச்சு இருந்தது.

பாடலாசிரியர் அறிவுமதி பேசும்போது, “நான் குவைத்திற்கு சென்றிருக்கும்போது அங்கே ஒரு லேப்டாப்பில் தமிழ்ப் படம் ஓடிக் கொண்டிருந்தது. சுற்றிலும் குழந்தைகள் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் படத்தை நிறுத்துங்கள் என்றேன். ஆனால் குழந்தைகள் அனைவரும் அதனை எதிர்த்தார்கள். அதன் உளவியல் என்ன தெரியுமா..? இன்றைய தினத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரையும் கவர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்தான் என்பது எனக்குப் புரிந்தது..” என்றார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் டி.சிவா பேசும்போது, “சொல்லப் போறது மேடையா இருந்தாலும் மேடைக்காக சொல்லலை. அவருடைய தொடர்ச்சியான 5 படங்கள். அவை கொடுத்த வெற்றி.. அவர் தனது பெர்மார்மென்ஸை வளர்த்துக்கிட்டிருக்குற வேகம். அவரைச் சுற்றியிருக்கிற நண்பர்கள்.. சின்னக் குழந்தை முதல் பெரியவங்கவரைக்கும் அவருக்குக் கிடைச்சிருக்குற ஆடியன்ஸ்.. இதையெல்லாம் வைச்சு சொல்றேன்.. இன்றைய இளையதலைமுறையின் சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயன்தான்..” என்றார்.

கேயார் பேசும்போது, “இன்னிக்கு ஒரு நடிகரோட கால்ஷீட்டுக்கு எத்தனை கோடி வேண்ணாலும் தரேன்னு சொல்லிட்டு தயாரிப்பாளர்கள் ஓடி வர்றாங்கன்னா அது சிவகார்த்திகேயனுக்குத்தான்.. இவரோட அடுத்தடுத்த படங்கள் தொடர்ச்சியாக சூப்பர்ஹிட்டா ஓடி கோடிகள்ல லாபம் சம்பாதிச்சுக் கொடுத்திருப்பதை பார்த்தால் அடுத்த சூப்பர் ஸ்டார் இவர்தானோன்னு சொல்லத் தோணுது. முன்னாடில்லாம் எம்.ஜி.ஆர். படங்களுக்குத்தான் இப்படியொரு பேச்சு விநியோகஸ்தர்கள், தியேட்டர்கார்ர்கள் மத்தில இருக்கும். இன்னிக்கு சிவகார்த்திகேயன் படமா.. என்ன ஏதுன்னு கேக்காமலேயே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ரெடியா இருக்காங்க. அந்த அளவுக்கு இவரோட வளர்ச்சி இருக்கு..” என்றார்.

இப்படி தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் ரெண்டு பேருமே ஏற்றிவிட்டுப் போனார்கள். ஏற்கெனவே சிவகார்த்திகேயன் காசு விஷயத்தில் ரொம்ப கெட்டியாக இருக்கிறார் என்று திரையுலகில் பலமான பேச்சு.. சம்பளமும் வாங்கிக் கொண்டு லாபத்திலும் பங்கு கேட்கும்விதமாக ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார் என்று முணுமுணுக்கிறார்கள். வருவதை வாங்கிக் கொண்டு நடிக்கும் சாதாரண நடிகரல்ல அவர் என்பது அவரது பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது.

சிவகார்த்திகேயன் பேசும்போது, “என் படங்களை தைரியமா, நம்பி வந்து பார்க்கலாம். இந்தப் படத்துக்காக பெரிய பட்ஜெட்ல செலவு பண்ணியிருக்கோம். வியாபாரம் கண்டிப்பா பெருசாத்தான் இருக்கும். தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும். நான் ஆர்ட்டிஸ்டா..? ஸ்டாரா..? ஹீரோவா..? அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஸ்கிரீன்ல வரும்போது என்னைப் பார்த்தால் ரசிகர்கள் சந்தோஷப்படணும். இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன். இன்னைக்கு ஒரு எக்ஸ்ட்ரா தைரியமும் வந்திருக்கு. இவ்வளவு பேர் இருக்காங்க தட்டிக் கொடுக்கிறதுக்கு… இவ்வளவு பேர் இருக்கீங்க தூக்கி விடுறதுக்குன்னு நினைக்கும்போது, இன்னும் தைரியமான முயற்சிகளை பண்ணலாம்னு கான்பிடன்ஸ் இருக்கு. அதோடு தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணணும்னும் நினைக்கிறேன்…” என்றார்.

தியேட்டர்களில் பெரிய பட்ஜெட் படங்களின்போதும், பெரிய ஹீரோக்களின் பட ரிலீஸின்போதும் தியேட்டர் கட்டணங்கள் அளவு கடந்து உயர்த்தப்பட்டு ரசிகர்களின் பர்ஸ் காலியாகிறது என்கிற குற்றச்சாட்டு கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல்தான் நமது ஹீரோக்கள் கோடிகளை வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். இதே மனப்பான்மையோடு சிவகார்த்திகேயனும் இருப்பது இவரது பேச்சிலேயே தெரிகிறது..

“தியேட்டர்ல டிக்கட் ரேட் அதிகமாகும்போது, அப்படி கொடுத்துவந்து பார்க்கிறவங்களுக்கு… இந்தப் படத்துல ஒவ்வொண்ணும் புதுசா இருக்கும்.” என்பதெல்லாம் “எவ்வளவுன்னாலும் கொடுத்துப் பாருங்க.. படம் நல்லாயிருக்கும்”னு தனது வெள்ளந்தியான வார்த்தைகளால் ரசிகர்களின் பாக்கெட்டில் உரிமையோடு கையைவிட்டு பணத்தைச் சுடுகிறார் என்றுதான் தோன்றுகிறது..!

கேயார் தெரிவித்த மேடை நாகரிக வார்த்தைகளுக்கு ஏதாவது மறுப்பு தெரிவிப்பாரென்று பார்த்தால் மனிதர் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல், “இன்னைக்கு இந்த மேடையில இருக்கிறவங்க என்ன நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்காங்களோ, அதை எதிர்காலத்துல ஏற்படுத்தணும்னு ஆசைப்படறேன்…” என்றும் சொல்லியிருக்கிறார்.

வருத்தமாகத்தான் இருக்கிறது.. பணத்தினை மட்டுமே மையமாக வைத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கும் சூட்டப்படவில்லை என்பது இங்கே யாருக்கு புரியப் போகிறது..!?

என் மகன் லவ்வை அத்துவிட்டுட்டாரே: புலம்பிய டாடிக்கு இயக்குனர் செம டோஸ்!


என் மகன் காதலை இந்த ஆளு இப்படி அத்துவிட்டுட்டாரே என்று விரல் நடிகரின் தாடிக்கார டாடி தெரிவித்துள்ளாராம்.


விரல் வித்தை நடிகர் தனது காதலியான புஸு புஸு நடிகையை அண்மையில் பிரிந்தார். அவர் பாண்டி இயக்குநர் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலியான நயன நடிகை நடிக்கிறார். அவரை நடிக்க அழைத்து வந்ததே இயக்குனர் தான்.


இந்நிலையில் விரல் நடிகரின் தாடிக்கார டாடியும், மம்மியும் தங்கள் மகனின் காதல் முறிவுக்கு பாண்டி இயக்குனர் தான் காரணம் என்றும், அவர் நயனத்தை அழைத்து வந்து மகனின் காதலை அத்துவிட்டுவிட்டதாக சிலரிடம் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் காத்து வாக்கில் இயக்குனரின் காதுக்கு சென்றுள்ளது.


இதை கேட்ட இயக்குனர் தாடிக்கார டாடிக்கு போன் போட்டு செம டோஸ் விட்டாராம்.

உதயமாகிறது இளையராஜா ரசிகர் மன்றம், பத்திரிகையும் வரப்போகிறது!

இளையராஜாவின் பெயரில் இளையராஜா ரசிகர் மன்றம் தொடங்கயிருக்கிறது. இசைஞானி என்ற பெயரில் வாரப்பத்திரிகையும் வெளிவர உள்ளது.


இளையராஜாவின் கோடிக்கணக்கான ரசிகர்களில் பலர் தனிப்பட்ட முறையில் ஒன்றிணைந்து அவர் பெயரில் மன்றங்களும், பேரவையும் வைத்துள்ளனர். வருடந்தோறும் இளையராஜாவின் ரசிகர்கள் ஒன்றுகூடும் நிகழ்வும் தொடர்ந்து நடந்து வருகிறது.


ஆனால் இளையராஜாவின் சம்மதத்துடன் அவரது பெயரில் ரசிகர் மனற்ம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இளையராஜாவின் சம்மதத்தடன் தொடங்கப்படும் இந்த அமைப்பானது, இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, இயக்குனர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாகக் கொண்டு செயல்படும்.


அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் அமைப்பாக இளையராஜா ரசிகர் மன்றம் இருக்கும். இந்த மன்றத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு, சமூக முன்னேற்றத்துக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்கயிருக்கிறாராம் இளையராஜா.


மன்றம் குறித்த அறிவிப்பை ஏப்ரல் 5 மதுரையில் நடக்கயிருக்கும் ராஜாவின் சங்கீதத் திருநாள் இசை நிகழ்ச்சியின் போது வெளியிட உள்ளனர். அன்று இசைஞானி வார இதழையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

ஐயா சாமி...! ஆபாசமாக படமெடுக்கவே இல்லை..!

எனது மகளை ஆபாசமாக படமெடுத்தனர் என்று தயாரிப்பாளர் ரவிதேவன் மீது தரப்பட்ட புகாரை அவர் மறுத்துள்ளார்.


சென்னை சாலிக்கிராமம் காவரித் தெருவைச் சேர்ந்தவர் பாக்யஸ்ரீ. துணை நடிகை. அவரை விளம்பரப் படம் ஒன்றில் நடிக்க தயாரிப்பாளர் ரவிதேவன் ஒப்பந்தம் செய்தார். விளம்பரப் படத்தை இயக்கியவர் ராமநாதன்.


ஆண்மைவிருத்தி சம்பந்தப்பட்ட காமசூத்ரா மாத்திரை விளம்பரம் அது. மணப்பெண் கோலத்தில் இருக்கும் பாக்யஸ்ரீ முதலிரவு அறைக்குள் பாலுக்கு பதில் காமசூத்ரா மாத்திரைகள் அடங்கிய சிறிய பெட்டியுடன் செல்வதாக விளம்பரம் எடுக்கப்பட்டது.


படப்பிடிப்பு முடிந்த பிறகு, எனது மகளை வைத்து ஆபாசப் படம் எடுத்தனர் என்று பாக்யஸ்ரீயின் தாயார் நிர்மலா வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் இந்த புகாரை ரவிதேவன் மறுத்தார்.


சம்பந்தப்பட்ட விளம்பரத்தை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பித்தார். படத்தில் நடிக்க சம்மதித்து, படப்பிடிப்பு நடந்த பிறகு பிரச்சனை செய்வது சரியல்ல என்றவர், பணம் தந்தால் புகாரை வாபஸ் வாங்குவதாக போனில் முகம் தெரியாதவர்கள் மிரட்டுவதாகவும் கூறினார்.